( நமது நிருபர்:- இளங்கோ- கனடா)
இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் பார்க்க, பல நாடுகளினாலும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரான சக்திகளாலும் இன்று உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைப்பதற்காக இலங்கை , இந்திய அரசுகள் பெருந்தொகையான நிதிகளை பரந்தனை பிறப்பிடமாக கொண்டவருக்கூடாக வழங்கி பலரை ஐரோப்பா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் களத்தில் இறக்கியுள்ளதுடன் ஏற்கனவே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தியும் அவமானப்படுத்தியும் தேர்தலில் விலக வைத்துள்ளனர். பிரதமர் திரு- உருத்திரகுமாரன் மீது அவதூறு பரப்பியதுடன் அவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து அகற்றியே தீருவோம் என தமிழ் அமைப்புகளை உடைக்கும் நபர்களுடன் கைகோர்த்து செயற்படுவது அனைவரும் அறிந்த உண்மை.
இதில்
வேடிக்கையான விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் மற்றைய பலமான அமைப்புக்களையும் உடைப்பதற்காக தமிழ் நெற் ஜெயா தலைமையில் மாறன் உட்பட பலர் இறக்கப்பட்டுள்ளார்கள். இவர் 2008 ம் ஆண்டு தொடங்கி 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இணயத்தளங்களில் பரப்புரை செய்தவர் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இவரது செய்திகளை நிழற்படங்களை தமிழீழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் ஆதாரமாக கொடுத்துள்ளது.
அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கை இந்திய அரசிடமிருந்து இவருக்கு பல கை உதவியும், நிதியுதவியும் கிடைத்துள்ளது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இயங்க முடியாதவாறு நற்திட்டங்கள், தீர்மானங்களை எதிர்த்தும் கேவலமாக பேசியும், விசுவாசமாக இருந்துள்ளார்.
ஜெயா தனது வாரிசாக தனது மருமகனையும் 2019 இல் கனடாவிற்கு அனுப்பி அமைப்புக்களை உடைக்கும் வேலையையும் செய்து வருகின்றார். அவரும் மாமனாருக்கு விசுவாசமாக பல பெயர்களில் What’s up groups களை உருவாக்கி நாரதர் கலகத்தை மிகவும் கச்சிதமாக செய்து வருகின்றார்.
கனடாவில் நிமால் என்பவர் இந்திய அரசினால் நேரடியாக களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்படை. இவரை இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தம்பி ஒருவர் மாவீரர் இதை வைத்து தேசியம் வளர்கின்றார்.ஆனால் 1990 ஆண்டிற்கு முன் இவர் எந்த அமைப்பில் இயங்கினாரோ அவ் அமைப்பினரை இந்தியாவிலும் கனடாவிலும் நீண்ட தொடர்புகளில் உள்ளார். தற்போது பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புதியவர்களை தனக்கு சார்பாக தேர்தலில் களம் இறக்க அணுகியுள்ளார்.
அண்மையில் இவரது நண்பர்களுக்கு சொன்ன விடயம் முன்னாள் போராளிகளோ அல்லது எவரென்றாலும் நான் கொடுக்கும் காசால் வாயை மூடுவேனென்றும் அடுத்த பிரதமர் நான் இந்தியாவின் ஆள் நான், அமெரிக்காவின் ஆள் உருத்திரா எனவே இந்தியா நான் சொல்வதை கேட்கும் உருத்திரகுமார் இருக்கும் வரை இந்தியா தீர்வு தராது. அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் வர இந்தியா விடாது.எனக்கு எல்லோரும் உதவி செய்யங்கோ என உளறியுள்ளார். ( பாதி நிதானத்தில்)
வரலாறு இவ்வாறு பலரை அடையாளப்படுத்தியது சுயத்தை இழந்து இரகசிய பேரங்களில் தமிழ்த் தேசியத்தை விற்றவர்கள் யாரும் இன்றைய நாளில் களத்தில் அவமானக் குறியீடாகவே உள்ளனர். காலம் அவர்களை விரைவாக கடந்து அடுத்த நிலைக்கு செல்கிறது.
எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் சொத்து அதை பாதுகாக்க தொடர்ந்தும் விலை போகாத நபர்களுடன் அனைத்து நாடுகளும் பிரமிப்பாகவும், கவனமாக அணுக வேண்டிய அரசாக பேண வேண்டியது உங்கள் காலத்தின் கடமை.