தாயக செயலணி என்ற பெயரில் கொள்ளையர்கள்!!!

27.06.2025

 

தாயக செயலணியும் செருப்பும்.

கடந்த யூன் மாதம் 23,24,25 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை வருகையை முன்னிட்டு, தாயகத்தில் தமிழ் இனமாக தாயகத்தில் உள்ள பல அமைப்புக்கள்,புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும், பல கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தாயகத்தில் பேரெழுச்சியாக மக்கள் இணைந்து பாரிய அளவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல அமைப்புக்கள் திரை மறைவில் செயல்பட்டதுடன், பலர் நிதி உதவிகளையும் செய்திருந்தனர். இப் போராட்டத்தின் போது ஐக்கிய்நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் செம்மணி விவகாரம் தொடங்கி , காணாமல் போனவர்கள், மத ஆக்கிரமிப்பு, பயங்கரவாத சட்டத்தின் பாதிப்பால் வரையறையற்ற கைதுகள், அரசியல் கைதிகள் விவகாரம், முதல் நில அபகரிப்பு வரை மக்களுடன், அமைப்பின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் தொடக்கம் நேரடியாக கேட்டு தெரிந்ததுடன், இவ் விவகாரங்கள் பற்றி அரசிடம் கேள்வி எழுப்பியதாக அறியப்படுகின்றது.

அடுத்த கட்டமாக மனித உரிமைகள் ஆணையாளரின் நகர்வுகளை காலந்தான் பதில் கூறும்.

இது இவ்வாறு இருக்க புலம் பெயர் தேசங்களில் கள்ளக் கோழி பிடிக்கும் “தாயக செயலணி” மக்களையும் அமைப்புக்களையும் குழப்புப் விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவர்களின் நோக்கம் மக்களின் ஒற்றுமையை  உடைப்பதோடு, மக்களின் உணர்ச்சிகளை தொட்டு நிதிக் கொள்ளையில் ஈடுபடுவதே!!!.

7

 

இப் போராட்ட காலங்களில் மக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் தாயக செயலணி என மாற்றங்கள் செய்து குழப்பங்களை உண்டு பண்ண முயற்சிகள் செய்தும் மக்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது. மேலும் தாயகத்தில் செயற்பட்ட “மக்கள் செயல்” என்ற அமைப்பை உடைப்பதும் இதன் நோக்கம் இதற்காக ஜொனி, லிங்கராசா இருவரும் அவுஸ்ரேலியாவில் இருந்து அறிக்கை விட்டு செயல்பட்டனர். இவர்களின் வழிகாட்டலில் செல்வகுமார் என்பவரை களம் இறக்கி செயல்பட்டனர்.

கடந்த காலங்களில் காணாமல் போன பெற்றோர்களின் சங்கத்தின் ஒற்றுமையை குலைத்து உடைத்த பின்னணியில் அவுஸ்ரேலிய லிங்கராசா, ஜொனி மற்றும் உலகத் தமிழ் வரலாற்றுமையத்தில் உள்ள இலங்கை ராணுவப் புலனாய்வின் கையாளனாக நளனும் இருந்தார்.

இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்களாக தங்களை காட்டி பிரச்சாரம் செய்தால் போராட்டங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யுமென இவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகின்றது. தாயக செயலணியில் செயல்படுபவர்களில் பலர் துரோகிகளான கருணா, டக்ளசுடன் மற்றும் இலங்கை இராணுவ புலனாய்வுகளுடன் தொடர்பில் இருப்பவர்களென உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் வேலை காலத்திற்கு காலம் மக்களை ஏமாற்றி புலம்பெயர் தேசங்களில் பணம் பறிப்பதே.

இவர்களின் தாயக செயல்பாடு பற்றி கிளிநொச்சி, முல்லை, மன்னார், வன்னி மாவட்டங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது. போராட்டத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கற்கள் போத்தல்கள வீசி விரட்டினோம். இனிவரும் காலங்களில் “தாயக செயலணி” என்று வந்தால் செருப்புக்களும் பேசும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

தாயக செயலணி என்ற பெயரில் கொள்ளையர்கள் திரிகின்றார்கள். உலகத் தமிழ் மக்களை அவதானமாக இருக்கும்படி ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.

“மக்கள் செயல்” அமைப்பை நாம் வேண்டிக் கேட்டுக் கொள்வது இவ்வாறான “தாயகச்செயலணி” போலி விளம்பர, அறிக்கையையில் மனம் சோராமல் தொடர்ந்து எமது உரிமைகள், நீதியை மீட்க அறத்துடன் ஜனநாயக வழியாக போராடுங்கள் புலம்பெயர் மக்களும், அமைப்புக்களும் என்றும் உங்களுடன் கரம் கோர்க்கும்.
மீண்டும் வருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *