கனடா பாராளுமன்றத்தினுள் தமிழர் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிதா நாதன்.

 

சசி -22.05.2025

ஜெனிதா நாதன் கடந்த நான்கு வருடங்களாக மார்க்கம் மாநகர சபையில் உள்ள, ஒரு பகுதி (வாட் கவுன்சிலர்) நகர சபை உறுப்பினராக இருந்ததுடன் தாயகம் நோக்கிய பல செயற்பாடுகளிலும் மிகவும் சிறப்பாக பணி செய்ததுடன், கனடாவில் இருக்கும் கனடிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழர் தேசிய பேரவை, அரசியல் துறை மற்றும் பல அமைப்புக்களுடன் மிக நெருக்கமாக தொடர்பிலிருந்து, தாயகத்தை நோக்கிய தேசிய செயற்பாட்டில் செயலாற்றி இருந்தார். அதுமட்டுமின்றி தமிழர் தாயகத்தை நோக்கி எடுக்கப்படும் நியாயமான வேலைத்திட்டங்களிலும் போராட்டங்களிலும், தேசியச் செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து முன் நின்று அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்து அரும் பணியாற்றி வந்துள்ளார்.

தேர்தல் காலகட்டங்களில் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் சேர்ந்து இயங்கும் சில அமைப்புகள் ஊடகங்களிலும் நேரடியாகவும், மிரட்டல்களையும், எதிராக பல பொய் பரப்புரைகளை செய்திருந்தும் அவற்றை எல்லாம் முறியடித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றிக்கு இவர் ஆற்றிய பணிகளும், இனமாக நின்ற கனடிய மக்களுமே காரணமாகும்.

.

.

இவர் கடந்த காலங்களில் மக்களுடன் இணைந்து பல வேலை திட்டங்களை வெற்றிகரமாக செய்து இருந்ததனால் மக்கள் இவரை பராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்கள், இனி வரும் காலங்களிலும் இவரின் குரல் தமிழ் தேசியத்தை நோக்கி, பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

.

கடந்த 21-5-2025 அன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தார். இந்நிகழ்வில் இவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் இவரின் வெற்றிக்காக பாடுபட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கனடாவாழ் தமிழ் மக்களுடன் சேர்ந்து “தேசம்” பத்திரிகையும் கனடிய பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட ஜெனிதா நேத்தன், கரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *