ஜெர்மன் நாட்டில் தமிழ்நெட் ஜெயாவின் வழிநடத்தலில் நேசக்கரம் சாந்தி, துளசிச்செல்வனின் எழுத்தாற்றலும் இணைந்து பிரபாகரன் சாள்ஸ் என்னும் புத்தக வெளியீட்டினை ஜேர்மனியில் செய்து இருந்தார்கள்.
இப்புத்தகமும் ஏற்கனவே, சாள்சுடன் பயணித்த முன்னாள் பத்துப் போராளிகள் தந்த செய்திகளை ஆதாரமாக வைத்து இப்புத்தகம் எழுதியதாக இந்தியாவுக்கு செம்படிக்கும் கூட்டம் இந்திய “தடம்” யூரிப் தளத்தில் கூறினார்கள்.
அந்த தடம் செய்தி தளத்தில் வரும் செய்தி பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள்.
முன்னர் புத்தகங்களில் வந்தது போல் இப் புத்தகமும் பல வரலாற்று திரிபுகளுடன், வெளிவந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இப் புத்தகத்தில் ஆரம்பத்தில் நன்றாக எழுதி பின்னர் பல “அம்புலி மாமா” கதைகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பல திரிபுகள் இடைச் செருகல் செய்யப்பட்டுள்ளது.
இப்புத்தகமானது சாலள்சுடன் நேரடியாக களங்களில் நின்ற பல போராளிகள் இருந்தும்,
அவரை வளரும், பருவத்தில் இருந்து பார்த்த, பாதுகாத்த போராளிகள் இருந்தும், அவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் போராட்டத்திலேயே நிற்காத நேசக்கரம் சாந்தி அவர் கேட்ட அம்புலிமாமா கதைகளை, அவருடன் சேர்த்து எழுத துளசிச்செல்வனை பயன்படுத்தி, எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
திவாகர்,நிலா நிழலாக இருந்தாலும், உண்மையில் இப்பத்தகத்தின் வெளியிட்டில் சம்பந்தப்பட்ட யாருமே போராட்டத்தில் சாள்சுடன் நிற்காதவர்களும் போராட்ட காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டவர்களும், இறுதி யுத்தத்தில் சாள்சின் யுத்த நடவடிக்கைகளின் தோல்விகளின் சூத்திரதாரிகளும்,
யுத்தத்திற்கு முகம் கொடுக்காமல் ஒளித்து ஒடிவந்தவர்களுமே.
இன்றைக்கு தமிழீழத் தேசியத் தலைவரின் மகன் சாள்ஸ் பற்றி கதை எழுதி “பணம் பார்க்க” இவர்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?
இவர்களின் பின்னணியில் இந்தியப் புலனாய்வுகள் செயற்படுவதாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை புலனாய்வாளர்கள் பல வழிகளில் செய்து மக்களை குழப்பத்தில் வைத்திருக்க முயற்சி செய்தும், மக்களின் பலத்த எதிர்ப்பினால் பலன் அளிக்காததால், இன்றைக்கு போராட்டத்தில் நின்ற தளபதிமாருக்கு புத்தக வெளியீடு செய்து வீரவணக்கம் செய்து எதிர்வரும் காலங்களில் தாங்கள் பெரிய தேசியவாதிகளாக காட்டி, தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செய்வதற்காக புலனாய்வாளர்களுடன் சில தேசத்துரோகிகளும் சேர்ந்து செயற்படுவதாகவே இவ்வாறான “புத்தக வேளியீட்டு முன்னோட்டம்” பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் டென்மார்க்கில் “மனோகரன் கார்த்திக்” அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தலைவருக்கான வீர வணக்க நிகழ்வில் கலந்து கொண்ட பலர் இன்றைக்கு வேறு ஒரு குழுவினருடன் சேர்ந்து இப்புத்தக வெளியிட்டை செய்துள்ளதுடன், ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திக் மனோகரனுடன் செயற்பட்டவர்கள் யார் என ஏற்கனவே அடையாளப் படுத்தப்பட்டனர். இன்று இவர்கள் வேறு ஒரு வடிவத்தில் மக்களை குழப்புவதற்காக வேடமிட்டுள்ளனர். மக்களே, தமிழீழத்திற்காக உண்மையில் அக்கறை கொள்ளும் அமைப்புக்களே விழிப்புடன் செயற்பட்டு எமது போரியல் வரலாறுகளையும், தேசியத் தலைவரின் வரலாற்றினையும், மாற்ற முயற்சிக்கும் புலனாய்வாளர்களிற்கும், அவர்களுக்கு துணை போகும் துரோகிகளையும், இனம் கண்டு எமது தேசியச் செயற்பாட்டில் இருந்து இவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள். இப் புத்தக வெளியீட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் பலருடைய கடந்த கால செயல்பாடுகளும் இவர்கள் செய்த துரோகங்களும் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். இவர்களின் நோக்கம் தேசிய செயற்பாட்டில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்களை திசை திருப்புவதுடன் மக்களை குழப்பத்தில் வைத்திருந்து, தங்களுக்கு தேவையானவற்றை அடைவதே இவர்களின் நோக்கம். விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி.
தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வழி நடாத்தப்பட்ட விடுதலை போராட்டத்தையும், தேசியத்தலைவரின் வரலாறுகளையும் கொச்சைப்படுத்துபவர்களும் துரோகிகளே!
மக்களே இவர்களின் கடந்த கால வரலாறுகளை மறந்துடாதீர்கள். தமிழ் மக்களின் பலவீனத்தை அறிந்து புலனாய்வாளர்களுடன் சேர்ந்து தொடர்ந்து மக்களை ஏமாற்ற முயற்சிகள் செய்கின்றார்கள் விழிப்புடன் செயல்படுவோம்.