தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகளும் போலித் தேசியவாதிகளும்,
இளங்கோ (எமது நிருபர்) கனடாவில் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் தமிழர் தேசியக்கொடி நாள், தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள், மாவீரர் நாள் நிகழ்வுகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளிலும், மக்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டில் இருந்து விலக வைக்கும் வேலைகளை தலைமேல் சுமந்து செயற்படுகின்றனர். அந்த வகையில் சில போலிகள் தாங்கள்தான் நாடு கடந்த அரசாங்கமென வேசம் போட்டுக் கொண்டு, நாடுகடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளிற்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் சிலரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அகவம், NCCT போன்ற அமைப்பினர் பிராம்டன் நகரில் அமைக்க படவுள்ள தமிழர் இனப் படுகொலைக்கானதூபியை தமது தலையீடுகளால் குழப்பம் ஏற்படுத்தி முறையாக திட்டமிட்ட படி உருவாக்காமல் சிறியளவில் உருவாக்க முயற்சி செய்கின்றமை பிராம்டன் நகர் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களை ஆய்வு செய்ததில் நாடு கடந்த அரசாங்க பிரதமரான திரு உருத்திரகுமாரன் அவர்களை பிரதமர் பொறுப்பினை அகற்றி தீருவோம் என கங்கணம் கட்டி செயற்படும் நாடுகடந்த அரசின் பிரதிநிதியான நிமால் தனக்கு ஆதரவாக சில நபர்களுடன் NCCT , அகவம்,உலகத்தமிழர் போன்ற அமைப்பின் வழிகாட்டலுடன் செயற்படுகின்றார். இவர் அமைப்பினால் நீக்கப்பட்ட சில கோமாளிகள் துணையுடன் செயற்பட்டு வருகிறார். அந்த வகையில் நாடுகடந்த அரசின் ஏனைய சில முக்கிய பிரதிநிதிகளை அகவம், NCCT அமைப்புடன் சந்திக்க அனுப்பினார். தற்போது அவர்களையும் அழைத்து பிராம்டன் நகரில் தமிழீழ தேசியக் கொடியேற்றத்தை நகர முதல்வருடன் செய்யும் போது பிராம்டன் மக்கள் கலந்து கொள்ளவில்லை. மக்களுக்கு இதன் பின்னணி புரிந்து ஒதுங்கியதாக கூறினார்கள். NCCT மற்றும் அகவம் போட்ட வலையில் கனடாவிற்கான நாடுகடந்த அரசின் பல பிரமுகர்கள் சிக்கியுள்ளனர் என்பதே நிதர்சனமாகும். மிக விரைவில் தூபியின் திட்ட வரைவை மாற்றியபடி தூபி உருவாகும் தவறான செயலுக்கு நாடு கடந்த அரசாங்க பிரதிநிதிகள் சேர்த்து சோரம் போவார்கள் என மக்கள் ஜயம் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழர் நினைவு அறக்கட்டளை அமைப்பினால், கனடாவில் உள்ள ஒன்டாறியோ மகாணத்தில் தமிழர் தேசியக்கொடியை அரசு மட்டங்களில் பிரகடனம் செய்வதற்காக பரவலாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை குழப்பும் முயற்சிகளை தேசத்துரோகிகள் மேற்கொண்ட போதிலும் அவற்றை முறியடித்து பல மாநகரசபைகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, முக்கிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ்த் தேசியக்கொடி பிரகடனமும் இதுவரை கிடைத்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இது வரை காலமும் கனடாவில் எந்த அமைப்பினாலும் அரச மட்டங்களில் முன்னெடுக்கப்படாத தமிழர் தேசியக்கொடி நாளை பல போராட்டத்தின் மத்தியிலும் பல மாநகரசபைகளில் தேசியக்கொடி நாளை பிரகடனம் செய்ய வைத்து, கனடாவில் தமிழர் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு தடையில்லை என்பதனை தமிழர் நினைவு அறக்கட்டளையினர் நிரூபித்துள்ளனர், இவர்களிற்கு மக்களும் தேசிய செயற்பாட்டாளர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மேலும் பல மக்கள் கருத்துக் கூறுகையில் கனடாவில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடையென மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி புலி நீக்க, தமிழ் கொடி நீக்க அரசியல் செய்து வந்த சில தமிழர் பிரதிநிதிகள் மற்றும் NCCT, அகவம், கனடா உலகத்தமிழர், CTC போன்ற அமைப்புகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்பட்டுள்ளது எனவும் இனி வரும் காலங்களிலாவது தேசிய நிகழ்வுகளில், பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக்கொடியை ஏற்று வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ஒன்டாரியோவில் உள்ள பிராம்டன் நகரில் தமிழர் நினைவு அறக்கட்டளை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர் தேசியக் கொடிக்கான பிரகடன நிகழ்வை சில கோமாளிகள் அமைப்பின் பெயர்களை மாற்றி குழப்பங்களை ஏற்படுத்தி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதும் தமிழர் நினைவு அறக் கட்டளையினர் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுப்புகளை செய்ததால் குழப்பங்கள் வராதவாறு தேசியக் கொடிக்கான பிரகடன நிகழ்வு நடைபெற்றதாக தமிழர் நினைவு அறக்கட்டளை பிரதிநிதிகள் கருத்தாக உள்ளது. பிராம்டன் மாநகராடசியில் தேசியக்கொடி பிரகடனத்திற்காக முற்று முழுதாக உழைத்த தமிழர் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சிலர் குழப்பங்களை தவிர்ப்பதற்காக இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையென எமது நிருபர் இளங்கோ ஆதாரங்களுடன் அனுப்பி வைத்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் கோமாளிகளாக NCCT அமைப்பை சேர்ந்த சிலரும் நாடு கடந்த அரசாங்கதை உடைப்பதற்கு முயற்சி செய்யும் நிமால், ஜெயம் , இளங்கோ போன்றோர் அடையாளபடுத்தப்பட்டுள்ளனர். வேறு சிலரை அடையாளப்படுத்துவதற்கான ஆதாரங்கள் சேகரிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.இங்கு நாம் முதலில் பார்க்கப்பட வேண்டிய விடயம் தமிழீழ தேசியக்கொடி, தமிழர்க்கான கொடி , தமிழ் இனத்திற்கான கொடி. இக் கொடிக்கான அங்கீகாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியென கூறி கனடா வாழ் தமிழர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தி தேசிய செயல்பாட்டை நீர்த்து போகச் செய்யும் வேலையை செய்து வந்தது NCCT, உலகத்தமிழர், அகவம் அமைப்பை சேர்ந்த கோமாளி ராஜாக்கள்தான். அதனை தமிழர் நினைவு அறக் கட்டளையினர் தமது செயல்பாட்டின் மூலம் இவர்களின் முகத்திரையை கிழித்து ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இவர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியுள்ளார்கள். NCCT, உலகத்தமிழர் மற்றும் அகவம் அமைப்பை சேர்ந்தவர்கள் புலி நீக்க அரசியல், கொடி நீக்க அரசியல் செய்வதற்காக தேசிய நிகழ்வுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை தவிர்த்து வந்தார்கள் அது மட்டுமின்றி உலகத்தமிழர் பத்திரிகையில் தேசியத்தலைவரின் சிந்தனைத் துளிகள், படங்கள், போராளிகளின் நினைவு பகிர்வுகள் அகற்றப்பட்டன. இவர்களின் தலையீடுகளை தவிர்ப்பதற்காக தமிழர் நினைவு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் மிகவும் இரகசியமாக வேலைத்திட்டங்களை நகர்த்தி தேசியக் கொடிக்கான பிரகடனத்தை அரசியல் மட்டங்களினூடாக செய்து முடித்தார்கள். தமிழர் நினைவு அறக்கட்டளையினரின் வேலைத்திட்டங்களினுடாக நகர முதல்வர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடாக செய்யப்பட்ட பிரகடனத்தை தாங்கள் செய்ததாக கூறி மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக பற்றிக் பிரவுணுடன் பேசி கொடியேற்ற நிகழ்வை நடத்தி தாங்கள்தான் தமிழீழ தேசியக் கொடிக்கான பிரகடனத்தை