பாகம் 02
இவர்கள் எப்பொழுது புனிதர் ஆனார்கள்?
CTC இன் ஊடக சந்திப்பில் நடந்த குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரண சூத்திரதாரிகளாக விளங்குபவர்கள் NCCT அமைப்பினரே!
CTC இன் ஊடக சந்திப்பிற்கு முன்னர், முன்னாள் உலகத்தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் இவர்களின் பினாமி அமைப்பான NCCT உறுப்பினர்களிற்கும் இடையில் நடந்த இரகசிய கூட்டத்தில் CTC அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என முடிவுகள் எட்டப்பட்டு, சில ஈனப்பிறவிகளால் (NCCT ) ஐ போன் ஊடகவியலாளர்கள், மற்றும் கையூட்டு ஊடகவியலாளர்கள் என ஊடக சந்திப்பிற்கு அனுப்பப்பட்டு குழப்பங்கள் ஏறப்படுத்தப்பட்டதாக அறியப்படுகின்றது.
யார் இந்த NCCT ? இவர்கள் எப்பொழுது புனிதர்கள் ஆனார்கள்? மேலும் அனைத்துலக TCC யுடன் இணக்கப்பாடு இல்லாமல் கனடாவில் தனி ராஜாங்கம்!
CTC அமைப்பினர் இலங்கை அரசாங்கத்தின் காலை கழுவுவதற்கு முன்னரே NCCT யினர் இலங்கை, இந்திய அரசாங்கத்தின் கால்களை கழுவியும், நக்கவும் தொடங்கி விட்டார்கள்! இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புக்களின் இரட்டை முகவர்களாக இருக்கும் இவர்களிற்கு, (NCCT அமைப்புக்கும்) கறுப்பு தடைப் பட்டியலில் பெயர் உள்ளது, ஆனால் இவர்கள் இலங்கை இந்தியா போவதற்கு தடையில்லை. தமிழர்களையும் உலகையும் ஏமாற்றுவதற்காகவே தடைப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட நாடகம்.
வெளியில் தேசியவாதிகளாக தங்களை காட்டிக்கொண்டு புலி நீக்க அரசியலைத்தான் NCCT யினர் செய்கின்றார்கள். உங்களிற்காக சில உதாரணங்கள்.
இவர்களினால் முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய நிகழ்வுகளில் தமிழரின் தேசியக்கொடி ஏற்றப்படுவதில்லை. இவர்களின் நிகழ்வுகளிற்கு தமிழீழத் தேசியக்கொடி எடுத்துச்செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம்.
அதே நேரம் சர்ச்சைக்குரிய இடங்களில் தமிழீழத் தேசியக்கொடியை தூக்கிச்செல்வார்கள், இதனால் தேசியக்கொடிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு, கொடியை தடை செய்வதற்கான முன் முயற்சியாகவும் இவ்வாறான செயல்களை பார்க்கலாம். இவர்கள் நடத்தும் நிகழ்வுகளிற்கு கொடி கொண்டு போக தடை, ஆனால் மற்றவர்களின் நிகழ்வை குழப்புவதற்கு இவர்கள் தமிழரின் தேசியக்கொடியை கையில் தூக்குவார்கள்.
தேசியக்கொடி கனடாவில் தடையென புரளி விட்ட நரிகள்.
பிராம்டன் தூபி விடயம்.
இத்தூபி கட்டுவதற்கான வேலைத்திட்டம் முதன்முதலாக பிராம்டன் முதியோர் சங்கம், பிராம்டன் தமிழ்ச்சங்கம் ஆகியோருடன் TGMO சேர்ந்து வேலைத்திட்டங்களை ஆரம்பித்து, மாநகர முதல்வர் பற்றிக் பிரவுனின் முயற்சியால் பிராம்டன் மாநகரசபையும் இந்த கட்டுமானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய வேளை, பிராம்டன் தமிழ்சங்கத் தலைவருக்கு கையூட்டு வழங்கி, அவர் ஊடாக சில தடையை ஏற்படுத்தினார்கள்.
இதனை கேட்டால் “தூபி தாமரை மொட்டுப் போல” உள்ளது என்றார்கள்.பல நாடுகளில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் கட்டடக் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட வடிவத்திற்கு குருட்டு நியாயம் கூறி அதை தடுத்து நிறுத்தி வைத்தார்கள். அதன் பின்னர் சில தேசிய செயற்பாட்டாளர்கள் கொடுத்த அழுத்தத்தினால், புதிய வடிவத்தில் தூபி கட்டுவதற்கு முடிவு எட்டப்பட்டு NCCT, பிராம்டன் முதியோர் சங்கம், பிராம்டன் தமிழ் சங்கம் மற்றும் கனடா தமிழ் மக்கள் இணைந்து உருவானதுதான் பிராம்டன் நினைவுத்தூபி. தற்பொழுது “தூபியில் பொறிக்கப்பட்டிருந்த அனுசரணை அமைப்புக்களின் பெயர்களை ” இரவோடு இரவாக அகற்றி, NCCT யினால் கட்டப்பட்டதாக கல்வெட்டு புதிதாக பதித்துள்ளார்கள். இதை விட வேறு என்ன மொள்ளமாரித்தனம் தேவை ?
அது மட்டும் இல்லாமல் தூபியில் உள்ள மின்குமிழ்கள், பூச் சாடிகள் உடைப்பின் பின்னாலும் NCCT உடன் சேர்ந்து இயங்கும் இரட்டை முகவர்களே இருந்துள்ளார்கள். இவர்கள மேல் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மக்களை ஏமாற்றுவதற்கான இவர்களின் நாடகங்களில் இதுவும் ஒன்று.
கனடாவில் முதன்முதலாக தமிழீழத் தேசியக்கொடி தமிழர் நினைவு அறக்கட்டளையின் முயற்சியினால் பிராம்டன் மாநகர சபையில் மதிப்பிற்குரிய மாநகர முதல்வர் பற்றிக்கினால் கடந்த வருடம் ஏற்றப்பட்டிருந்தது. இருந்தும் பிராம்டன் நகரில் அமைந்த நினைவுத்தூபி திறப்புவிழாவின் போது தேசியக்கொடி ஏற்றுவதற்கு NCCT மற்றும் முன்னாள் உலகத்தமிழ் அமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
யாருக்கு வெள்ளை அடிப்பதற்காக இந்த நாடகங்கள்? இன்னும் பல நாடகங்கள் இது போன்று உள்ளது.
*NCCT மற்றும் WTM அமைப்பினருக்கு எந்த தகுதியும் இல்லை CTC ஐ கேள்வி கேட்பதற்கு. CTC கெட்டவர்களென்றால் இவர்கள் கேடு கெட்டவர்கள்!!!
*********************
முன்னாள் மாற்று இயக்கத்தினர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களை முன்னிறுத்தியதன் பின்னால் ஒழிந்திருக்கும் முன்னாள் உலகத்தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், முன்னால் போராளிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் சிலர், இரட்டை முகவர்கள், தமிழரின் ஒற்றுமையை உடைக்கும் சிறு குழுக்களின்
திருவிளையாடல்கள் தொடரும் பாகம் 03,04,05,06 இல்……