சுபன்ஜீ – பிரித்தானியா 14.04.2025
.
.
பிரித்தானியாவில் உள்ள அரசியல் துறையைச் சேர்ந்த நிருவன் என அழைக்கப்படும் நபர் நேரத்திற்கு நேரம் முரணான பதிவுகளை பதிவு செய்து பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் குழப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு வருகின்றார். இவர் கடந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி தேசியத் தலைவருக்கு லண்டனில் உள்ள நதிக்கரை ஓரத்தில் வீரவணக்க நிகழ்வு செய்துவிட்டு, தற்பொழுது 2025 ல் தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு செய்வதற்கான காலம் வரவில்லை என அறிக்கை விட்டுக் கொண்டும் புலம்பிக் கொண்டும் திரிகின்றார்.
கடந்த வருடம் இவர் தலைமையில் தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு செய்யும்போது இவருக்கு தெரியாதோ தேசியத் தலைவருக்கு வீர வணக்க நிகழ்வு செய்வதற்கு இது காலம் இல்லை என!. கடந்த வருடம் இவர்கள் வீர வணக்க நிகழ்வு செய்துவிட்டு இந்த வருடம் செய்பவர்களுக்கு எதிராக அறிக்கைகள விடுவதன் நோக்கம் என்ன?
அத்துடன் தற்பொழுது பல ஆண்டு காலமாக விளையாட்டுத்துறை நடத்தி வந்தவர்களை இந்த வருடம் விளையாட்டுப்போட்டி செய்யாமல் குழப்புவதற்காக இவர் ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு முன்பிருந்த நிர்வாகத்தை உடைத்து தாங்கள் நடத்த போவதாக முயற்சிகள் செய்து வருகின்றார். இவர்களின் நோக்கம் விளையாட்டு துறையை மேம்படுத்துவதா விளையாட்டுத்துறையை கையில் எடுத்து நிதி சேகரிப்பதா?
.
இது மட்டுமில்லாமல் தமிழ் பாடசாலைகளை ஆரம்பித்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து அது மூலம் பணம் பார்த்து வருகின்றார். குறுகிய காலத்திற்க்குள் இரண்டு கடைகள் திறந்த்துடன் சில வீடுகளையும் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். குறுகிய காலத்தில் இது எப்படி சாத்நியமாகியது. சிந்தித்து பாருங்கள்!
யார் இந்த நிருபன் இவர் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இயக்கத்திலிருந்து ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கி நாடு கடத்தப்பட்டவர். நாடு கடத்தப்பட்ட இவர் இன்றைக்கு தான்தான் தேசியத் தலைவரின் பிள்ளைகளின் பாதுகாவலராக இருந்ததாக கதை விட்டு வருகின்றார். மக்களே விழிப்புடன் செயல்பட்டு இவர் போன்றவருக்கு நிதி உதவி செய்து இவரை மென்மேலும் முதலாளி ஆக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி