போராளியின் குரல்!!!
தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக இந்து சமுத்திரத்தில் ஆழுமை செழுத்த துடிக்கும் நாசகார சக்திகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர், இதற்காக பல போராளிகளையும், போராளிகளின் உறவினர்களையும் நயவஞ்சகமாக பயன்படுத்தி பொய்யான பரப்புரைகளை செய்து தாயகத்திலும் , தாய்தமிழகத்திலும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான வேலையை செய்து வருகின்றனர்.
அதே சமயம் இன்றும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் இவர்களை இனம் கண்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மக்கள்முன் இனம் காட்டப்படவும் வேண்டும்.
இந்த ஒற்றுமையை எமது தேசியம் நோக்கிய பயணத்தில் காட்டுவதற்கு முன்னாள் போராளிகளிற்கு தடையாக உள்ளது என்ன?
துரோகத்திற்கு துணை போகின்றவர்களும் துரோகிகளே!!!
திரு. சீமானிற்காக பல நாடுகளிலும் இருந்து பல போராளிகள், பல அமைப்புக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர், இவர்கள் தேசியத் தலைவர் அவர்கள் விட்டு சென்ற போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு ஏன் முயற்சி செய்யவில்லை? இவர்கள் ஒரு சிலர் பதவிக்கும் தற்பெருமைக்கும் ஆசைப்பட்டு போராளிகள் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து ஒருவர் மேல் ஒருவர் சேறு பூசி வருகின்றனர், 2009 இற்கு முன்னர் தேசியத் தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்களாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்க மாட்டார்கள். தேசியத் தலைவரையும் தேசத்தையும் நேசித்தவர்களாக இருந்தால், இவ்வாறு செய்யமாட்டார்கள்,
தேசியத் தலைவர் அவர்கள் வளர்த்த பிள்ளைகள் இப்படி சண்டை போடுவது எமது தேசியத் தலைவரையும் தேசியத் தலைவரின் வளர்ப்பினையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இவர்கள் தங்களைத் திருத்தி சக போராளிகளை வசை பாடுவதை விட்டு ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை நோக்கி கட்டமைபுக்களோடு பயணித்தால் மட்டுமே நாம் எமது இலக்கை அடையெல்லாம்!. போராளிகளாக செயல்படுபவர்கள் இன்னும் எவ்வளவு காலம் இருக்கப்போகின்றீர்கள்? 10,20 வருடத்துக்கு பின்னர் பொய்யான வரலாறுகளை விதைத்துவிட்டா போகப்போகின்றீர்கள்?
தடுப்பில் இருந்து வந்த போராளிகள் தினந்தோறும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள். தடுப்பில் இருந்தவர்களுக்கு தடுப்பு ஊசி என்ற பெயரில் விச ஊசிதான் போடப்பட்டது. அதன் விளைவு ஒரு அளவிற்கு மேல் சிந்திக்க முடியாது, அதற்கு மேலாக சிறிது காலம் செல்ல ஒவ்வொரு உறுப்பாக செயலிளந்து மரணத்தின் வாசலுக்கு கொண்டு போய்விடும். இது எத்தனை பேருக்கு தெரியும்?
தொடர்ந்தும் நாங்கள் இப்படியே ஒற்றுமை இல்லாமல் எங்களிற்குள்ளேயே வன்மத்தை வளர்ப்போமாக இருந்தால், எதிர்கால எமது சந்ததியினருக்கு பிழையான வரலாறுகளை கடத்திச் செல்வதோடு, தமிழ் தேசியத்தை அழிக்க எமது பொது எதிரிகளிற்கும், இன அழிப்பிற்கும் துணை போவதாகவே பார்க்கப்படும்.