Headlines

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியர்- மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை. இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு பொலிசில்…

Read More

இலங்கை- தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்- பல கட்சிகள் புறக்கணிப்பு

கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என…

Read More

20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது. 50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின்…

Read More

உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக…

Read More