பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்!

May 27.2025 – கனடா.

பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்!

இலங்கை அரசின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நினைவுச் சின்னமான பிராம்டன் நினைவுத்தூபியை சிதைக்கும் இனவெறி நோக்கோடு 26.05.2025 அதிகாலை 2-3 மணியளவில் இரு முகமூடி அணிந்த, கறுப்பு உடைகள் தரித்த சிறிலங்கா அரச புலனாய்வின் கைக்கூலிகளினால் தூபி மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தமிழினமாக  வன்மையாக கண்டிப்போம்!

CTC இன் அலுவலகம், தமிழ்வண் வானொலிக்கு சொந்தமான ஒலிபரப்பு செய்யும் வாகனம் ஆகியவற்றை எரித்த குழுவினரே பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைப்புடன் தொடர்புபட்டுள்ளதாக பலரால் சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களை வழிநடத்தும் நபர் 2009 இற்கு முன்னர் இலங்கையின் புலனாய்வுத் துறையுடன் செயற்பட்டவராக அறியப்படுகிறது. ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் 2016 இல் ஐரோப்பாக்கு அனுப்பப்பட்டு, அங்கு பிரபல ஆங்கில ஊடகத்துறை ஒன்றை இயக்குபவரும், இலங்கை மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பவருடன் சேர்ந்து அமைப்புக்களை உடைக்கும் வேலையை பார்த்துவிட்டு, தற்பொழுது கனடாவில் இருந்தும் அதே வேலையை செய்து வருகின்றார்.

அண்மையில் ஐரோப்பாவில் இருந்து இலங்கை மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புக்களுடன் தொடர்பில் இயங்கும் நபர், கனடாவுக்கும் சென்று பல ஆலோசனைகள் வழங்கியதுடன் மாமனும் மருமகனுமாக இலங்கை தூதுவருடனும், சிங்கள புத்திஜீவிகளுடனும் சந்திப்புக்களை செய்துள்ளனர்.

நினைவுத்தூபி உடைப்பில் ஈடுபட்டவர்கள்
கனடியக் காவல்துறையினரால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி மொழியப்பட்டுள்ளது!, இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் நாடுகடத்தப்படலாம் எனவும் பேசப்படுகின்றது.

வெறித்தனமான இத் தாக்குதலில் மலர்ச் சாடிகளும் மின் விளக்குகளும் சிதைக்கப்பட்டதாக அறிகின்றோம். எது எப்படியோ? காவல்துறையினரின் விசாரணை முடிவில் உண்மை விரைவில் வெளிவரத்தான் போகின்றது. இப்படிப்பட்ட ஒரு கேவலமான காரியத்தை யார் செய்திருந்தாலும் அவர்கள் நிச்சயமாக தண்டனை பெறவேண்டியவர்களே!

உணர்வுள்ள தொண்டர்கள் அந்தச் சிதைவுகளைத் தற்போதும் சரி செய்துகொண்டு இருப்பதாக அறியப்படுகின்றது.

 

ஒரு இனப்படுகொலை நினைவகத்தையே இனவெறியோடு தாக்குபவர்கள் தமிழின மக்களை கொலைவெறியோடு இன்றும் அழிக்கத் துடிப்பதையே இந்தச் கொடிய செயல் சுட்டி நிற்கின்றது!

இச்செயலும் ஈழத் தமிழினம் எம் மண்ணில் பாதுகாப்பாக இன்றும் சுதந்திரமாக வாழ முடியாது என்பதற்கான சான்றாகவே உள்ளது!

வெறுமனே இவர்களை கண்டிப்பதோடு நின்று விடாமல் ஈனர்களையும் அவர்களின் செயல்களையும் இனமாக நின்று முறியடிப்பதோடு, அவர்களை மக்கள்முன் விரைவில் அம்பலப்படுத்துவோம் என தமிழினச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *