பாஸ்க்கர் – U.K
13.07.25
விடுதலைப் புலிகளின் தற்காலிக தலைவராக தன்னைத் தானே அறிவித்த முல்லை மதி என அழைக்கப்படும் சின்னவன் கடுமையான மன அழுத்தம் காரணமாக 11.07. 2025 அன்று இரவு மார்க்கம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு12.07.2025 காலையில் வீடு திரும்பி உள்ளார்.
கடந்த பல மாதங்களாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான முல்லை மதி பல பதிவுகளை ஊடகங்களில் பதிவிட்டு வந்தார்.
காலையில் தன்னை முன்னாள் போராளி என்பார் மதியம் தன்னை மறைமுகப் போராளி என்பர் மாலையில் தான் பொட்டம்மான், தேசியத் தலைவர் அவர்களினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக கூறுவார், இரவானதும் தான் போராளியே இல்லை என்பார்.
இது இவ்வாறிருக்க 2009 ஆம் ஆண்டு இறுதி வரை தன்னுடன் நேரடி தொடர்பில் பல பொறுப்பாளர்கள் இருந்தார்கள் என்று கூறுவார்.
தற்பொழுது தற்காலிகத் தேசிய தலைவர் என முல்லைமதியால் எழுதப்பட்டது என ஒரு கடிதம் “வட்சப்” செயலி ஊடாக உலக உலா வருகின்றது. இக் கடிதத்தின் பிரதான நோக்கம் வெளியிடப்பட்ட பின்னர், பலத்த எதிர்ப்புக்களும் அச்சுறுத்தல்களும் இவருக்கு தொலைபேசி மற்றும் நேரடியாக விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் தனக்கும் அந்தக் கடிதத்திற்கும் தொடர்பில்லையென இவர் கூறி வருகின்றார். இது பற்றி முல்லைமதியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இக்கடிதம் பற்றி தனக்கு தெரியாது, தன் வளர்ச்சி பிடிக்காத விசமிகளின் வேலை என்றார். மூச்சு விட்டாலே 300 தரம் மீடியாக்களில் ஏறும் முல்லை மதி இதற்கு ஏன் மறுப்பு தெரிவித்து ஊடகங்களில் “தன்னிலை விளக்கம்” கொடுக்கவில்லை?
சில மாதங்களிற்கு முன்னர் முல்லைமதி தன்னை தேசியத் தலைவராக ஏற்கும்படி பல முன்னாள் போராளிகளிடம் கேட்டிருந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக அமைதியாக இருந்த முல்லைமதி மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளார்.
யார் இந்த முல்லை மதி? இவருக்கு உள்ள தகமைகள் என்ன?
1968 காலப்பதியில் பிறந்த இவரின், 17, 18 வயதில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனை தலைவராக ஏற்று முல்லத்தீவு மாவட்டங்களில் நோட்டீஸ் போட்டுக்கொண்டு திரிந்து, பின் நாட்களில் பிளாட் இயக்கத்தினருடன் இணைந்து நோட்டடீஸ் ஒட்டி திரிந்தார். விடுதலைப்புலிகள் சார்ந்த எந்தவித செயற்பாடுகளில் இருக்கவில்லை. தற்போது அதற்கும் நல்ல விளக்கம் கொடுக்கின்றார்.
1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் மாற்று இயக்கங்களை தடை செய்யப்பட்டவேளை, இவர் கைது செய்யப்பட்டு விடுதலைப் புலிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் பாரதூரமான எந்த வேலையும் செய்யவில்லை என்றும் எதுவிதமான ஆயுதப் பயிற்சியும் எடுக்கவில்லை என்பதனாலும், இவர் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
பின் நாட்களில் செஞ்சோற்றுக் கடனுக்காக மாத்தையாவை தனது தலைவராக ஏற்றார்.மக்கள் முன்னணி அரசியல் செயற்பாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பின்னர் திருமணம் செய்து இந்தியா சென்று அங்கிருந்து கனடா நாட்டிற்கு சென்றார்.
தற்போது பல “கம்பி கட்டும்” கதைகளை அவிழ்த்து வருவதோடு, மக்கள் முன்னணியை உருவாக்கும் முயற்சி தோற்ற பின் தற்காலிக தலைவராக மாற்றம் பெற்ற பின்னணியில் அனுர அரசின் தேசிய மக்கள் சக்தி உள்ளது.
மேலும் இலங்கை, இந்திய புலனாய்வுகளுடன் இயங்கும் மாற்று தேசிய விரோத இயக்கங்களின் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் அறிவுறுத்தலின்படி புலம் பெயர் தேசங்களில் அமைப்புக்களிடையே உடைவுகளை ஏற்படுத்தும் வேலையை செவ்வனே செய்து வந்தார். இவற்றை செய்து கொண்டிருக்கின்ற முல்லைமதி முன்னாள் போராளிகள் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து பல செய்திகளை எடுத்து பொதுத்தளங்களில் தனக்கு தெரிந்ததாக போட்டு, பல குழப்பங்களை ஏற்படுத்துவதும் இவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலையாகும். இவர் தனது பெயர்களை முல்லை மதி, முல்லை தாசன், சின்னவன், முகிலன், தியாகன் என்றும் வேறு சில பெயர்களிலும் எல்லாம் தளங்களில் எழுதி குழப்பங்களை ஏற்படுத்துவதே இவரின் முக்கிய வேலையாகும். தற்பொழுது இலங்கை NPP அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தன்னை ஒரு புலியாக காட்டி சில வேலை திட்டங்களில் இறங்கி உள்ளதாகவும்
தகவல்கள் கூறுகின்றன.
மாத்தையாவின் தேசத்துரோகச் செயல்களை விடுதலைப் புலிகளால் இனங்காணப்பட்டு அவருக்கு விடுதலைப் புலிகளால் அதியுயர் “சாவொறுப்பு” தண்டனை வழங்கப்பட்டது. மாத்தையாவிற்கு விடுதலைப் புலிகளால் தண்டனை வழங்கப்பட்டவேளை இவர் தேசிய தலைவரை அவன் ,இவன் என்றும் தவறு செய்கின்றார் என்றும் புலம்பி திரிந்தவர் இன்று தன்னை தற்காலிக தேசிய தலைவராக தானே முடி சூட்டிக்கொண்டு பைத்தியக்காரன் போல் திரிவதாக செய்திகள் கூறுகின்றன. இவர் போன்ற பல பைத்தியங்கள் புலம்பெயர் தேசங்களில் தலைமைக்கும், பெட்டிக்கும் போட்டி போட்டு இனம் அழிந்தாலும் தம்மை தாமே தலைவர் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களே இவர் போன்ற பைத்தியங்களை இனம் கண்டு இவர்களுக்கான சிகிச்சைக்காக உதவி செய்யுங்கள்
விரைவில் மற்றைய பைத்தியங்களின் வரலாறு தொடரும்…