கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இளங்கோ.

இமாலய பிரகடனத்தை சிங்கள பெளத்த     பேரினவாதத்தோடு சேர்ந்து உருவாக்கிய கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஈழத்தமிழர்களிற்கு எதிராக செயற்பட்ட CTC அமைப்பின் மேல், ஒட்டுமொத்த கனடியத் தமிழர்களும் எதிர்ப்பை காட்டியதன் விளைவாக, இந்த முடிவை ரவீனா அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும், இவர் கனடிய தேர்தலில் போட்டியிட இந்த முடிவை எடுத்ததாகவே பார்க்கப்படுகின்றது,  கனடிய தேர்தலில் போட்டி போட்டு தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்? தமிழருக்கு ஆதரவாக செயல்ப்படும் வேற்று இன அரசியல்தலைவர்களிற்கும் தலைவலியாகத்தான் இருக்கப்போகின்றார், இவரின் விடயத்தில் மக்கள் ஏமாராமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இவர் தலைமையில் மக்கள் மேல் போடப் பட்ட பொய்யான சட்ட நடவடிக்கைகளை என்ன செய்யப் போகின்றா என்ற கேள்வியை பலரும் கேட்டுள்ளனர், ரவீனாவிடமிருந்து அதற்கான பதில் இல்லை.

CTCக்குள் இருக்கும் சிங்களத்தின் சில கறுப்பாடுகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு புதிய நிர்வாகம் மறுசீர் அமைக்கும்வரை கனடியத் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக CTC க்கு தமது எதிர்ப்பை காட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்தும் கனடிய தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசியத்துக்கு எதிராக செயல்படுபவர்களையும் அவர்களின் ஊதுகுழல்களையும்து இனம்கண்டு தூக்கியெறியப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *