மார்ச் மாதம் எட்டாம் திகதி எங்களால் வெளியிடப்பட்ட செய்தியில், தலைவரின் வீரவணக்க நிகழ்வை மூன்று அணியினர் நடத்துவதாகவும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறியிருந்தோம்.
நாங்கள் கூறியது போல் தற்போது நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக மூன்று அணிகளும், தாயகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தலைவருக்கான வீர வணக்கத்தை மே மாதம் 18 ஆம் திகதி செய்வதற்கான ஒழுங்குகளை கூடுதலான வரை செய்து முடித்து விட்டார்கள். இவர்களின் நோக்கம் இலங்கையில் இனப்படுகொலை நடந்த மே 18 ஐ இல்லாமல் செய்வதே முதன்மையான காரணம் ஆகும். அத்துடன் தமிழீழத் தேசியத் தலைவரை பயங்கரவாதியாக இலங்கை இந்திய அரசுகள் உலக நாடுகளுக்கு காட்டுவதற்கு, இந்த மூன்று குழுவினரும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் செயற்பட்டு வருவது பலரும் அறிந்ததே!
காலத்தின் தேவை கருதி இவர்களின் முகங்களை மக்களுக்கு வெளிக்காட்ட வேண்டியது அவசியமான ஒன்றாகும்!
மக்களே விழிப்புடன் செயல்பட்டு இவர்களின் துரோகத்தை நாம் ஒற்றுமையாக முறியடித்து உலகுக்கு மே 18 ஐ இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்திக் காட்டுவதுடன், தமிழீழத் தேசிய தலைவரை பயங்கரவாதியாக காட்ட எடுக்கும் முயற்சியையும் தடுப்போம்!
1. மே மாதம் 19ம் நாளை
இரண்டு வருடத்துக்கு முதல் “காலக்கடமை” என்ற ஒன்றைத் தொடங்கி தலைவரின் வீரச்சாவை அறிவிக்க போகிறோம் என்றார்கள்.
பின்னர் இரண்டு அணியாக பிரிந்து தமிழரசன் தலமையில் ஒரு அணி மே 17 வீரச்சாவு என்றார்கள்.
இவர்களின் பின்னனி பற்றிய சிறு விளக்கம்.
இந்திய புலனாய்வின் செல்லப்பிள்ளை சங்கீதன் என்கின்ற தயாபரன் இலங்கை புலனாய்வின் செல்லப்பிள்ளை ஜெயார்த்தன், மற்றும் கடல்புலி புலவர், இந்த கூட்டத்தில் அறிவில்லாத அறிவு மணி, இந்திய புலனாய்வின் மற்றைய நண்பன் பிரசாத் வாத்தி போராளி கட்டமைப்பு என்று உலகெங்கும் மீளமைப்பு என்று சொல்லி அமைப்பின் தடைக்கு சூத்திரதாரி மற்றும் பாலாவாத்தி (வெடி மாஸ்ரர்)




.
(இவர்களில் பலர் காட்டிக் கொடுத்தும், பல போராளிகளின் மறைவிற்கும் துணை நின்றதுடன், நாட்டை விட்டு புலனாய்வின் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளிற்கு வந்தவர்கள்)
சங்கீதன் அணி மே 19 என்றார்கள், பிறகு தலைவரின் வீரச்சாவை சமராய்வு செய்யபோகிறோம் என்றார்கள். இதற்கு இடையில் தலைவரின் DNA சான்றை இந்தியா, இலங்கை அரசு உறுதிப்படுத்தினால் தான் நம்புவோம் என்றார்கள்.
அதன்பிறகு பல எதிர்ப்புகள் வர இப்போது மே 18 என்று வந்து பிரமாண்டமாக செய்ய போகிறோம் என நிதி சேர்ப்பில் வந்து நிற்கிறார்கள்.
இந்த டம்மி மாவீரர் பணிமனை, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை, காலக்கடமை எல்லாம் இந்த உலகத்தமிழர் வரலாற்று மையத்துக்கூடாக தான் இயங்குகிறது.
உலகத்தமிழர் வரலாற்று மையம் இலங்கை புலனாய்வால் உருவாக்கப்பட்டிருந்து தற்போது இந்தியாவின் கையாள்கையிலும் உள்ளதற்கு எம்மிடம் சான்று உள்ளது. இது பணத்தை விழுங்கவும், வாக்கு மூலங்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கவும், இனப்படுகொலையை வெள்ளையடிக்கவும் செயற்படும் ஒரு கூட்டம் இதை மனதில் இருத்தி செயற்படுவோம்!
2. மே மாதம் 17ஆம் தேதி.
இக்குழுவில் இருப்பவர்கள் பற்றியும் சில தகவல்கள்
தமிழரசன் இவர் இறுதி வரை இரட்னம் மாஸ்டருடன் நின்ற கௌசல்யன் தான் தான் என்றும், ஐரோப்பாவில் இயங்கும் பல அமைப்புகளுக்குள் உட்பகுந்து அந்த அமைப்புகளை உடைத்து சின்னாபின்னம் ஆக்கி இன்றைக்கு பல அமைப்புகளாக உருவெடுத்து பல பிரச்சனைகள் நடந்து வருவதற்கும் சூத்திரதாரியாக இருந்த வருகின்றார். (இவர் முல்லை ஈசனின் சகோதரன் ஆவார். முல்லை ஈசன் இலங்கை இராணுவ புலனாய்வுடன் இணைந்து செயற்படும் ஒலிப்பதிவு வெளிவந்தது மறந்து இருக்க மாட்டீர்கள்.)

தயா மோகன் இவர் இலங்கை இந்திய புலனாய்வு ரோவுடன் நீண்ட கால மிக நெருங்கிய நண்பர் அத்துடன் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் தலைவருக்கான வீர வணக்க நிகழ்வை சூம் இணைய வழியாக செய்ததுடன் கடந்த வருடம் மாவீரர் தினத்திற்கு டென்மார்க் சென்று கார்த்திக் மனோகரனுடன் சேர்ந்து தலைவரின் வீரவரணம் மே-18 என்று வீரவணக்க நிகழ்வு செய்ததுடன்.(அப்பயணக் காணொளியில் குடியும், கும்மாளமாக மகிழ்வுடன் சென்றதை மறந்து இருக்க மாட்டீர்கள்) இன்றைக்கு தலைவரின் வீர மரணம் மே 17 அன்று செய்வதற்கான அணியுடன் சேர்ந்து செயற்படுகின்றார். ஒரு தலைவரின் வீர மரணத்தை இந்த துரோகி தயாமோகன் எத்தனை நாளாக உலகுக்கு காட்ட முயற்சி செய்கின்றார். இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் பல உள்ளன. இவர் போன்றவர்கள் உடனடியாக மக்கள் முன்னிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்.

.
ரவி எனப்படும் ரவிசங்கர் இவர் தன்னை ரோமியோ ஒன்றும் கூறி வருவதுடன் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் K.P யுடன் எதிரும் புதிருமாக இருந்து செயல்பட்டவர் இன்று இலங்கை புலனாய்வுடன் இயங்கும் K.P க்கு குடை பிடிப்பதுடன் அவரின் வழி நடத்தலில் பல குழப்ப வேலைகளை பலநாடுகளில் செய்வதற்கான முயற்சியில் விடப்பட்டுள்ளார். 2009க்கு முன்னர் இயக்கத்தின் பினாமியாக செயற்பட்ட இவர் 2009 இதற்குப் பின்னர் பல மில்லியன் டாலர் பெறுமதியான பொதுச் சொத்தினை ஆட்டையை போட்டு இன்று தன்னை நல்லவனாக வல்லவனாக காட்டி வருவதோடு தலைவரின் நெருங்கிய தொடர்பில் மே 16 ஆம. திகதிவரை இருந்ததுடன், தலைவரை காப்பாற்ற சர்வதேச கடல் எல்லையில் இருந்து வள்ளம் அனுப்பியதாகவும் கூறி வருவதுடன், தான் சொல்லுவது தான் சரி என்றும் தலைவருக்கு வீர வணக்கம் செலுத்தி விட்டு தங்களின் நெருங்கிய ஒருவரை தமிழினத் தலைவர் ஆக்குவதற்கான முயற்சியினை செய்த வருகின்றார்

.
முன்னாள் சட்டவாளர்கள், நீதியாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு லண்டனில் இருந்து மதிவர்மன் ஆஸ்திரேலியாவில் இருந்து செந்தூர் அன்பன் போன்றவர்களும் இவர்களுடன் சேர்ந்து செயல்படுகின்றனர் இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காக அனுப்பப்பட்டு திரும்ப தாயகம் போகாமல் ஒளிந்து கொண்டவர்கள் இப்போது இந்த எலிகள் புலிகளாக திகதி நிர்ணயம் செய்து நிகழ்வு செய்ய கிளம்பியுள்ளார்கள்.
மற்றும் நடுநிலைவாதிகளான, வைத்தியர்கள் என்று கூறிக்கொண்டு வாமன், கனடா முரளி, என பலரும் இவர்களுடன் சேர்ந்து தலைவருக்கு என்ன நடந்தது என பகுப்பாய்வு கட்டுக் கதைகள் உருட்டி வருகின்றார்கள்.
மே 18
இக்குழுவில் செயற்படும் முல்லை ராஜு இவர் விடுதலைப் புலிகளால் தனி நபர் நடத்தை காரணமாக பல தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நாடு கடத்தப்பட்டவர்.
சுக்குளா எனப்படும் அற்புதன். இவர் இந்திய படைகள் இலங்கையில் இருந்த காலத்தில் பல காட்டிக் கொடுப்புகளை செய்ததுடன் அக்காலகட்டத்தில் பல போராளிகளின் மறைவுக்கும் காரணமானவர் இவரும் விடுதலைப் புலிகளினால் பல தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தாயகத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்.

.
எம்.ஜி.ஆர் எனப்படும் இவரும் இயக்கத்திலிருந்து தப்பி ஓடி பிரித்தானியாவில் வசித்து வருவதுடன் தன்னை முன்னாள் போராளி என்றும் ஆரம்பகால உறுப்பினர் என்றும் கதைகள் பல விட்டுக்கொண்டு தன்னை ஒரு கிங்மேக்கர் ஆக லண்டனில் காட்டி வர முயற்சி செய்கின்றார்.

.
இலங்கை இந்தியா புலனாய்வுடன் நேரடியாக வேலை செய்யும் மற்றைய துரோகிகளின் பட்டியல் தொடரும்…..