
Category: உலக செய்திகள்

கனடாவில் முதல் முறையாக பல அமைப்புகளையும் தேசிய செயற்பாட்டாளர்களையும் இணைத்து மாவீரர் நாள் 2023
கனடாவில் முதன் முறையாக நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு ஒழுங்கமைத்து அதற்கான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் பல காலங்களாக எதிர்பார்கப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு உணர்வு பூர்வமாவும் எழுச்சியுடனும் கனடாவில் நடைபெறவுள்ளது என்பதனை மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான்,…

தமிழின அழிப்பு நினைவாலயம் வெளிநாட்டு தலையீட்டால் சவால் நிலையிலா..!
(அனைத்து தமிழர்களும் நிச்சயமாக படிக்கவேண்டும்.மக்களின் உணர்வுகளை சிதைக்கும் ஒரு சிலர்) 2021 ஜனவரி மாதம், தாயகத்தில், யாழ் பல்கலைக்கழகத்தில், அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவாலயம், இலங்கை அரசின் ஏவுதலில், அதன் இராணுவப் படைகளால் இடித்து அழிக்கப்பட்ட போது, எழுந்த எழுச்சியின் வடிவமாகவே கனடாவின் பிரம்ரன் நகரில், அதன் பிரதான பூங்காவில், தமிழின அழிப்பு நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான முனைப்புகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கு முழுமையான அனுசரணையை, கனடாவின் பிரதான நகர சபைகளில் ஒன்றான, பிரம்ரன் நகரசபை ஏகோபித்து வழங்க,…

கனடா – இந்தியா உறவு: திடீரென மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் புது டெல்லிக்கு இரகசிய தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும், இந்தியா உடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா எதிர்ப்பாத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது, கனடாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டிருக்கும் ட்ரூடோ, உலக அரங்கில், இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் நிலையில், அதனுடனான உறவின் முக்கியத்துவத்தை கனடா நன்கு அறிந்தே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டுதான் இந்தோ-பசிபிக் கூட்டுக்கொள்கையை வெளியிட்ட நிலையில், அதனுடான…

20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது. 50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின்…

உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக…