கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என ஆயுதப் போராட்டம் நடைபெற்றது
இலங்கை ஆயுதப் போராட்ட காலத்தில் இந்தியா தலையிட்டு தமிழருக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யக் கூடியதாக இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டு வந்தது. இந்த 13-வது திருத்தம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள்
முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மத்திய அரசின் இலங்கை கொள்கையாக, 13-வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.