செய்ததாக காட்டுவதற்காக அந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களால் பல முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருத்த போதும் பிராம்டன் நகர முதல்வர் தமிழர் நினைவு அறக்கட்டளையினருக்கே அதற்கான கடிதத்தை அனுப்பிவைத்தார். ஏனெனில் இது ஒரு சட்ட ரீதியான ஆவணம், சரியான முறையில்தான் ஒப்படைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் தமிழர் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக பற்றிக் பிரவுண் மேற்க்கண்ட கொடியெற்ற நிகழ்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினர் பயன்படுத்தி அந் நிகழ்வில் தம்முடன் வேறு சில கோமாளிகளையும் சேர்த்து பிரசண்ணமாகி அந்த ஒழுங்கை செய்திருந்தனர். அங்கே பார்க்கும்போது மாநகர முதல்வர் அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போதே எட்டு அடி உயரத்திற்கு மேலாக கொடி பறந்து கொண்டிருந்தது. கொடியை ஏற்றுவதற்கு முன்னர் பறக்க விடக் கூடாது கொடியை மடித்துஒரு தட்டில் வைத்திருக்க வேண்டுமென்பது முதல் விதி கொடி ஏற்றும் பொழுது கொடியை தட்டில் ஒருவர் தாங்கிக் கொண்டு கொடி ஏறிக்கொண்டிருக்கும் போது தட்டை தாங்கிக் கொண்டிருப்பவர் கொடியை மெதுவாக பறக்க விட வேண்டுமென்பது மற்றைய விதி, கொடி ஏற்றும் போது அதற்கான பாடல் ஒலி பரப்பப்பட்டு அதற்கான மரியாதையுடன் மெது மெதுவாக முனைவரை கொண்டு செல்லல் வேண்டும், கொடியேற்ற பாடல் முடியும்வரை எல்லோரும் அமைதியாக ஒரே இடத்தில் நின்று வணக்கம் செழுத்த வேண்டும். ஏனெனில் இக் கொடியானது பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள், நாட்டுப் பற்றாளர்கள், மாமனிதர்கள் , தேசப்பற்றாளர்களென பல்லாயிரக்கணக்கான மக்களின் குருதியாலும் ,உணர்வாலும், தியாகத்தாலும், ஈகத்தாலும் நிலைத்து நிக்கும் கொடியானது, இதனை அவமதிக்கும் வகையில் கொடி ஏற்றும்பொழுது அங்கு நிற்பவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள், இங்கே முதலில் நிமால் என்பவர் கை தட்டி ஆரம்பித்து வைக்க அதனைத் தொடர்ந்து இளங்கோ, குமுதினி, ஜெயம் மற்றும் ஒருசிலரும் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இதனை பார்க்கும் போது இவர்களிற்க்கு கொடிப்பயன் பாடு மற்றும் கொடியேற்றல் பற்றிய தெளிவு இல்லாதவர்களாகவே இந்த தேசியவாதிகள் உள்ளார்கள், இதில் இளங்கோ என்பவர் தன்னை தான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறையில் இருந்ததாக கூறிவருகிறார், இவரை பார்க்கும்போது அன்னிய சக்திகளிற்குத்தான் முகவராகவோ அல்லது அவர்களிறக்கு கீழ்மட்ட முகவராக இருக்கலாமென்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள், இவர் போராளியாக இருந்திருந்தால் ஒரே இடத்தில் நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செழுத்த தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் அமைதியாக நின்றிருக்க வேண்டும். கொடிப்பாட்டு முடியும் முன்னரே கை தட்டி ஆரவாரம் செய்து கட்டி தழுவுகிறார்கள். இதனை கனடா தேசியக் கொடி ஏற்றும் போது செய்வார்களா? எந்த நாட்டு கொடி ஏற்றும் போதும் கொடிப்பாடல் முடியும்வரை ஆசையாது நின்று அதற்கான மரியாதை செலுத்துவதுதான் மரபு. அத்துடன் கொடிக் கம்பத்தில் சாய்ந்து நிற்க்கக்கூடாது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் உள்ள போது அறிவே இல்லாத இந்த அரை குறை மண்டைகளின் குறைகளையும் கோமாளித்தனத்தை மக்களிற்கு காட்டுவதற்காகவே NCCT, உலகத்தமிழர், மற்றும் அகவத்தினர் சேர்ந்து கொடி ஏற்றல் நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளார்கள்.