தமிழரின் வரலாறுகளை மாற்றி இளையோரை திசை திருப்பும் முயற்சியில் பொன்னையா விவேகானந்தன், இவருக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியில் கனடா வான் தமிழ்ச் சங்கம்!!!

தமிழரின் வரலாறுகளை மாற்றி இளையோரை திசை திருப்பும் முயற்சியில் பொன்னையா விவேகானந்தன், இவருக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியில் கனடா வான் தமிழ்ச் சங்கம்!!!

.

கனடாவில் கனடிய அரசாங்கத்தால் ஜனவரி மாசம் தமிழருக்குரிய மாதமாக பிறகடனப்படுத்தியுள்ள போதிலும் கனடாவில் வாழும் படிச்ச முட்டாள் ஆகிய பொன்னையா விவேகானந்தன் போன்றோர் தாங்கள் தான் தமிழரின் அடையாளம் என ஒரு சிலருடன் சேர்ந்து தவறான பாதையில் இளையோரை கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். தமிழருக்கான ஜனவரி மாசத்தில் தமிழருக்கான கொடியென பிழையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடியினை கனடாவில் உள்ள நகரங்களில் ஏற்றுவதற்கு மேடை தேடி அலையும் பொன்னையா விவேகானந்தன் முயற்சி எடுத்து வருகின்றர். இவரும் அறிவகம் அமைப்பினரும் சேர்ந்து கொடியினை உருவாக்குவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது. இவர்கள் உலகெங்கும் வாழும் தமிழரின் பிரதிநிதியாக நியமித்தது யார் இவர்கள் கனவு உலகத்தில் வாழ்கின்றார்கள்.

.

இவர்கள் எழும்பிற்கு ஆசைப்பட்டு தமிழரின் வரலாறுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். கனடாவில் மரபுத் திங்களையும் ஜனவரி மாசம் தமிழரின் மாதமாக கனடா அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்த திரு. நீதன் சான் அவர்களே இன்றைக்கு தவறான கொடிகளை ஏற்றி வரலாற்று தவறு செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒதுங்கி இருக்கும் போது, கண்ட இடத்திலும் இருந்து எழும்பும் விவேகானந்தன் போன்றோரின் நோக்கம் நகரங்கள் தோறும் பிழையான கொடியினை ஏற்றி அடையாளங்களை மழுங்கடிக்க வைப்பதே !!

.

.

இதற்கு வெள்ளை அடிப்பது போல் கனடா வான் தமிழ் சங்கத்தினர். வான் நகரத்தில் பிழையான கொடியினை ஏற்றுவதற்கு வரலாறு தெரியாத உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகம் பின் நிற்பதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்கள் வரலாறுகளை படித்து தங்களை திருத்தி கொள்ள வேண்டும். பிழையான வரலாறுகளை கொண்டு செல்பவர்களுக்கு துணையாக நிற்பவர்களும் குற்றவாளிகளே.

 

கனடா தமிழ் சமூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *