கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                    

இளங்கோ

    கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                      முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதானென்று, அதற்கு உடந்தையாக இருந்த ராஜபக்ச அரசும் மற்றும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று, முதன் முதலில் அறிவித்த கனடிய அரசை கேவலப்படுத்திய CTC அமைப்பினர் !

இவர்கள் வீட்டிற்க்கு நாட்டிற்கு உண்மையாக இல்லாதவர்கள் எப்படி அடைக்கலம் தந்த நாட்டிற்கு உண்மையாக இருப்பார்கள்???     கனடா அரசாங்கத்தால் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ராஐபக்சா குடும்பத்தினருக்கு கனடா வருவதற்கு தடை போடப்பட்டதோடு அவர்களின் சொத்துக்கள் கனடாவுக்குள் வைத்திருந்தாலோ அல்லது தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தாலோ முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் இன்று கனடாவின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கனடிய தமிழர் பேரவை ( CTC) அமைப்பினர் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் ஏற்கனமே தனி நபர் ஒழுக்கமற்றவர்களென மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் அழகுராணிப் போட்டிகள், நிகழ்வுகள் செய்து தேசியத்தையும் தமிழரின் கலாச்சாரத்தையும் சிதைக்கும் வேலையையும் செய்து வருகின்றனர், இதற்கு சில அமைப்புக்களும் ஊடகங்களும், ஊடகப் போரளி என திரிபவர்களும் எலும்பிற்கு ஆசைப்பட்டு செம்பு தூக்குகிறார்களென பலரும் கருத்து தெரிவித்துவருகின்றார்கள்.  மேலும் இவர்கள் இலங்கை இந்தியாவிலும் பல நடிகைகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதோடு அவர்களை தேவைக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் ஏற்கனமே ஊடகங்களில் வந்தது யாவரும் அறிந்ததே, அமைப்பின் முன்னாள் தலைவர் “ராஜ்” அவர்கள், அந்த அமைப்பின் பிரதிநிதியாக இலங்கைக்கு சென்று, 1 லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலை செய்த மகிந்த ராஜபக்சாவோடு உணவருந்தி புகைப்படம் எடுத்த நிகழ்வை பார்க்கும் போது, கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பு கனடாவில் தேவையா ?  அத்துடன் CTC, உலகத்தமிழர் பேரவை,நோர்வே தமிழ் மன்றம் மற்றும் சில தேசத்துரோகிகள் சேர்ந்து தமிழருக்கான தீர்வு பற்றி முடிவு செய்ய யார் உரிமை கொடுத்தது? இவர்கள் யாவரும் மக்கள் மத்தியில் இனம் காட்டப்படுவதோடு இவர்களின் நிகழ்வுகளை தவிர்த்து தூக்கியெறியப்பட வேண்டுமென பல ஊடகங்களும் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிகழ்வை பார்க்கும் போது, கனடியத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் எவ்வாறு அமையப் போகின்றது மற்றும் இந்த அமைப்பை இன மானமுள்ள கனடியத் தமிழர்கள் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டுமென தேசத்தின்பால் செயல்படும் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *