2009 விடுதலைப் புலிகள் ஆயுதம் மௌனித்ததன் பின்னர் தாங்கள்தான் விடுதலைப் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என விடுதலைப் புலிகளின் சொத்துக்களையும் முதலீடுகளையும் கையகப்படுத்திக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு மீண்டும் அதே கூட்டம் தேசிய நினைவு எழுச்சி நாள் ( 2023 ) என நிதி சேகரிப்பில் கொள்ளைக்கூட்டம் இறங்கியுள்ளதாக கனடாவில் உள்ள பல அமைப்புகள் மற்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில் கனடா நாட்டில் மாவீரர் தினம் செய்வதற்கு, தமிழர் தேசியக் கொடி ஏற்றுவதற்க்கு தடை இல்லை, இந்த சமூக விரோதிகள் அன்னிய சக்திகளோடு கூட்டு சேர்ந்து தமிழ் தேசியத்தை நீர்த்து போகும் வேலையை செய்வதோடு தேசியத்திற்க்காக உழைப்பவர்களிற்க்கு பல வழிகளிலும் தடையாக உள்ளார்களாம். 2009 ம் ஆண்டில் இருந்து மாவீரர் தினத்தை தேசிய நினைவு எழுச்சி நாளாக மாற்றுவதற்க்கு இவர்கள் யார் ? தேசியத்திற்க்காக இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ? இதன் பின்னனியில் முக்கியமாக கனடாவில் திரையரங்கு நடத்தி வரும் அசோகன், உலகத்தமிழர் பத்திரிகை நடத்தி வரும் கமல், பெற்றோல் நிலையங்களின் உரிமையாளர் தமிழ், உலகத்தமிழர் என்ற போர்வையில் விளையாட்டுக்களை நடத்தி வரும் காந்தன், ஏசியன் துணிக்கடை உரிமையாளர் அரு , தொழிலதிபர் மெல்வின் ஆகியோர் அடையளாப்படுத்தப்பட்டதோடு இவர்கள் அனைவரும் உலகத்தமிழர் அமைப்பை சேர்ந்தவர்கள், இவர்களோடு இச் செயல்பாடுகளில் செயல்படுபவர்கள் மற்றும் N.C.C.T அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மாவீரர் நிகழ்வுகளுக்கு எதிராக செயல்படுவார்களானால் அவர்களின் பெயர்களும் ஆதாரத்தோடு மக்கள் மத்தியில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர். உங்கள் பார்வைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கானொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
( நன்றி – கனடா தேசிய செயல்பாட்டளர்கள் )