கனடா ஊடகம்.
கனடாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கவர்(ஊடக கையூட்டு) கொடுக்காததால் கலாட்டா!!!
பாகம் 1.
கடந்த 16.07.2025 அன்று CTC ( கனடியத் தமிழர் பேரவை ) யினரால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் ஐ போன் ஊடகவியலாளர்கள், ஊடக கையூட்டு ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக அறவழியில் பயணிக்கும் ஊடகவியலாளர்கள் , என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இச்சந்திப்பில் ஊடக கையூட்டு ஊடகவியலாளர்களிற்கு கனடியத் தமிழர் பேரவையினர் ( CTC ) கையூட்டு வழங்காததால் கூட்டத்தில் கோபமுற்ற கையூட்டு ஊடகவியலாளர்கள் அங்கு கலகம் உண்டு பண்ணினர். ஊடக அறவழியில் பயணிக்கும் ஊடக நண்பர்கள் சிலர் அமைதியாக இருந்தனர், ஆனால் கையூட்டு வாங்கி ஊடகம் என (நட்சத்திர கலைவிழா) நடத்தும் சிலரால் கனடாவில் இயங்கும் தமிழ் ஊடகத்துறைக்கே தலைகுனிவு ஏற்பட்டது.
கனடாவாழ் தமிழர்கள் பிரதிநிதி என்று இவர்களிற்கு யார் அந்த அனுமதியை வழங்கினார்கள்? தமிழ் மக்களின் அனுமதியின்றி CTC தமிழ் மக்கள சார்பாக செயல்படுகின்றது என்றால், இவர்களும் ( கையூட்டு ஊடகவியலாளர்கள் ) அதைத்தானே செய்கின்றார்கள். இவ்வளவு கதைக்கின்ற இந்த சபை குழப்பிகள் தமிழ் மக்களிற்காக, தமிழ் தேசியத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள். இந்தியாவில் இருந்து ஆட்டக்காரிகளையும் பாட்டுக்காரர்களையும் கூட்டி வந்து குத்தாட்டம் போடுறதும் “மாமா” வேலை பார்க்கிறதையும் தவிர! இவர்களெல்லாம் எப்போது புனிதர் ஆகினார்கள்? இவர்களின் நோக்கம் CTC ஐ சீர்செய்வதில்லை, “தமிழின விரோதிகளின் வீசும் எலும்புக்கு” ஆசைப்பட்டு CTC ஐ இல்லாமல் செய்வதே. அதற்காக CTC நிர்வாக உறுப்பினர்களும் புனிதர்கள் இல்லை. இந்த புனிதர்களை இயக்குபவர்களின் வரலாறு பாகம் இரண்டில் தொடரும்….