மாவீரர் நிகழ்வா?  தேசிய நினைவு எழுச்சி நாளா? மக்களை குழப்பும் NCCT, உலகத்தமிழர் அமைப்பினர்!

இளங்கோ.

15.09.2024

கனடா. தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் !
கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வை கடந்த 14 வருடங்களாக தேசியநினைவு எழுச்சி நிகழ்வாக மாற்றி மாவீரர் குடும்பங்களை ஏமாற்றி நிதி வசூலும், உணவகங்கள் வருமானம், களியாட்ட நிகழ்வாக்கும் தன்மையுடன், மோசடி செய்து வந்த NCCT, உலகத்தமிழர் அமைப்பினர், 2023 ம் ஆண்டு மாவீரர் நாளின் போது மாவீரர் குடும்பத்தினர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பினால் வெளியே மாவீரர் நாள் என்றும் உள்ளே தேசிய நினைவு நாள் என்றும் பதாதைகள் வைக்கப்பட்டு மாவீரர் நினைவேந்தல் செய்யப்பட்டது.
.
.
மாவீரர் நாள் பதாதைகள் வைத்ததனால் இலங்கை,இந்திய புலனாய்வுகளுடன் கள்ளத் தொடர்பில் இருக்கும் NCCT யினருக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. இதனால் 2024 மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்காக இடம் கிடைக்கவில்லையென புதுக்கதை ஒன்றினை தமது அமைப்புக்களின் விசுவாசிகளுக்கு கூறி, மக்களுக்கும் இக்கதையை உலகத்தமிழர் அமைப்பினரும், NCCT யினரும் பரப்பி வருகின்றனர்.
இலங்கை இந்திய புலனாய்வுக்கு அடி பணிந்த NCCT மற்றும் உலகத்தமிழர் அமைப்பினர் மாவீரர் தின நிகழ்வை குழப்பும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். வழமையாக இவர்கள் தேசியநினைவு  நாள் செய்யும் இடமான மார்க்கம் பகுதி இம்முறை மறுக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கு கடந்த வருடம் இளையோர் செய்த குழப்பங்களே காரணமென வதந்தி பரப்பி வருகின்றனர்.
.
.
வழமையான இடம் மறுக்கப்பட்டால் மார்க்கம் கனடாவில் வேறு இடம் இல்லையோ? மார்க்கம், ஸ்காபுரோ பகுதிகளில் பல தமிழர்கள் பல பிரமாண்ட மண்டபங்கள் வைத்திருந்தும் இடம் கிடைக்கவில்லையென்றால், NCCT யினர் அவர்களை ஏன் அணுகவில்லை? அல்லது அவர்களும் அடிமையாகி விட்டார்களா?
NCCT, உலகத்தமிழர் அமைப்பினரின் ஏமாற்று வேலைகளையும், நிதி மோசடிகளையும் இனிமேல் மக்களிடம் சரிவராது, மக்கள் மாவீரர் விடயங்களில் கடந்து போகமாட்டார்கள் என்பதை உணர்ந்த இத்துரோகிகள் மாவீரர் நாள் நிகழ்வை தேசிய நினைவு நாளாக செய்வதற்கு Airport road இல் அமைத்துள்ள International Convention Center ஐ அணுகியுள்ளார்கள்.
.
இதன் மூலம் தாங்கள் இலங்கை, இந்திய புலனாய்வுகளின் அடிமையென காட்டுவதோடு, மேற்கே நடக்கும் மாவீரர் தினத்தையும் குழப்பி மக்களையும் ஒரு குழப்ப நிலையில் வைத்திருப்பதே இவர்களின் நோக்கமாக பார்க்கப்படுகின்றது.
இவர்கள் கிழக்கில் மோசடி முடித்து, மேற்கிற்கு மோசடிக்கும்பலின் பார்வை திரும்பியுள்ளது. உண்டியலுடன் உலகத்தமிழரின் விசுவாசிகள்  மாவட்டம், வட்டம் என்று வருவார்கள், இவர்களின்  செயற்பாடுகளில் மக்கள் விழிப்புணர்வுடன்  செயற்படுமாறு தமிழ்தேசிய உணர்வாளர்கள் கேட்டுள்ளனர்.
.
.
Brampton நகரில் உருவாக்கப்படப் போகின்ற “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவிடம்”, மாவீரர் நாள் சம்பந்தமாக மக்களிடமிருந்து பண வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள் !, பற்றுச்சீட்டு தரமாட்டார்களாம், இவைக்கு மட்டும்தான் சட்ட சிக்கலாம், இலங்கை போகமுடியாதாம், தாங்களாகவே இலங்கை புலனாய்வுக்கு விசுவாசம் என்பதை மறைமுகமாக கூறுகின்றார்கள்,  கொடுக்கிறவர்கள்  இதைப்பற்றி கணக்கே எடுப்பதில்லை, ஆனால்  ஓநாய்கள்தான் கவலைப்படுகிறதாம்.
.

சிந்தித்து செயல்படுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *