கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது!

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது!

கனடா கந்தசாமி கோவிலில் இலங்கை தூதுவர் துசாரா வந்த போது அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதை பொதுமக்கள் பலரும் நிர்வாகத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். எமது இனத்தை அழித்த அரசாங்கத்தின் பிரதிநிதியை வரவேற்றது பிழை என உணர்ந்த கனடா கந்தசாமி கோயில் நிர்வாகம் மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கூறியுள்ளது, அத்துடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் கவனத்தில் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

.

.

இச்செயலானது வரவேற்கத்தக்கதோடு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களின் செயலைப் பார்த்தாவது  NCCT யின் செல்லப்பிள்ளை நீதன்  உட்பட NCCT அமைப்பினரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்களா ? கடந்த காலங்களில் நீதன்  இலங்கை தூதுவரை கோயில்களிற்கு அழைத்த சென்று முதல் மரியாதை செலுத்தியதுடன் ஒரு சில பொது நிகழ்வுகளுக்கும் அழைத்து சென்று முன்னுரிமை கொடுத்ததை பல அமைப்புகளும் மக்களும் எதிர்த்தனர். இதுவரை அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை பதிலாக தன்னை நியாயப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர்தான் இன்றைக்கும் NCCT க்கு சவாலாக இருக்கும் CTC ஐ இல்லாமல் செய்யவும் தனது தனிப்பட்ட பகைக்காக பழி தீர்க்கவும் NCCT யுடன் சேர்ந்து இளையோரை இணைத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து துரோகச் செயலில் ஈடுபட்டு வருகின்றார்.

.

CTC இமாலய பிரகடன விஷயத்தில் தவறு இழைத்திருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மாற்றப்பட வேண்டுமே தவிர விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட CTC  ஐ இல்லாமல் பண்ணுவதற்கு NCCT உடன் சேர்ந்து இவர் நடத்தும் நாடகங்கள் பல, NCCT செய்த நரித் துரோகங்கள் பல, இவர்களிடம் அகப்பட்டுள்ள இளையோர்கள் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை, பொதுச் சொத்தை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு மேலும் கோயில்கள் உட்பட பல சொத்துக்களை அபகரிக்க NCCT அமைப்பினர் முயன்று கொண்டிருக்கின்றார்கள் NCCT அமைப்பினரிடமும் நீதன் போன்றோரிடமும் அவதானமாக இருக்கும்படி கனடா தமிழ் சமூகம் மக்களை கேட்டுக் கொள்கின்றது.

தொடரும்
கனடா தமிழ் சமூகம்.

கனடா சமூகம் இவர்களையும் பார்த்து கடந்து செல்வதுதான் கவலைக்குறியது. உங்களிற்கும் ஞாபகப்படுத்துவதற்காக மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. ( தேசியம் பேசும் தேசத் துரோகிகளை நீங்களும் பார்த்து வாழ்த்துங்கள் )

.
இந்த லூசுப்பயலை நம்பிவிட்டம்,  காதில் அலைவாங்கையே குத்துவார்!!!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *