முன்னாள் போராளி
17.02.2025
தாயகத்தில் நடத்திய உண்ணாவிரதமும் அதன் பின்னால் பின்னப்பட்டுள்ள உள்நாட்டு சதி வலைகளும், அதனுடன் இணைந்த புலம்பெயர் மன நோயாளிகளின் வேலைகள் மிகவும் வருந்தத்தக்க வகையில், தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் நடந்தது.

.
கடந்த மூன்று நாட்களாக முன்னாள் போராளி அழகரெத்தினம் வர்ணகுலராஜா, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பத்து கோரிக்கைகளை வைத்து சாகும் வரை நீர்ராகாரமின்றி உண்ணாவிரதம் என்ற நாடகம்; உண்மையில் மக்களின் பலத்த புறக்கணிப்பாலும், எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க மக்களின் வேண்டு கோளுக்கிணங்க கைவிடப்படுவதாக நாடகமாடி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்கள். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். வாழ்விடமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்தவர்.

.
இதன் பின்னணி பற்றி நாங்கள் ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கும் தமிழ் குழுக்கள் இதற்கான பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் நோக்கம் பின் வருமாறு உள்ளது ,
1) தற்போது யாழ்ப்பாணம் தையிட்டியில் நடைபெறும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் வேளையில் அதனை திசை திருப்பி, போராட்டத்தில் மக்கள் செறிவை குறைப்பது.


.
2) பல பிரச்சனைகளை ஒரே நேரத்தில் முடுக்கி விடுவதால், மக்கள் குழப்பத்துக்கு உள்ளாகி போராட்டங்களில் இருந்து விலகி போக வைப்பதற்காகவும், விரக்தியில் மக்கள் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள்,தமிழர் தரப்பு மீது ஆர்வம் காட்டாமல் செய்து அரசுக்கு வேண்டியவர்களை பல இடங்களில் நிறுத்தி தமக்கு சாதகமான அரசியலை செய்தல்.
3) கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு போராளியை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தவறாக காட்டுவதும் ஒரு நோக்கமாகும்.
4) குறிப்பிடப்பட்ட பத்து கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை பிரதேச வாதத்தை கைவிடவும் என்ற வசனம் போடப்பட்டுள்ளது அதனை ஆழமாக பார்ப்போமாக இருந்தால் அதன் நோக்கம் ஜக்கிய இலங்கையின் ஆட்சியின் கீழ் நாம் வாழ்வதற்கு விரும்புகின்றோம். கடந்த காலங்களில் நடந்த ஆயுதப் போராட்டம் பிழையானது என்றும் அதனை உணர்ந்த முன்னாள் போராளி இன்று உண்ணாவிரதம் இருக்கின்றார் என்று உலகுக்கு கட்டுவதும் நோக்கமாகும்.

.
5) இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வுத் துறையும், அரசாங்கமும் இருப்பது புலனாகின்றது, ஏனெனில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் செய்வதாக இருந்தால் அதற்கு அரச மட்டங்களில் அனுமதி எடுத்திருக்க வேண்டும், ஆனால் இங்கு அனுமதி எடுக்காமலே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இதனை தடுப்பதற்கு பதிலாக நான்குக்கு மேற்பட்ட காவல் படையினரை சிவில் உடையில் வீதி ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கதை கொடுத்த போது அவர்கள் கூறின விடயம் தங்களை வீதியோரத்தில் காவலுக்கு நிற்கும்படியும், உண்ணா விரதத்தில் இருப்பவரை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற எந்த ஒரு அறிவித்தலும் வரவில்லை என்றும், சட்டப்படி இப் போராட்டத்தை நிறுத்துவதற்கு சட்டத்தில் இடம் இருந்தும் தங்களுக்கு அறிவித்தல் எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்தனர், அதே நேரம் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் நபர் இரவு நேரத்தில் உணவு அருந்துவதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
6) உண்ணா விரதத்திற்கான ஒழுங்கினை புலம் பெயர் தேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளை வைத்து ஒழுங்கு செய்யப்படுவதன் மூலம் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் பெறுகிறார்கள் என்ற செய்தியினை வெளிக் கொண்டு வந்து, புலம்பெயர் தேசங்களில் இயங்கும் அமைப்புகளுக்கு அந்த நாட்டு அரச மட்டங்களின் ஊடாக ஒரு அழுத்தத்தை கொடுத்து செயற்படாமல் செய்வதும் ஒரு காரணம் ஆகும்.

.
உண்ணாவிரதம் இருக்கும் முன்னாள் போராளிக்கு புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் கட்டமைப்புக்களுடாக பல லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளதுடன் வெளிநாடு ஒன்றிற்கு போவதற்கான வசதி செய்து கொடுப்பதாகவும் உறுதி அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு கனடாவில் இருந்து ஜெயாத்தன் அணியின் கீழ் இயங்கும் குயிலன்(சசி), தமிழ்கொடி விமல், மாவீரர், போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தீபன், மாற்றுத்திறனாளி அமைப்பைச் சேர்ந்த இசைக்கோன் மற்றும் பிரித்தானியா, பிரான்ஸில் இருந்து ஒரு சில முன்னாள் போராளிகள் பின் நின்று செயற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல கோமாளிகள் வருவார்கள், பொது வெளியில் வருவார்கள்.

.
இப் போராட்டம் மூலம் நிலத்திலும் புலத்திலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி மக்களை தேசிய செயற்பாட்டில் இருந்து, முடக்க நிலைக்கு கொண்டு செல்வதுடன் கடந்த காலங்களில் நடந்த வரலாறுகளை மாற்றுவதற்கும், விடுதலைப் புலிகளினால் தண்டனைக் உட்படுத்தினவர்களையும் போராட்டத்திலிருந்து கலைக்கப்பட்டவர்களையும் வைத்து முன் நகர்த்தப்பட்டிருந்திருந்தது. அவர்களும் புலனாய்வுத்துறையுடன் விசுவாசத்துடன் செயற்படுவது பார்க்கக்கூடியதாக உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னால் நின்றவர்களிற்கு, தோற்கடிக்கப்பட்ட போராட்டம். இவ்வாறே உண்ணாவிரதமும் அதன் பின்னால் பின்னப்பட்டுள்ள சதி வேலைகளும் நடந்துள்ளது.
இது போன்று எமது தேசியத்துக்கு எதிராக கொண்டுவரப்படும் கருத்துக்களையும், வேலைத் திட்டங்களையும், மக்கள் அவதானமாக ஆழமாக ஆய்வு செய்து செயற்படுமாறு கேட்கப்படுகின்றனர்.
ஆய்வுகள் தொடரும்…………….