கருங்குருவி.
பாகம் 3
.
மும் மூர்த்திகளிற்கும் தமிழ்நெற் ஜெயாவிற்கும் பின்னணியில் NCCT தான் இருக்கின்றது.
காலத்தின் தேவை கருதி தமிழ் தேசியத்தை நீர்த்துப் போவதற்கான வேலைத் திட்டங்களில் விரும்பத்தகாத சக்திகளோடு சேர்ந்து இயங்குபவர்களை மக்கள் முன் இனம் காட்ட வேண்டிய தேவையுள்ளது. மக்களின் பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர்களும், விரும்பத்தகாத சக்திகளுடன் தங்களிற்கு உள்ள தொடர்புகள் பற்றிய கேள்விகளை மக்கள் கேட்க்காமல் இருப்பதற்காகவும் மக்கள் மத்தியில் குழப்பகரமான செய்திகளையும் திரிவு படுத்திய செய்திகளையும் NCCT, TCC, தமிழ்நெற் ஜெயாவினால் இயக்கப்படும் Voice of Global Tamils Right, நாரயணதாஸின் பொறுப்பில் உள்ள Tamil Rights Group (TRG) போன்ற அமைப்புகள் கடுமையாக வேலை செய்கின்றனர்.
இவர்கள் கடந்த 14 வருடங்களாக மக்களை குழப்பத்தில் வைத்திருந்ததை தவிர வேறு எதையும் உருப்படியாக செய்யவில்லை. இவர்களிற்கும் இந்தியாவிற்குமான தொடர்புகள் திரைமறைவிலும், வெளித்தெரிந்த நிலையிலும் உள்ளது. தமிழீழத் தாயகம் நோக்கி முன்னகர்த்தப்படும் தேசியச் செயற்பாடுகளை பின்னோக்கி கொண்டு செல்வதையே தமது எஜமானர்களிற்காக செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பலராலும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை குழப்புவதற்கான இந்தியா முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது. ஆனால் பல நாடுகளில் இருந்து சில சிக்கலான நபர்களும் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஊடாக பிரச்சினைகளை TGTE எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாது.
https://www.ourcommons.ca/petitions/en/Petition/Details?Petition=e-4981
தற்போது TGTE தலைமையில், கனடிய அரசியல் பிரமுகர்களின் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படும் ICJ க்கான முன்னெடுப்புக்களை குழப்புவதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்நோக்கம் ICJ க்கான முன்னெடுப்புக்களை ஆரம்பத்திலேயே குழப்புவதால் மக்களை ஒதுங்கவும்,சோர்வடைய வைத்திருப்பதுடன், தமிழரின்
நியாயமான கோரிக்கைகளிற்கு ஆதரவு வழங்கி துணை போகும் வேற்றின அரசியல்வாதிகளை தமிழர்களிற்கு உதவும் மனநிலையை சிதைப்பதாகவும் உள்ளது. இதனால் வழமை போல தம் இருப்புக்களை தொடர்ந்து தக்க வைப்பதே நோக்கமாகும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள E-Petition ல் ஆயுதப் போரின் இறுதியில் 2006 முதல் 2009 வரை நிகழ்ந்த இனப்படுகொலை, இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை கண்டு அதிர்ச்சி அடைந்ததை கோடிட்டு காட்டியதை பிழையாக திசை திருப்பி அதாவது இதற்கு முன்னர் படுகொலை நடக்கவில்லையா? என கேள்வி உள்ளதாக TGTE யில் உள்ளவர்களை கேள்வி கேட்பதாக TGTE யினர் கூறுகின்றனர்.
இது ஆரம்பமே தவிர முடிவல்ல பலநாடுகளில் இவ்வாறு முயற்சி இரகசியமாக முன்னெடுக்கப்படுகிறது. எனெனில் குழப்பம் செய்வதற்காகவே 2009 ஆண்டிற்கு பின்பு பல அமைப்புகள் உருவாகின.
ICC, ICJ, ADHOC இவை மூலம் இலங்கையில் நடந்த இனவழிப்பபை முடிவு செய்ய, நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதோடு, பல படிகள் உள்ளது. இறுதி முடிவை ICJ க்கு கொண்டு போவதற்கு முன்னர் பல்லாண்டுகளாக நடந்த குற்றங்களுக்கான சாட்சிகளை வேண்டிய அளவு இணைக்கலாம்.
அந்த சாட்சிகளை இனங்கண்டு இரகசிய காப்பு முறைப்படி சேகரிக்க வேண்டும். மக்களை தற்போது குழப்ப நிலைக்கு கொண்டு செல்லும் இந்த அமைப்புக்களின் நோக்கம் சாட்சிகளை நீதிக்கான நோக்கத்திலிருந்து விலக வைப்பதே ஆகும்.
இவர்களிற்கு தெளிவு இல்லையென்றால் ஊடக சந்திப்பில் கலந்து கேள்வி கேட்க வேண்டியதுதானே? இந்த அறிவே இல்லாமல் NCCT மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலி தமிழ்தநெற் ஜெயாவின் மூன்று கைப் பிள்ளைகளும் கதறிக் கொண்டிருக்கின்றதாக கனடா தகவல் மூலம் அறியப்படுகிறது. நோய்ப் படுக்கையில் கிடந்த ஜெயா இரகசியமாக கனடா வந்து மந்திராலோசனை செய்த போது பாடம் எடுக்க மறந்து விட்டாரா?
இதில் NCCT இன் பங்கு அளப்பெரியது. NCCT க்கு சவாலாக இருந்த CTC ஐ உடைப்பதற்காக மும் மூர்த்திகளான தமிழ்நெற் ஜெயாவின் மருமகன் ஜெயந்தன்( Voice of Global Tamils Right ) அமல் ( கரி ஆனந்தசங்கரியை அரசியலில் இருந்து அழித்தே தீருவேன் என நிற்பவர்) நிருஜன் (நிரு, புலி) என ஆகியோர்கள் களம் இறக்கப்பட்டனர். இவர்கள் NCCT க்கு எதிரானவர்கள் போல மாயையை உருவாக்கி CTC இனால் தூக்கி எறியப்பட்ட ஒரு சில கறுப்பு அங்கிகளையும் உள்வாங்கி மறுசீரமைப்பு என்ற பெயரில் விடுதலைப்புலிகளால் பல தேவைகளிற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பான CTC ஐ இல்லாமல் செய்வதற்கான வேலையை செய்து வருகின்றனர்.
CTC அமைப்பில் உள்ள சிலர் அன்னிய சக்திகளிற்கு விலை போயுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இமாலய பிரகடனமும் மிகவும் தவறான ஒன்றாகும். இவர்கள் முதலில் உலகத் தமிழினத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்ட தேசத்துரோகிகளை அகற்றி சரியானவர்களை உள்வாங்கி, சீர் செய்ய இலகுவான பல வழிகள் இருந்தும் , அதனை செய்யாமல் அமைப்பை உடைப்பதற்கான வேலையை இவர்கள் செய்து வருகின்றார்கள். இவர்களின் பின்னால் மக்கள் எவரும் இல்லை மக்கள் சந்திப்பு நடைபெற்ற போது தெரிய வந்தது.
முன்பு CTC யினால் நீக்கப்பட்ட சிலர் தற்போது அதை மீளக் கைப்பற்றுவதற்காக இவர்களிற்கு உதவுகின்றனர்.
இதற்காக சட்டம்படித்த ஒரு சிலரும் கல்விச்சபை உறுப்பினர்கள் என்று சிலரும் சேர்ந்து மணி அடிப்பதுதான் கவலைக்குரிய விடயம். 10 அங்கத்தவர்களை வைத்தே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து சீர் செய்யலாமென்ற தெளிவே இல்லாமல் வேலை செய்கிறார்களா?
அல்லது 10 பேர் கூட இவர்களை நம்பவில்லை என்பதுதான் உண்மையா?
இத்துடன் நிற்காமல் NCCT இனர் கனடா பிராம்டன் நகரில் அமைய இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை கட்ட விடாமல் குழப்பி வைத்துள்ளதோடு, நினைவுத் தூபியின் ஆரம்ப கட்டுமானம் என்ற பெயரில் வீட்டுத்தோட்டம் போல கல்லைச் சுற்றி பூ மரங்கள் வைத்து படம் காட்டி வருகின்றார்கள். பிராம்டன் நகரசபையில் சரியான வரைபடமோ, அதற்கான திட்ட வரைபுகளோ சீரிய முறையில் சமர்பிக்கப் படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதற்கென நிதி சேகரித்த NCCT மோசடிக்கும்பல் தற்பொழுது நினைவுதூபியை கையிலெடுத்து பண வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. நினைவு தூபி கட்டாமல் மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்காக விரும்பத்தகாத சக்திகளின் பங்களிப்பு காத்திரமானது.
BTA சுபாஸ், முன்னாள் EPRLF உறுப்பினர் தேவசபாபதி, TELO உறுப்பினர் மோகன், Plot ரொனால்ட் போன்றோர் பல சலுகைகளை பெற்றுக்கொண்டு குழப்ப வேலைகளை செய்து வருகின்றார்கள். TELO மோகன் கிட்டண்ணாவின் காலத்திலும் குழப்ப வேலைகளை செய்தவர். தேவசபாபதி என்ற துரோகி கனடாவிற்கு ஆள் கடத்தல் செய்வதாக கூறி பலரின் வாழ்க்கையை கெடுத்து தரும அடி வாங்கின கதைகளும் உள்ளது. மீண்டும் நினைவுத் தூபி விடயத்திலும் மக்கள் வெகு சீக்கிரம் தர்ம அடி கொடுக்லாம்.
Plot ஈசனின் சகோதரன் Plot ரொனால்ட் பிராம்டன் வீதி குப்பை சேகரிப்பு குத்தகையை பாபுக்கு ஊடாக எடுத்துள்ளார். ரெலோ சேழி ஜெயராமின் உறவினர் ரெலோ மோகன் இவர் ரெலோ பீற்றர், மனோ மாஸ்டருடன் செயற்பட்டவர். இவர்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக இந்திய ரோவின் உளவாளி மெல்வின் இருக்கின்றார்.
இப்படித்தான் NCCT யினர் தேசிய அடையாளங்களை அழிப்பதோடு புலி நீக்க, கொடி நீக்க அரசியல் செய்கின்றார்கள். தற்பொழுது அண்டங் காக்கா என்று பெயர் எடுத்த தமிழ் அரசியல்வாதி ஒருவரை வைத்து ஊர்ச் சங்கங்களை குழப்பும் வேலையையும் செய்வதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
மேலதிக தகவல்கள் உறுதிப்படுத்திய பின்னர் பெயர் விபரங்களுடன் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும்.
களையெடுப்பு தொடரும்…….