இளங்கோ – கனடா
.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடக சந்திப்பை குழப்புவதற்கு தமிழ்நெற் ஜெயாவினால் இயக்கப்படும் உலகத்தமிழர் உரிமைக் குரலின் சர்வதேச இணைப்பாளர் ஜெயந்தன் தலைமையில் முயற்சி.
02.06.2024 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாலை 4 மணியளவில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சான் சென் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற முறைப்பாட்டிற்கான (Petition ) அறிமுக நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு . சான் சென் நேரடியாகவும் , நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி. உருத்திரகுமாரன் இணைய வழியாகவும் Petition பற்றிய விளக்கம் அழித்தனர். இந்த Petition பற்றி பொதுமக்கள் என்று கூறிய ஒரு சிலர் கருத்து தெரிவிக்கையில் சில விடயங்கள் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர், அதற்கு திரு உருத்திரகுமாரனும், திரு சான் சென் அவர்களும் இந்த Petition ஆரம்பம் மட்டுமே, இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் போது நிச்சயமாக மக்களால் கொண்டு வரப்படும் கருத்துக்கள் இணைக்கப்படுமென்று கூறியதோடு இதில் இணைக்கப்பட்டுள்ள சில சொற்கள், குறிப்பிடப்பட்ட தகவல்களும் சர்வதேச சட்ட வரையறைக்கு ஏற்ப மாற்றம் செய்யபட்டுள்தையும் விளக்கினர்.
இதை ஏற்றுக்கொள்ளாத ஜெயந்தன், அமல், நிரு மற்றும் முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரும், கடந்த தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறியப்பட்ட , ரோய் விக்னராஜாவும் சேர்ந்து உடனடியாக மாற்றும்படி குழப்பம் விளைவித்தனர்.
இவர்கள் அறிவில்லாமல் கேட்டவுடன் மாற்றுவதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் முடிந்தால் ICJ க்காக அமல், ஜெயந்தன், நிருஜன் மூவரும் தாம் வாழும் பிரதேசமான மார்க்கம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் சரியான E-Petition உருவாக்கி அதற்காக உழைக்கலாம் என அங்கு வந்தவர்கள் கூறிச் சென்றார்கள். இவர்கள் இதுவரை அமைப்புக்களை திருத்துகிறோம் என உடைப்பு வேலைகளை இரகசியமாக செய்கின்றனர்.
இவர்களுக்கு உண்மையில் இதில் அக்கறை இருப்பின் நீங்கள் கூறும் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்கட்சி (கன்சர்வேட்டிவ் ) பாராளுமன்ற உறுப்பினர்களூடாகவும் போடலாம் இதை சவாலாக கூறுகிறோம்? தமிழ் நெற் ஜெயா ஒப்புதல் தருவாரா?
பல முறைப்பாடுகளை ஏனைய மாகாணங்களிலும் போடலாம். அவ்வாறு போடுவதால் கனடிய அரசுக்கு முழுமையாக இந்த விடயத்திற்குள் வருவதற்கு அழுத்தத்தை கொடுக்கலாம். இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியாக இயங்கும் இவர்களின் நோக்கம் குழப்பத்தை ஏற்படுத்தி தேசிய செயற்பாட்டில் உள்ளவர்களிற்கு மன உளைச்சலைக் கொடுத்து செயற்படாமல் வைப்பதோடு, தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் வேற்றின அரசியல்வாதிகளையும் எமக்கு உதவுவதை தடுப்பதே ஆகும், இவர்கள் கனடாவில் எதையாவது உருப்படியாக செய்திருந்தால் கேள்வி கேட்கலாம்.
இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியாக இயங்கும் உலகத்தமிழர் உரிமைக்குரலின் வேலையே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுத்தப்படும் விடயங்களை மழுங்கடிப்பதே ஆகும். இன்றைக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு தமிழ்நெற் ஜெயாவால் 2009 இல் இருந்து வெளிவந்த செய்திகளும் படங்களுமே ஆகும்.
உதாரணமாக அதிலொன்று நீள வரிப்பலி சீருடை அணிந்த மோட்டார் சைக்கிள் விசேட அணியினரின் படத்தை வெட்டி எடிற் செய்து அவர்கள் மக்களை சுடுவது போல் வெளிவந்த செய்திகளுக்கு ஜெயா சொன்ன பதில் Tamilnet hack பண்ணப்பட்டு உள்ளதாக கூறி அப்போது தப்பித்தார். தற்போது இன்று அதே ஊடக செய்திகளை நீக்கி வெள்ளை அடித்து விட்டு புத்தக வெளியீடுகளில் அச்செய்திகளின் இணைப்புகளை பதிவு செய்துள்ளார். தமிழர்களின் மறதி நோயை சரியாக மாமனும் மருமகனும் பயன்படுத்தி வருகின்றனர். போராடிய சமூகமாகிய
நாம் உங்களை கவனிக்கின்றோம்.
இருந்தும் இந்த ஊடக சந்திப்பின் தொகுப்பாளராக செயற்பட்ட திரு. கார்த்திக் நந்தகுமார் அவர்கள் நிலமையை நல்லவிதமாக கையாண்டு ஊடக சந்திப்பை நல்லமுறையில் நடத்தி, யாதார்த்தத்தை புரிந்து நாம் எப்படி இந்த E-Pettion வெற்றி பெற அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரையும் காப்பாற்றி கொடுத்தார். மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் கனடிய அரசியல்வாதிகள் தேர்தல் பரபரப்புக்காக இதை கையாள உள்ளார்களா என்பதையும் நாம் ஆழமாக அவதானிகின்றோம்.