வளவன்
13.01.2025
சுவிஸ் ரகுமதி கோமாளிகள் சபா!!!
12.01.25 சூரிச் மாநிலத்தில் சுவிஸ் ரகுபதி கோமாளிகள் சபாவின் தலைமையில் மிக அமைதியான முறையில் “மீண்டும் துவாரகா” என்னும் சரித்திர நாடகம் பற்றிய கலந்துரையாடலும் ஒத்திகையும் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
.
பொது மக்களுக்கும் அரசியல் விரும்பிகளுக்கும் இடையே நடைபெற்ற இந் நிகழ்வில் நாடகம் பற்றிய சந்தேகங்களுக்கும் , சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் எவ்வித மழுப்பல்கள் இன்றி கோமாளிகள் சபா குழுவின் நிர்வாக பொறுப்பாளர் திரு.சுவந்திரன் அவர்களும் திரு.ஆதவன் மாஸ்டர் அவர்களும் நாடகத்தில் துவாரகா பாத்திரத்தின் புதிய நடிகை ( முன்னால் நடிகை தலைமறைவு ) அவர்களும் மிக மிகத் தெளிவாக நாடகம் பற்றிய கேள்விகளிற்கு பதிலளிக்கப்பட்டதாகவும் அடுத்த கட்ட அரங்கேற்றம் பற்றிய தெளிவுட்டலும் நடைபெற்றதாகவும், கேடகப்பட்ட கேள்விகள் அத்தனைக்கும் பொறுமையாகவும் நிதானமாகவும் சபா குழுவினர் பதிலளித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
.
சிரிப்பு கலைஞர்கள் ( நகைச்சுவை ) திரு.ரகுபதி ,திரு. குட்டி ,மாஸ்டர், திரு அப்துல்லா , நம் உறவுக்கு கை கொடுப்போம் கஜன், திரு. நசீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நாடக நடிகை இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் நாடகம் பற்றிய கேள்விகளுக்கான பதில் அளித்ததாகவும் அவர்களோடு கோமாளிகள் சபா உறுப்பினர்களும் இணைந்து பதிலளித்திருந்தார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
இந்த நாடகம் வரலாற்று முக்கியம்வாய்ந்த சரித்திரப் படைப்பாக அமையப்பெற்றுள்ளது என கோமாளிகள் சபாவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்ட போதிலும் பலர் கலந்து கொள்ளவில்லை. சுவிஸ் கோமாலி ரகுபதி சபாவை சேர்ந்த பலரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்திருந்தார்கள்.
கலையை நேசிக்கின்றோம் என்ற பெயர்களில் பலர் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிடுகின்றார்கள். அவர்களில்பலர் கதாபாத்திரங்களாக ஏற்று நிற்கின்றவர்களை விமர்சிக்கின்றார்கள். அவர்கள் இரண்டு பக்கமும் நடுநிலமையை பேணுகின்றவர்களாகவும் அதாவது இருபடகில் கால் வைக்கின்றவர்கள் அல்லது குழப்பங்கள் நிறைந்தவர்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. புதிய நடிகை துவாரகா அவர்கள் முன்னால் நடிகையை மிஞ்சும் அளவுக்கு அசாத்திய திறமைசாலியாக இடைவிடாது இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தாராம்
12.01.25 உங்களோடு கலந்துரையாடிய விடயங்களை பொது வெளியில் கதைக்கலாம் என்கின்ற உறுதி மொழியை சபாவின் தலைவர் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக பொறுப்பாளர் திரு.சுவந்திரன், திரு.ஆதவன் மாஸ்டர் மற்றும் நடிகை பற்றிய உண்மை நிலைகளை மழுங்கடிப்பு செயவதும் வெளியில் பேசாமல் இருப்பதும் ஆபத்தானது .
.
சுவிஸ் நாட்டிற்கான விநியோக உரிமையை ரகுபதி மாமா பொறுப்பெடுத்துள்ளார் என்ற தகவலை நேற்றைய சந்திப்பில் புதிய நடிகை உறுதிப்படுத்தியதாக சந்திப்பில் கலந்து கொண்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது .
மேலதிக தொடர்புகளுக்கும் உங்கள் சந்தேகங்களுக்கும் மேலே குறிப்பிட்ட பெயர்களை உடையவர்களோடு நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இப்பதிவானது உண்மை நிலையை மட்டும் எடுத்துச் சொல்லும் பதிவாக அமைகின்றது. வீண் விவாதங்களுக்கானதல்ல
உங்கள் விவாதங்களை முன் வைப்பதற்காகவே 12.01.2025 உங்களை அழைத்திருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..