ஐக்கியராச்சியம் .
ஐக்கியராச்சியத்திலிருந்து வெளிவந்த இப் பதிவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழும் முன்னாள் போராளிகள் வெளியிடும் அறிக்கைகளின் பின்னணி, வரமா?சாபமா?
கடந்த இரண்டு மாதங்களாக புலம் பெயர் தேசங்களில் முன்னாள் போராளிகளென்றும், களமுனைத் தளபதிகள் என்றும் ஒரு சிலர் விடும் அறிக்கைகள் யாவும் மக்களை குழப்பும் விதமாக உள்ளது. இன்றும் பலநாடுகளில் தமிழீழ தேசியத்தலைவருடன் இறுதி யுத்தம்வரை பயணித்த பலர் வாழ்கின்றார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்க மரபுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கின்றார்கள். இதனால் பொதுவெளியில் அறிக்கை விடுகின்றவர்கள் அனைவரும் உண்மையிலேயே விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தானோ என்ற சந்தேகமும் பலர்மத்தியில் எழுந்துள்ளது. கதை விடும் சிலர் விடுதலைப்புலிகளால் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமைக்காகவும், இயக்க மரபை மீறியமைக்காகவும் தண்டனை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களும்தான் தம்மை முன்னாள் போராளிகள் என்கின்றார்கள். இவர்கள் தம்மைப்பற்றி தாமே புகழ் பாடுகிறார்கள். இவர்கள் களத்தில் நின்றதாக கூறும் கதைகளுக்கும் (திகதி வாரியாக) எந்த சம்பந்தமும் இல்லை, புழுகித் தள்ளுகிறார்கள்.
யுத்த இறுதி நேரத்தில் நடந்தவைகளை ஊகத்தின் அடிப்படையில் கதை விடுகிறார்கள். இவர்களில் பலர் எப்படி புலம் பெயர் தேசத்திற்கு வந்தார்கள் இவர்களின் பின்புலம் என பல கேள்விகள் உள்ளது. இவர்களின் ஊகத்தின் அடிப்படையில் வெளிவரும் அறிக்கைகளாலும், செயல்பாடுகளாலும் தாயகத்தில் வாழும் போராளிகள் பலர் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனமே சித்திரவதைகளையும் இழப்புகளையும் சந்தித்து கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியாகவே பார்க்கப்படுகிறது. முன்னாள் போராளிகளில் பலர் புனர்வாழ்வு என்ற பெயரில் மனமாற்றப்பட்டு புலம் பெயர் தேசங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமிழர் தேசியத்தை கருவறுக்கும் வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 150 க்கு மேற்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கமே வெளிப்படையாக கூறியது. இதை விட ஏனைய ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, வட அமெரிக்கா நாடுகளான கனடா, அமெரிக்காவிற்கும் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் பல சிறிய அமைப்புகளிற்குள் ஊடுருவி அமைப்புக்களை உடைக்கும் வேலையை செய்கின்றார்கள். இவர்களிற்கு வர்த்தக நிலையங்கள், சுய தொழில்கள் என பலதரப்பட்ட முதலீடுகளை இலங்கை அரசாங்கத்தின் பின்னணியுடனும், குமரன் பத்மநாதனின்( K.P) தொடர்புள்ள நபர்களும் செய்து கொடுத்து தமது நாசகார வேலையை நேர்த்தியாக செய்துவருகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.
துவாரகா தொடர்பாக மாவீரர் நாளில் உரையாற்றுவார் என்று சொல்லி நிதி திரட்டிய அப்துல்லா அவருக்கு உடந்தையாக சேரமான் இருந்தாலும் பிரித்தானிய தமிழர் வரலாற்று மையத்தில் இருந்து செயற்பட்டு வந்த நிமலனுக்கு இந்த விடயத்தில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவரை வரலாற்று மையம் பாதுகாக்கிறதா? IBC யின்உண்மையின் தரிசனத்தில் தன்னிலை விளக்கம் இவர் கொடுக்க வந்திருந்தார். அங்கு நிராஜ் டேவிட் நிமலன், சங்கீதன், புலவர் இம் மூவரின் கைகளை குளோசப் வைத்தது எதற்காக? உண்மை சொல்லும் போது கைகள் எப்படி இருக்கும் என்பது மீடியாவுடன் பயணிப்போருக்கு தெரியும்.
தலைவரின் குடும்பம் இருக்கலாம் என ஆய்வு செய்ய சென்றோம் என சொல்பவர்கள் உங்களுக்கு அவர்களின் மரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என்பதே வெளிப்படை.
இது இவ்வாறு இருக்க நாளை நீங்கள் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு உண்டியல் குலுக்குவீர்கள்!
எல்லாவற்றிற்கும் மேலாக தற்பொழுது தேசியத் தலைவரை பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் வதந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கும் வேலையிலும், விடுதலைப்புலிகளால் சில அமைப்புக்கள், மற்றும் தனி நபர்களின் பெயர்களில் முதலீடு செய்யப்பட்ட பொதுச் சொத்துக்களை அபகரிக்கும் வேலையையும் செய்து வருகின்றார்கள்.
இன்னும் ஒரு பகுதியினர் தேசியத்தலைவர் இருக்கிறார் என்றும், மற்றைய பகுதியினர் தலைவர் வீரமரணம் என்றும், அவருக்கான வீரவணக்க நிகழ்வு செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பழைய அமைப்புக்களுக்கு தலைவர் வீரச்சாவு என அறிவித்தால் பினாமிகள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
புதிய அமைப்புகள், முன்னாள் போராளிகள் நாம் தான் இனி எல்லாம் என செயற்பட எத்தனிக்கும்.
மக்கள் மட்டும் அனாதைகளாக நம்பிக்கை கெட்டு நிற்பார்கள்.
கனடாவில் புதுவை தாசனின் கவி வரி சிறப்பாக வந்தது. கூட்டமாய் வந்து குலைக்கின்றீர் நாய்களா? புலிகளா? யாரை பேசச் சொன்னோம் யாரார் வந்து பேசுகின்றீர்? என்று தொடர்ந்து…..சென்றது.
தெளிவான விளக்கம் சொல்ல அருகில் இருந்தோர் அமைதியாக இருக்கின்றனர். பூனைகள் சில புலிகளாக நடத்தும் நாடகத்தை மக்கள் விழிப்பாக பாருங்கள்.
தலைவரின் இருப்பு பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்கும் தகுதியில்லை. துரோக கும்பல்கள் இனம்காணப்பட்டு சமுதாயத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். எங்கள் உன்னதமான தலைவர் தனக்காகவோ தனது குடும்பத்திற்காகவோ வாழ்ந்தவரில்லை. எல்லோரையும் தனது குடும்பமாக நேசித்தவர். தலைவர் மக்களை விட்டு தப்பி ஓடிவிட்டார், கோளையென்றும் துரோகி என்றும் கூறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் தலைவர் தனக்கு பின் ஒருவரை இனம் காட்டவில்லை, எல்லாவற்றையும் முன்பே தீர்கதரிசனமாக முடிவெடுக்கும் தேசியத்தலைவரை பல நாடுகளின் சதியில் இருந்து பாதுகாப்பதன் மூலம்தான் எம்மின விடுதலையை அடையலாமென இறுதிவரை நின்ற முன்னிலை தளபதிகளும் போராளிகளும் நினைத்திருக்கலாம். அந்த தேவையும் கடமையும் இருக்கிறது என கடந்த 14 வருடங்களில் பட்ட அனுபவங்களில் கண்கூடாக பார்க்கின்றோம். விடுதலைக்காக ஆகுதியாகிய எமது காவல் தெய்வங்களின் கனவு நனவாக வேண்டுமென்றால் தேசியத்தலைவர் குடும்பம் பற்றியோ தளபதிமார்கள் பற்றிய ஆராய்ச்சியையோ தவிர்ப்பது நல்லது. இதனை கையில் எடுப்பவர்கள் தங்களிற்கு தாங்களே குழி பறிக்க போகிறார்கள் என்பதுதான் உண்மை. தேசியத்தலைவரை மனதில் நிறுத்தி
மாவீரர் கண்ட கனவை நனவாக்க, தமிழ் தேசியத்தை நோக்கிஅடுத்த கட்ட நகர்வை இந்த கும்பலோ தமிழினமோ செய்யவில்லை. அதை நோக்கி மக்கள் செல்ல இக்கும்பல் விடவுமில்லை. பொது எதிரிக்கு உடந்தையாக இருந்து செயல்படுபவர்கள் தம்மை திருத்தி தேசியத்தை நோக்கிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் அல்லது விலக வேண்டும்.
தேசியத் தலைவர் குடும்பத்தை வைத்து முள்ளமாரி
வேலை செய்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட கும்பலுக்குள் இலங்கை புலனாய்வு இந்தய புலனாய்வு சம்பந்தப்பட்டதாக செய்தி வந்தது அனைவரும் அறிந்ததே.
இலங்கை புலனாய்வு அமைப்பு தலைவர் எங்கே? அவரது குடும்பம் எங்கே பொட்டம்மான் எங்கே? என்ற விசாரணை மட்டுமே முக்கியமானவர்களிடம் கேட்டு உள்ளனர். இது இவ்வாறு இருக்க இந்த முன்னாள் போராளிகள் என்ன புலனாய்வு செய்து தலைவர் இருப்பு பற்றி எந்த ஆதாரத்தினை கண்டுபிடித்தார்கள்?
மக்களே உசார்,
14 வருடம் வனவாசம் செய்து காத்திருந்து ஆதாரமற்ற செய்திகளை கொண்டு வருபவர்களை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையிலேயே உள்ளது.
தேசியத்தலைவர் எல்லோர் மனங்களிலும் குடியிருக்கிறார், அதற்கான ஆராய்ச்சி தேவையற்றது.
இயக்கத்தால் கலைக்கப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு காட்டி கொடுத்தவர்கள், இலங்கை அரசாங்கத்தால் முகவர்களாக ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டவர்கள், இலங்கை அரசாங்கத்தினுடன் சேர்த்து இயங்கும் துரோகிகளினால் வியாபார நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கு உதவி பெற்றவர்கள், இயக்கத்தினால் புலம்பெயர் தேசத்திற்கு அனுப்பப்பட்டு தப்பியோடியவர்கள், புலம்பெயர் தேசத்திற்கு வேலைத்திட்டத்திட்டமாக அனுப்பி இன்று
சுகபோகமாக வாழ்ந்து தேசியத்தில் இருந்து விலகியிருப்போர் வரலாற்று மையத்துக்குள் படம் ஓட்டுபவர்களென அனைவரின் தரவுகளும் இங்கு ஆய்வு குட்படுத்தப்பட்டு விரைவில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.
லண்டனில் இருந்து
-கருங்குருவி-