வல்வை மைந்தன்
06.02.2025
ஆண்டாண்டு காலமாக சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள பேரினவாதிகளும், இணைந்து, பூகோள அரசியலை வழிநடத்தும் மேற்குலகும் கைகோர்த்து செய்யும் வேலைகளே எமது கைகளை வைத்தே எங்கள் கண்களை குத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர்.
அதற்கு தேசத் துரோகிகளும் மாற்று இயக்கத்தினரும் அவர்களின் குடும்ப, ஆதரவாளர்களும் முண்டு கொடுத்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக அனுராவின் வருகைக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து மாற்று இயக்க ஆதரவாளர்கள் ஒரு சிலரும், விடுதலைப் புலிகளினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஒரு சிலரும் இணைக்கப்பட்டு வல்வெட்டித்துறையில் பேராதரவு கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். இந்த அனுராவின் அடிவருடியான எச்சைக் கூட்டம்.
இக்கூட்டத்துக்கு உதயசூரியன் கழகத்தினரோ வல்வை சங்கத்தினரோ தொடர்பு படவில்லையென நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதற்கு பின்னால் நின்று செயற்பட்டவர்கள் முற்று முழுதாக புலம்பெயர் தேசத்தில் வாழும் துரோகிகளும் மாற்று இயக்கத்தினருமே. மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கூட்டம் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னரே கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்கு காவல் படையினரும் ராணுவத்தினரும் சென்று அங்கு இருப்பவர்களின் தரவுகளை எடுத்துள்ளனர் அதன்பின்னர் தொடர்ச்சியாக உதயசூரியன் கடற்கரையில் போலீஸ் காவல் போடப்பட்டு இரண்டு நாட்களின் பின் காவல்துறையினரும் ராணுவத்தினரும் மேடை அமைப்பதற்கான தளபாடங்களை கொண்டு வந்து இறக்கியதுடன், அங்கு பட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒரு சிலரையும் அழைத்து அவர்களே முன்நின்று அந்த மேடையை போட்டுள்ளார்கள். தேசியத் தலைவர் பிறந்த பெருமை கொள்மண் இன்றும் சூடாகத்தான் இருக்கும் என்பது அனுர அரசாங்கத்திற்கு தெரியும். அதனாலேயே தொடர்ச்சியாக அவ்விடத்தில் காவலர்கள், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டதுடன், அங்கு உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு இருந்தனர்.
கூட்டம் நடைபெறும் நேரம் அருகாமையில் இருந்த மக்கள் அச்சத்தினாலேயே கூட்டத்துக்கு சென்றதாக கூறியுள்ளார்கள். போகாமல் இருந்தால். வல்வை மண்ணில் உள்ள தேசத்துரோகிகள் அவர்களை இனம் காட்டி இவர்கள் மேல் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணலாம் என்பதனால் இளைஞர்கள் சென்றதாக கூறப்படுகின்றது.

.
இந்த கூட்டத்திற்கு முள்ளம் தண்டாக இருந்தவர்களில் ஒருவர் காலன் என அழைக்கப்படும் கரிகாலன், இவர் வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்தவர். இவர் ஒரு மாற்று இயக்க ஆதரவாளர். இவர்1986ம் ஆண்டு இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார் அந்தக் காலத்தில் இவர் TELO இயக்கத்துடன் தொடர்புகளை பேணி வந்ததுடன், சில TELO இயக்க உறுப்பினர்களுடன் சேர்ந்து போதை வஸ்து கடத்தலில் ஈடுபட்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் இவருடன் இணைந்து போதைவஸ்த்து கடத்தல் செய்த TELO இயக்க உறுப்பினர்களை ஏமாற்றி போதைப் பொருட்களை இவர் தன் தாயார் ஊடாக இலங்கைக்கு கடத்திச் சென்று துரோகம் செய்ததனால், TELO இயக்க உறுப்பினர்களால் இவர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்வதற்காக வீடு ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த நேரம் இவரை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த TELO இயக்க உறுப்பினரின் தலையீட்டால் இவர் விடுவிக்கப்பட்டார். இவரை விடுவித்தவர் இன்றும் ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்றார். அதன் பின்னர் கரிகாலன் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் அடைந்தார், இவருடைய சகோதரர்களின் உதவியுடன் பிரித்தானியாவிலும் வங்கி காட் மோசடியில் ஈடுபட்டு தேடப்பட்ட வேளை, சில காட்டிக்கொடுப்புக்களை செய்துவிட்டு கனடாவிற்கு இடம்பெயர்ந்தார், அங்கும் போலியான வங்கி அட்டைகளை பாவித்து திருட்டு மோசடிகளில் ஈடுபட்ட வேளை கனடா அரசாங்கத்தினால் தேடப்பட்டார், அதன்பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றார். அங்கிருந்து ஒரு சில துரோகிகளுடன் இணைந்து NPP அரசாங்கத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி அவர்களிற்கு விசுவாசமாக வேலை செய்து வருகின்றார். இவருடன் NPP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலரையும் சேர்த்து இந்த கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர்களின் விபரங்களும் வெளியிடப்படும்.

.
கூட்டத்திற்கு வந்த அனுராவை அணைத்த அந்தப் பெண்மணி கரிகாலனின் தாயார். இவர் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். இது எல்லாமே மிகவும் சாணக்கியமாக அனுராவின் பேச்சினை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவரினால் ஒழுங்கமைக்கப்பட்டது. இவர்கள் போன்றவர்களை இனம் கண்டு சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
இவர்களுடைய குடும்பத்தில் பல உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட தமிழ் தேசியத்துக்காகவோ போராட்டத்திலோ கலந்து கொள்ளவில்லை. இழப்பையே பார்க்காத இவர்களுக்கு எப்படி மற்றவர்களின் வலி தெரியும். இவர்கள் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து அனுரா அரசுடன் இணைந்து தாங்கள் செயல்படுவோம் என்று கூறி வருகின்றார்கள். மக்களே இனம் கண்டு அவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

.
உலகமே போற்றும் எம் தேசியத்தலைவர் பிறந்த வல்வை மண்ணில்த்தான் துரோகிகங்களிற்கும் ஆரம்ப புள்ளி வைக்கப்பட.டது என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை, எம் தலைவர் களத்தில் நின்றால் மகாவம்ச மனநிலையில், அதன் வளர்ச்சியில் உள்ள பேரினவாதிகள் தமிழீழ மண்ணில் தடம் பதிப்பார்களா ? காலம் பதில் சொல்லும்.
விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி