திகதி: 25 / 12 / 2025
போலி WTM நிர்வாகிகளிற்கும் NCCT அமைப்பினருக்கும் இறுதி எச்சரிக்கை !!! என்ற தலைப்பில் கனடாவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்.
கனடா கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தின் மேல், போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அந்த நிர்வாகத்தை முழுமையாக அகற்றிவிட்டு, ஆட்டையை போட திட்டம் போட்டிருக்கும் “கனடா உலகத்தமிழர் அமைப்பினர் மற்றும் NCCT அமைப்பினர் ” (“WTM, NCCT” )!!!
முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் இருந்த தேசியத்தின் பல மில்லியன் பெறுமதியான பல வகையான சொத்துக்களை ஆட்டையை போட்டு வைத்திருக்கும் இந்த WTM மற்றும் NCCTஅமைப்பின் போலி நிர்வாகிகளிற்கு, என்ன தகுதியிருக்கின்றது கனடா கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தை அகற்றுவதற்கு ?
.
தற்பொழுது இந்த போலி WTM அமைப்பினர் மற்றும் NCCT அமைப்பினர் தங்களைத் தாங்களே போலி புனிதர்களாக மாற்றிக் கொண்டு, கோயில் யாப்பு விதிமுறைகளைப் பற்றி பேசி, கோயில் நிர்வாகம் தொடர்ச்சியாக இருக்க முடியாதென்று, பொதுவெளியில் போலி குற்றச்சாட்டுக்களை பேசி வருகின்றார்கள். இந்த போலித் தேசியம் பேசும் புனிதர்கள் எந்த யாப்பை பின்பற்றுகின்றார்கள்? முதலில் இவர்கள் வைத்திருக்கும் யாப்பில் உள்ளவற்றை படித்து, அதன்படி தங்களை மாற்றிக்கொள்ளட்டும்!
பல வருடங்களாக கோயிலின் புதிய கட்டுமான பணிகள் இருந்த படியால், அந்த நிர்வாகம் தொடர்ச்சியாக பயணிக்க, கோயிலின் ஆயுள்கால உறுப்பினர்கள், நிர்வாகத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார்கள். இது எந்தவொரு யாப்பு விதிமுறைகளிற்கும் எதிரானதல்ல.
.
இந்த கோயில் விடையமாக பேச WTM அமைப்பினர் மற்றும் NCCT அமைப்பினர் நினைத்தால், முதலில் ஆட்டையை போட்டு வைத்திருக்கும் தேசியத்தின் சொத்துக்களை மக்கள் சொத்தாக்க வேண்டும் !
1) கடந்த 15 வருடமாக தேசியத்தின் வியாபார நிறுவனங்களின் சொத்து கணக்காய்வுக்களை மக்களிற்கு வெளிப்படுத்தாமல், மக்களை ஏமாற்றி வருவது எதற்காக ?
2) போலியாக “புனிதமான தமிழீழ தேசியம் பேசி” மக்களை ஏமாற்றி, மாவீரர் துயிலும் இல்லம் கட்டப் போவதாக சொல்லி, வசூலித்த பல மில்லியன் டாலர்கள் எங்கே ?
.
3) முள்ளிவாய்க்காலிற்கு முன்பு, தேசியத்தின் சொத்தில் மாதச் சம்பளம் பெற்று வந்த WTM நிர்வாகிகள், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு பல மில்லியன் சொத்துக்களிற்கு அதிபதியானது எப்படி ?
போலி WTM நிர்வாகிகளிற்கும் NCCT அமைப்பினருக்கும் இறுதி எச்சரிக்கை !!!
.
உங்களின் பினாமிகளை வைத்து எம்பெருமான் முருகனின் பெண் பக்கதர்களை ஒருமையில் பேசி, இப்ப துவக்கு இருந்தால் போட்டுத்தள்ளுவோமென்று அச்சுறுத்தல் கொடுப்பதையும் நிறுத்துங்கள். ஆனாலும் உங்களிற்கு ரொட்டி கூட, சுடத் தெரியாதென்று யாம் அறிவோம் !
.
கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 26 பேரது பெயர் விபரம் இதோ!
முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, தேசியதின் சொத்துக்களை ஆட்டையை போட்ட போலி WTM அமைப்பினரிடமிருந்து, எம் பெருமான் முருகனையும் மற்றும் கோயில் நிர்வாகதையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, கனடாவில் வாழும் சைவ பக்கதர்களிற்கு உள்ளது !
நட்புடன்,
எம்பெருமான் முருகனின் பக்தர்கள்,
கனடா தமிழர் சமூகம்