இலங்கை இந்திய புலனாய்வாளர்களின் சதி மீண்டும் அம்பலம்!

காலத்தேவன்-நியூசிலாந்

2009 ஆம் ஆண்டு ஆயுத மௌனிப்பிற்கு பின்னர், காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் உருவாகி வருவதுடன் தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையை செய்து வருகின்றனர்.
அத்துடன் தமிழீழ தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு என்றும், வீரவணக்க கொண்டாட்டம் என்றும், மோட்டுமதியால் செத்த வீடு என்றும் பதிவு செய்து பலர் கிளம்பினார்கள். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மூன்று குழுவினர் இதனை முன்னெடுக்க  ஆரம்பித்துள்ளனர். மூன்று  குழுக்களை சார்ந்தவர்களும் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதோடு, மற்றும் தமிழர்களால் தமிழ்த்தேசிய விடுதலைக்காக உவந்தளித்த பொதுச் சொத்துக்களை  கையகப்படுத்தி உள்ளவர்களுமே இக்கூட்டமாகும்!
தலைவருக்கு எத்தனை முறை தான் வீர வணக்க நிகழ்வு செய்வார்கள்? ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்திலும், மாவீரர் நாள் நினைவு வாரத்திலும் இதனை முன்னெடுக்க தொடங்குவார்கள்! மக்களின் பலத்த எதிர்ப்பால் பின்னர் கைவிட்டு விடுவார்கள்
இந்த வருடம் கடந்த வருடங்களை போல் இல்லாது இலங்கை இந்திய புலனாய்வுகளின் நேரடியான வழிநடத்தலில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 தமிழீழ தேசியத் தலைவருக்கு அவசர அவசரமாக மாவீரர் பட்டமளித்து ஒரு நிகழ்வை செய்வதற்கு பல அடிப்படை காரணங்கள் உள்ளன.
1.  இந்து சமுத்திரத்தில், பூகோள அரசியலின் படி இந்தியாவின் வலு இழந்து வரும் நிலையில் சீனாவின் பலம் பெருகும் நிலையில் தமது ஆளுகையை, இலங்கையில் திணிப்பதற்கு பல முயற்சியில் இதுவுமொன்றாக தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வை செய்துவிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒருவரை விடுதலைப் புலிகளின் தலைவராக நியமித்து 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு தேவை இந்தியாவிற்கு உள்ளது.
இதற்காக இரட்டை முகவர்களாக செயற்பட்ட தயாபரன் என்கின்ற சங்கீதன், புலனாய்வுத்துறையை சேர்ந்த ரவி, (பிரான்ஸ்) தென்னவன் ,சிரஞ்சீவி மாஸ்டர் (இந்தியா) உட்பட பிரித்தானியா வரலாற்று மையத்துடன் தொடர்பு பட்ட நளன் , புரட்சி (அவிச்ச முட்டை லண்டன், இவர் யாழ் இடப்பெயர்வின் போது சண்டைக்கு பயத்தில் விலகியவர்) கடல்புலி புலவர்(வெடிப்புலவர்), முன்னாள் அரசியல்துறை தயாமோகன் (காசேதான் கடவுளடா) ஜெயாத்தன்(அம்மான் அணி சர்வதேச இணைப்பாளர்) போன்ற சிலரையும் உள்வாங்கி மே மாதம் 19 ஆம் திகதியை தலைவரின் வீரவணக்க நிகழ்வாகவும் செய்ய உத்தேசித்துள்ளனர். (இவர்களுக்குள் பதவி போட்டி காரணமாக இரு அணியாக உடைந்து இருவேறு திகதி எடுத்தார்கள் இது வேறு கதை)
2.  தலைவரின் இறப்பை மே மாதம் 17 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் செய்வதற்காக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்தில் நீதியாளர்களாக செயற்பட்ட மதிவர்மன் ஒருங்கிணைக்க (இவர்கள் இயக்கத்தால் படிக்க அனுப்பப்பட்டவர்கள்), செந்தூர் அன்பன் ஆகியோருடன் ரவிசங்கர் ( முகவர்), தமிழரசன் (பிரான்ஸ் ஆமை என போராளிகளினால் சொல்லப்படுபவர்) உட்பட பலரையும் இணைத்து பல  நகர்வுகளை தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் சிங்கள பாராளுமன்ற  உறுப்பினர்களின் அனுசரணையுடன் முன்னகர்த்தி வருகின்றனர்.
.
.
3. கஜன் ,முல்லை ராஜு , ஈசன் (லண்டன்) , முல்லை மதி (மோட்டுமதி) , அற்புதன் (சுக்குளா சுமந்திரனின் நலன் விரும்பி) M.G.R உட்பட இன்னும் ஒரு சிலரை இணைத்து மே மாதம் 18 ஆம் திகதியை தலைவரின் வீரவணக்க நிகழ்வாக முள்ளிவாய்க்கால் மைதானத்தில் செய்து ஒரு குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கான வேலையையும் இலங்கை புலனாய்வுத் துறையினர்களின் அனுசரணை ஊடாக இரகசியமாக செய்து வருகின்றனர்.
.
4. மூன்று அணியினரையும் இணைத்து மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒன்றுமையாக செய்வதற்கான அனுமதியை சிங்கள அரசு கொடுக்க தயாரான நிலையில், இந்திய இராஜதந்திரிகளின் ஊடாக இவ் அணியினருக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கியதால், ஒன்றாக மே-18ல் செய்வதும் இவர்களின் நோக்கமாகும்! காரணம் மே-18ம் தேதி ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, இனப்படுகொலை நாளை எதிர்வரும் காலங்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்த்தாமல் செய்வதும், வேறு எந்த ஒரு நிகழ்வையும் செய்யாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியும், வாய்ப்பாகவும் சிங்கள அரசுக்கு கிடைத்துள்ளது. அதற்காக ஒரு சில காடையர்களை தயார் படுத்தியதும் ஆயுதங்கள் சில காணாமல் போன பின்னணிகளும் உள்ளதுடன், குழப்பங்கள், தாக்குதல்கள் நடக்குமாயின சட்ட சிக்கல் என எந்த நிகழ்வையுமே நடாத்தாமல் செய்வதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கும்.
.
.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறும் இனப்படுகொலை நாளையும் தலைவரின் வீர வணக்கத்தையும் மே 18 இல் செய்வதற்கான ஏற்பாட்டினை பின்னால் இருந்து இயக்கும் இலங்கை , இந்திய புலனாய்வுத்துறையினர் செய்து வருகின்றனர் என்பது வெளிப்படை.
.
.
 இதன் மூலம் மே- 18  ஆம் திகதியை படுகொலை நாளாக ஏற்றுக் கொண்ட வெளிநாடுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் எல்லாரும் ஒற்றுமையாக எல்லாவற்றையும் மறந்து ஐக்கிய இலங்கையின் கீழ் ஒன்றுபட்டு  வாழ்கின்றனர் என காட்டுவதும் தற்போதைய அரசுக்கான முக்கிய நோக்கமாகும்.
.
.
இதன் மூலம் கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களை பயங்கரவாத மீளுருவாக்கமாகவும், கறுப்பு பட்டியலிட்டவர்கள் நாடு கடந்த பயங்கரவாதிகளாகவும், தேசியத்தலைவரை மீண்டும் மீண்டும் பயங்கரவாதியாக சித்தரித்து சர்வதேசத்தை நம்ப வைப்பதும் ஒரு நோக்கமாகும்.
நாளடைவில் வரலாறுகள் மாற்றப்பட்டு, போராட்டத்தையும் தமிழீழத் தேசியத் தலைவரின் நினைவுகளையும் அழித்து அடுத்த சந்ததிக்கு வீரவரலாற்றை கடத்தாமல் செய்வது மற்றைய நோக்கமாகும்.
.
.
மக்களே விழிப்புடன் செயல்பட்டு புலனாய்வுத் துறையுடன் செயற்படும் ஈனப் பிறப்புக்களிற்கு, வீரத்தலைவனின் வீரச்சாவினை கண்ணால் காணாத முதுகெலும்பற்றவர்களையும், இக்கூட்டுச்சதிகளை முறியடித்து எமது போராட்டத்தின் நியாயத்தை, அதன் வலுவை நாம் ஒற்றுமையாக வலுப்படுத்தி, குறிக்கோளுடன் பயணிப்பது தமிழர்களாகிய அனைவரின் தலையாய கடமையாகும்.
.
தேசத்தின் கடமை தொடரும்,……

நியூசிலாந்தில் இருந்து காலத்தேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *