கனடியத் தமிழ் சமூகம்.
.
அவசர வேண்டுகோள் !
தேசியத் தலைவரின் 70 வது பிறந்த நாள் நிகழ்வு, மாவீரர் நாள் நிகழ்வுகளை குழப்ப NCCT அமைப்பினர், உலகத்தமிழர் அமைப்பினர் முயற்சி!
கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வை கடந்த 14 வருடங்களாக தேசியநினைவு எழுச்சி நிகழ்வாக மாற்றி மாவீரர் குடும்பங்களை ஏமாற்றி நிதி மோசடி செய்து வந்த NCCT, உலகத்தமிழர் அமைப்பினர். 2023 ம் ஆண்டு மாவீரர் நாளின் போது மாவீரர் குடும்பத்தினர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பினால் மாவீரர் நாள் என்றும் தேசிய நினைவு நாள் என்றும் பதாதைகள் வைக்கப்பட்டது. மாவீரர் நாள் பதாதைகள் வைத்ததனால் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் கள்ளத் தொடர்பில் இருக்கும் NCCT யினருக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. அதனால் 2024 மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்காக இடம் கிடைக்கவில்லையென புதுக்கதை ஒன்றினை உலகத்தமிழர் அமைப்பினரும், NCCT யினரும் பரப்பி வருகின்றனர்.
சரி இவர்களை கனடிய தமிழ் மக்கள் சார்பில் கேட்கின்றோம். மாவீரர் நினைவிடம் அமைக்க பணம் சேர்த்து மண்டபம் கட்ட அனுமதியில்லாத நிலம் வாங்கி வயிறு வளர்த்த அகவம் அமைப்பினரை இந்த முறை நீங்கள் கொட்டகையை அக்காணியில் போட்டு மாவீரர் நாள் நடத்தினால் 40000$ டொலரை வாடகைக்கு கொடுக்காமல் மீதப் படுத்தலாம். மேலும் மாவீரரை காட்டி மேலும் உண்டியல் குலுக்கி வயிறு வளர்க்கலாம். எனவே இந்த வழியிலும் முயற்சிக்கவும்….
தலைவரின் 70 வது பிறந்தநாள் நிகழ்வு செய்து, மாவீரர் நாள் நிகழ்வு செய்யப்படவில்லையென்றால் மக்கள் குழப்பம் அடைவார்கள் என்பதற்காக தேசியத்தலைவரின் பிறந்தநாள் நிகழ்வை குழப்புவதற்கும், அந்நிகழ்வை தமது கையில் எடுத்து பண மோசடிகள் செய்வதற்கும் மறைமுகமாக NCCT, உலகத்தமிழர் இயக்கத்தினர் திரைமறைவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் சார்பாக ஒரு குழுவினர் அனுராகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கான முனைப்பு காட்டிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தானே CTC யும் செய்தது.
இவர்களின் செயல்பாடுகளில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு தமிழ்தேசிய உணர்வாளர்கள் கேட்டுள்ளனர்.
.
Brampton நகரில் உருவாக்கப்படப் போகின்ற “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவிடம்” சம்பந்தமாக மக்களிடமிருந்து பண வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள் !
பண உதவி செய்வோர், தயவு செய்து சில முக்கிய விடயங்களை புரிந்து கொள்ளுங்கள் !
.
இந்த நினைவுத்தூபியை கட்டுவதாக செயற்படும் NCCT அமைப்பினர், Brampton நகரசபையோடு எந்தவொரு காணி ஒப்பந்தமும் (99 Years Lease) போடவில்லை. அத்துடன் இவர்களினால் கட்டட வரைவுகளும் சரியான முறையில் நகரசபையில் ஒப்படைக்கப்படவில்லை. ஒப்பந்தம் ஏதேனும் போட்டிருந்தால் முதலில் அதை மக்களிற்கு வெளிப்படுத்திய பிறகு, பண வசூல் வேட்டையை செய்வார்களா?
Brampton நகரசபையின் “Public Art Site Agreement” இல் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. எந்தக் காலத்திலும் நகரசபையின் 2/3 உறுப்பினர்களின் ஆதரவு இருந்து, அகற்ற வேண்டிய சுழல் ஏற்பட்டால், நினைவிடத்தை கட்டிய இடத்தில் இருந்து அகற்றிவிட்டு, தங்களிற்கு பிடித்த வேறு இடத்தில் வைக்க முடியும். இப்படி பல இடியப்ப சிக்கல்கள் இருப்பதால், மக்கள் அவதானமாக இருக்கவும் !
.
.
இப்படித் தான் Ajax நகரில் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவதாக மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பல ஆயிரம் ஆயிரம் டொலர்களிற்கு என்ன நடந்ததென்று யாருக்கும் இன்றுவரை தெரியாது !
அதே நிலமை தான் இங்கும் நடக்க வாய்புள்ளது. 99 Years Lease Agreement போடவில்லையென்றால், NCCT அமைப்பு மற்றும் Brampton நகரசபையும் சேர்ந்து மக்களிற்கு காதிலை பூ வைத்து நாமமும் போட்டு விடுவார்கள் !
தற்பொழுது NCCT, WTM அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சசி என்பவரால் Brampton நகரசபையில் இரண்டு நினைவு தூபி கட்டப்படவுள்ளது, இரண்டாவது தூபிக்கென நிதி சேகரிப்பதும் அம்பலமாகியுள்ளது. இவர்கள் (றீசிட்) பற்றுச்சீட்டு வழங்கினால் சட்டச்சிக்கல் வருமாம். இலங்கைக்கு போவது சிக்கலாகுமாம்.
இன்னும் எத்தனை பேர்தான் Brampton தூபியை வைத்து மக்களிற்கு கணக்கு காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம்.
சிந்தியுங்கள் செயற்படுங்கள் !