
பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகியிருந்ததுடன் தான் வகித்து வந்த பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். உயிர் அச்சுறுத்தல் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.குருந்தூர்மலை வழக்கில்…