இளங்கோ
கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள். கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்கள் செய்ததோடு மாவீரர்கள் படங்களை பத்திரிகையில் பிரசுரிப்பதையும் தவிர்த்து வருகிறார்கள், அது மட்டுமின்றி மாவீரர் நாள் பிரசுரங்களிளும் தேசிய தலைவரின் படங்களை நீக்கியுள்ளார்கள், இப்பத்திரிகையின் உரிமையாளர் விடுதலைப்புலிகளின் முதலீடுகளையும் மக்களினால் தேசிய செயல்பாடுகளிற்காக வழங்கப்பட்ட நிதிகளையும் ஏமாற்றி வைத்திருக்கும் உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர் கமல் என்பது குறிப்பிடதக்கது, இதுமட்டுமா? தேசத்திற்காக ஆகுதியாகிய மாவீரர்களை வைத்து மாவீரர் தினத்திற்க்கென நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கனடா அரசாங்கத்தால் பத்திரிகை பிரசுரங்களிற்கான முழுச் செலவிற்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது, விளம்பரங்களில் வசூல் செய்யப்படும் பணத்தையும் தம் வசப்படுத்தி வைத்திருக்கும் கமல் மாவீரர்களின் குடும்பங்களிடம் நிதி கேட்பதை விட்டு தம்வசமாக்கி வைத்துள்ள பணத்தில் மாவீரர்களுக்காக செலவு செய்தால் என்ன என்ற கேள்வியும் மக்களால் கேட்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. மேலும் எமது செய்தியாளர் தெரிவிக்கையில். இதுபோன்ற செயல்பாடுகளில் அகவம், NCCT, அறிவகம் போன்ற அமைப்புகளும் மக்கள்முன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கென மக்களிடம் பெரும் தொகை நிதி சேகரித்து பல வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்து கோடிகளில் புறலும் இவர்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்ட வாங்கப்பட்ட நிலம் என அடையாளப்படுத்ப்பட்ட இடத்தில் களியாட்ட நிகழ்விற்கான கட்டடங்கள், திரையரங்குகள் கட்டுவதற்கான முயற்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலத்தின் சொந்தக்காரர் யார்? மாநகரசபையால் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விகளும் உள்ளது, இதுபற்றி கேள்வி கேட்பவர்கள் மீது காவல்துறையிடம் பொய்யான முறைப்பாடு செய்வதோடு மிரட்டப்படுவதாகவும் கூறப்புடுகிறது, இச் செயல்பாடுகளில் விடுதலைப்புலிகளின் முதலீடுகளையும் மக்களின் பணத்தையும் கையகப்படுத்தியிருக்கும் உலகத்தமிழர் கமல், உலகத்தமிழர் காந்தன் ,தொழிலதிபர் மெல்வின், ,உலகத்தமிழர் தமிழ் ( விடுதலைப் புலிகள் அமைப்பாள் நிதி கையாள்வதற்காக கனடாவிற்கு அனுப்பப்பட்டவர், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளரும் பல வீடு விற்பனை முகவர்களை பினாமியாக வைத்து வீட்டு வியாபாரம் செய்பவர் ), உலகத்தமிழர் அசோகன்( திரையரங்கு உரிமையாளர்), ஏசியன் புடவைகடை உரிமையாளர் அதிமருகன் மற்றும் NCCT மோகன் ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினரே அன்னிய சக்திகளோடு கைகோர்த்து கனடாவில் பிராம்டன் மாநகரசபையால் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் அடையளமாக அனுமதி வழங்கப்பட்டு கட்ட இருந்த நினைவு தூபி கட்டுவதற்க்கும் தடையாக உள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.