30.01.2024
NCCT அமைப்பினர் மீண்டும் முருங்கை மரம் ஏறுகின்றனர்.
2009 ஆம் ஆண்டுவரை கனடாவில் தேசிய மாவீரர் நாளாக நடந்த நிகழ்வை தேசிய நினைவு எழுச்சி நாளாக மாற்றிய NCCT, மற்றும் உலகத்தமிழர் அமைப்பினர், மாவீரர்களின் பெயர்களை பாவித்து மக்களிடமும் மாவீரர் குடும்பங்களிடமும் பல மில்லியன் டொலர்களை நிதியாக பெற்றனர், இதுவரை மக்களிற்கு கணக்கு காட்டாமல் மக்களிற்கு கணக்கு விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிதிகள் தனிப்பட்டவர்களினால் கையாளப்படுகின்றது.
.
.
கடந்த 2023 ம் ஆண்டு இளையோர், தேசிய செயல்பாட்டாளர்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் கொடுத்த அழுத்தங்களினால் நிகழ்வின் வெளிப்புறத்தில் மாவீரர் நாள் என்றும் நிகழ்வு நடக்கும் உள்ளே தேசிய நினைவு நாள் என்றும் நிகழ்வினை செய்தார்கள். இலங்கை, இந்திய உளவு அமைப்பினரின் கையாள்கையும் மற்றும் மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களிற்கு வெள்ளை அடிப்பதற்காக தேசிய நினைவு எழுச்சி நாளாகவும், மக்களையும் மாவீரர் குடும்பங்களையும் ஏமாற்றி நிதி சேகரிப்பதற்காக மாவீரர் நாள் என்றும் பாதைகளை வைத்து நிகழ்வு செய்ததோடு எதிர்வரும் காலங்களில் மாவீரர் நாள் நிகழ்வாக செய்வதாவும் கூறி வந்த இவர்கள், இவ்வருடம் மாவீரர் நாள் இதுவரை காலம் நடந்த இடத்தினை மாற்றி மக்களை குளப்புவதற்காக மாவீரர் நாள் நிகழ்வு என மாற்றியதால் இடம் மறுக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் கட்டட வேலை செய்யப்போவதால் மறுக்கப்பட்டதாகவும் பல கதைகள் கூறி வருகின்றார்கள், முன்னர் நிகழ்வு நடந்த இடத்திற்கு நிகராக பிரமாண்ட மண்டபங்கள் இருந்தும் அங்கு செய்யாமல் தமிழ் மக்கள் குறைவாக இருக்கும் இடங்களில் தேசிய நினைவு எழுச்சி நாள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கிழமை நாளில் மாவீரர்நாள் வருவதால் அந்த இடத்திற்கு குறைவான மக்களே வருவார்கள். இதன்மூலம் தங்களுடைய எஜமானர்களிற்கும், உலகத்திற்கும் மக்கள் எல்லாவற்றையும் மறந்து வருகின்றார்கள் என காட்டுவதே இவர்களின் நோக்கமாகும்.
சம நேரத்தில் சில தேசிய செயல்பாட்டாளர்கள் முன்னர் நிகழ்வு செய்த இடத்திற்கு அருகாமையில் மண்டபம் எடுத்து மாவீரர்நாள் செய்ய எடுத்துவரும் முயற்சிகளை உலகத்தமிழர் அமைப்பினரும் NCCT அமைப்பினரும், NCCT யின் துணை அமைப்பான அகவம் அமைப்பினரும் குழப்பி வருவதோடு மிரட்டல்களும் விட்டு வருகின்றனர்.
.
.
இதுவரை மூன்று வருடங்களாக, அழகரெத்தினம் குமார் ( டைனமோ குமார் என்றும் சுதன் என்றும் அழைக்கப்படுபவர் ) என்பவரின் பெயரில்
(Jeffrey street, Ajax ) அயஸ் பகுதியில் நிலம் வாங்கி மாவீரர் நினைவு மண்டபம் கட்டி மாவீரர் நாள் செய்ய உள்ளோம் என வர்த்தகர்கள் மற்றும் உணர்வாளர்களிடம் சேர்த்த மில்லியன் டொடலர்களை NCCT யின் துணை அமைப்பான அகவம் அமைப்பு கணக்கு காட்டாமல் வாய்மூடி இருக்கும் மர்மம் என்ன?
.
.
இவர்களின் உண்மையான நோக்கம் மாவீரர் நாள் செய்வதை தடுப்பதும், மக்களை குழப்பத்தில் வைத்திருந்து தேசிய செயல்பாட்டையும், வரலாறுகளையும் மாற்றுவதே ஆகும்.
மக்களை விழிப்புடன் செயல்படுமாறும், மீண்டும் மீண்டும் இவர்களிடம் ஏமாந்து, தனி நபர்களை முதலாளிகளாவும், தொழிலதிபர்களாகவும் மாற்ற வேண்டாமென தமிழர் சமூகமும் தேசிய செயற்பாட்டாளர்களும் கேட்டு வருகின்றனர்.
–விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி-
தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்.