தமிழீழ தேசியக்கொடியை அங்கீகரிக்காத  நிகழ்வுகளை, அந்த அமைப்புகளை தவிர்ப்போம்!

இளங்கோ

21.05.2024

.
தமிழீழ தேசியக்கொடியை அங்கீகரிக்காத  நிகழ்வுகளை, அந்த அமைப்புகளை தவிர்ப்போம்!
தமிழீழ தேசிய அடையாளங்களை அழித்து புலி நீக்க, கொடி நீக்க அரசியலை தொடர்ந்து செய்து வரும் கனடிய தமிழர் தேசிய பேரவையும், கனடிய தமிழ் அரசியல்வாதிகளும் திருந்துவார்களா?
உலகெங்கும் 15 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.  தமிழர்கள் அதிகளவு வாழும் கனடாவில் மக்களின் எழுச்சியை மழுங்கடிக்கும் விதமாக கனடிய தமிழர் தேசிய பேரவையும் ( NCCT ) கனடிய தமிழ் அரசியல் பிரமுகர்களும் நடந்து கொண்ட விதம் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கனடிய பல்கலாச்சார அரசியல்வாதிகள் தமிழர் தேசியக்கொடியை அங்கீகரித்தும், அதை தாமே ஏற்றும் போதும் கனடிய தமிழர் தேசிய பேரவையும், கனடிய தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர் தேசிய அடையாளங்களை மறைத்து, தமிழீழ தேசியக்கொடி ஏற்றாமல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதை கேட்டால் கனடிய அரசியலோடு சேர்ந்து பயணிக்கின்றார்களாம் ஆதலால் தமிழீழ தேசியக்கொடி ஏற்றமாட்டார்களாம். பின்னர் எதற்கு போலி தேசியம்  பேசுகிறார்களாம்?
தமிழர் தேசியக்கொடியை ஏற்றும் வேற்றின கனடிய அரசியல்வாதிகள் இலங்கை அரசியலை தற்போது சரியாக புரிந்து பயணிக்கின்றார்கள்? நீங்கள் அவர்களை ஏமாற்ற தொடர்ந்து நாடகம் போடுகிறீர்கள். அப்படியானால் தமிழ் அரசியல்வாதிகளை தெரிவு செய்த மக்கள் முட்டாள்களா?
இல்லை தமிழ் தேசியம் பேசி பதவிக்கு வந்தவர்கள் பதவி கிடைத்ததும் NCCT, CTC போன்ற அமைப்புகள் செய்யும் அன்பளிப்புக்களிற்காக தமிழ் தேசியத்தை உதட்டளவில் மட்டும் வைக்கின்றார்கள்.  மேடைகளில் வாய் கிழிய கத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் தேச விடுதலைக்கு ஊறு விளைவிக்கும் விரும்பத்தகாத சக்திகளோடு சேர்ந்து இயங்கும் NCCT, CTC  போன்றோர் சமூகத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள்.
எம் மாவீர்ர்களின் கனவையும், மக்களின் அவலத்தையும், தியாகத்தையும் பயன்படுத்தி ஆதாயம் தேடும் இவர்கள் தேவையா ? இல்லையா என்று மக்கள்தான் முடிவெடிக்கவேண்டும்.
.
.
18.05.2024 அன்று கனடிய தமிழர் தேசிய பேரவையால் முன்னெடுக்கப்பட்ட மே 18 வணக்க நிகழ்வில் விளம்பர பெயருக்கு மாத்திரம் கனடியத் தமிழர் சமூகம் மற்றும் மாணவர் சமூகம் என அடையாளப்படுத்தினர். ஆனால் ஏற்பாடுகள் NCCT தான் செய்தது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இதனால் வழமை போன்று தமிழீழ தேசியக் கொடியுடன் சென்ற நிருஜன் (நிரு) மகாஜெயம் ஆகியோரை NCCT உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தடுக்க முற்பட்டு முரண்பட்டு, வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இவர்கள் அங்கு தமிழீழ தேசியக் கொடியுடனேயே நின்றார்கள். இங்கு வருத்தம் என்னவெனில் மக்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வரவில்லை.
மக்களே உங்கள் மானம் மறைக்க தற்போது உங்கள் கைகளில் எமது தேசியக்கொடியை 2009 ஆயுத மெளனிப்பிற்கு பின்னர் தரப்பட்டது.
புரிந்து கொள்வீர்கள்.
.
 
.
இருவரும் தேசியத்துடன் நின்றாலும், இவர்களின் பின்னால் ஒழிந்து நிற்பவர்கள் புலி நீக்க, கொடி நீக்க அரசியலை மறைமுகமாக செய்பவர்கள் என்பதால் மக்கள் தள்ளியே நின்றார்கள் என்பதே நிதர்சனம்.
புலம்பெயர் பல நாடுகளில் TCC தேசியக் கொடியை சில இடங்களில் ஏற்றியும் ஏற்றாமலும் கலை நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தி முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு களை 15 வருடமாக நடத்திய பெருமை பேசி வருகின்றனர். இதை விட ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.

எனவே தமிழின துரோகங்களை இனம்கண்டு புறம் தள்ளி, மக்களும், இளையோரும் இனமானம் காக்க முன்னுக்கு வந்தால் மட்டுமே வரும் காலங்களில் புலி நீக்க அரசியல், கொடி நீக்க அரசியல் செய்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *