நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளங்களினுள்  விசமிகள் ஊடுருவல்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளங்களினுள்  விசமிகள் ஊடுருவல்

இளங்கோ – கனடா
03.05.2024

இணையத்திற்கு ஊடாக இந்திய ரோவின் அனுசரணையுடன் கனடாவில் இயங்கும் ஐபோன் மீடியா நபர்களான செந்தூரன், தேடிப்பார் குமார், ராம்சேகர் சிவனாந்தன்  போன்றவர்களின் கூட்டுச்சதியால்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளம், உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள், தேர்தல் ஆணையத்தின் மின்னஞ்சல்கள், யாவும் ஊடுருவி பொய்யான செய்திகளை உலகெங்கும் பரப்பி வருகின்றார்கள். இது பற்றி நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதுவும் தெரியவில்லை. தேர்தலில் திட்டமிட்டு குழப்பம் செய்யும் நோக்கமாக இருப்பதுடன்  நாடு கடந்த அரசாங்கத்தின் தற்போதைய பிரதமருக்கு அவரது உறவினரான குமார் மூலமும் பலத்த அழுத்தம் கொடுத்ததையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இது குடும்ப அரசியல் போன்றும் தெரிகிறது. எனெனில் பாராளுமன்றம் கலைத்த பின் தற்போது தவேந்திரன் (தவே) பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டார். குமார் தேர்தல் விடயத்தில் தலையீடுகள் கொடுப்பது  சுயாதீனமாக தேர்தல் ஆணையம் செயற்பட முடியவில்லை என புகார்கள் பல நாடுகளில் இருந்து வந்துள்ளது.

அமெரிக்கா  பிரதான தேர்தல் ஆணையம் முதல் கனடா, லண்டன், பிரான்ஸ்,ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிஸ் போன்ற நாட்டின் தேர்தல் ஆணையங்களின்  மின்னஞ்சல்களினுள்ளும் ஊடுருவியுள்ளனர். இது தெரியாமல் இவர்கள் அனைவரும் இருக்கின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் சுயாதீன அணைக்குழுவுடன் தொடர்பு கொண்ட போது , அவர்களால் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லையென கூறியதோடு தேர்தலை குழப்புவதற்காக விசமிகளால் பல செய்திகள் பரப்பப்படுவதாகவும், விரைவில் இது பற்றி ஊடகங்களிற்கு  மறுப்பு செய்தி அனுப்பவுள்ளதாகவும் கூறினர். நீங்கள் அனுப்பும் செய்திகளின் முடிவுகள் எல்லாம் எந்த நிமிடத்திலும் மாற்றி அனுப்பலாம் . விழிப்புணர்வு அவசியம் ஒரு தகுந்த நிபுணர்களை இந்த இணைய சதிவலையை முறியடிக்க தேடுங்கள்.

இந்த ஊடுருவலின் பின்னனியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த செந்தூரன் நடராஜா, தேடிப்பார் குமார் ஆகியோரின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னால் அமைச்சர்கள் விஜி, மாதகல் கண்ணன், குமணன், ரெஜி மற்றும் I phone ஊடகவியளாளலர்கள சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. செந்தூரனின் கட்டுப்பாட்டில் உள்ள MCIFF என்னும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யும் சிறிய நிறுவனத்தினூடாகவே இந்த ஊடுருவல் நடை பெற்றுள்ளது. இதற்காக பெருந்தொகை பணம் நிமால் விநாயகமூர்த்தி என்பவரால் வழங்கப்பட்டுள்ளதாக அவருடன நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நிமாலுடன் தொடர்பு எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

எங்களிற்கு சில ஆதாரங்களும் சில குரல் பதிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் சில நிபந்தனைகளுடன் ஆதாரங்கள் தருவோம்.

தொடரும் ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *