அனுராவின் அரசியல் உண்மை நிலவரம் பிரசவித்த தத்துவ வடிவமாக வருகிறதா? அல்லது தேவைகளின் கூட்டு வேசமிடவைத்த பாத்திரமாக வருகிறதா?

 

தியாகனின் பார்வையில். 2

 
.
அனுரகுமார வின் இன்றைய அரசியல் நிலைப்பாடு எதன் வெளிப்பாடு அல்லது எதன் வகிபாகம் என்று கேட்டால்.
உலகில் வெற்றிபெற்ற நாடுகளின் முன் மாதிரிகளின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம்.
அப்படிச் சொன்னால் உண்மைகள் உருவாக்கிய தத்துவார்த்தத்தின் இன்றைய வெளிப்பாடகவே கருத வேண்டும்.
மீளமுடியாத தோல்விக்குள் மூழ்கப் போகும் இலங்கையை மீட்பதற்காக பாசாங்கு வேசமிட்டு  பெருமனத்தால் கெடக்கூடிய தமிழர்களின் பெருமனப் பலவீனத்தை முதலீடாக்கி  சிங்களத் தேசிய இனத்தின்  நாடாக இலங்கையின் இருப்பை, அவர்களது அரசியலை மற்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான மிக நவீனமயப்பட்ட உளவியல் ஏமாற்று வழிமுறையாகவும் இருக்கலாம்.
தமிழர்களின் வாழ்வியல், தமிழ் மொழியின் பண்பிலக்கணம் தமிழர்களை ஏமாளிகளாக்கியதன் விளைவினால்தான் இலங்கையின் தொன்மைக் குடிகளாகவும் முடி கொண்டு மூவேந்தர் ஆண்ட அரும்பெரும் வரலாறுகள் இருந்தும் தமிழினம் வீழ்ந்து அழிந்தும் வருகிறது.
கடாரம் வரை வென்ற சோழன் தான் கைப்பற்றிய தேசங்களை தனதுடமையாக்கவில்லை என்பதில் இருந்தே தமிழினத்தின் பெருமனதை நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற விடுதலை வீரனாகிய விடுதலைப்புலிகளின் தலைவரிடமும் பெருமனது தனது ஆதிக்கத்தை நிரூபிக்கத்தவறவில்லை  என்பதை நான் கண்டிருக்கிறேன்.
.
.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தினை சிதறடிப்பதற்காகவே தமிழரசுக்கட்சியை சேர்ந்த பலர் சுமந்திரனுடன் கை கோர்த்து , தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடித்தனர். வெளிப்படையாக அரிய நேத்திரனை போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்தினார்.
எதிரில் அதி தீவிரமாக தேர்தல் நிராகரிப்பு வாதத்தை முன்னிறுத்திய கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இரட்டையர்களுடன் அவர்களின் ஊதுகுழலாக சுகாசும் நிச்சயமாக அன்னிய சக்திகளதும், இலங்கை உளவுத்துறையும் கூட்டாக ஒப்படைத்த வேலையைத்தான் செய்தனர் என்பது எனது வலிமையான வாதமாகும்.
.
.
 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் நுழைந்து சுமந்திரன் கூட்டமைப்பை ஆளுமை செலுத்தி இப்போது தமிழரசுக்கட்சியை நீதி மன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தி சிறீதரனை கட்டிவைத்து பொது வேட்பாளரை தோற்கடிக்க முடிந்ததற்கு கஜேந்திரகுமாரது சுயநலமே பெரும் துணை போனது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
.
.
ஆக மொத்தத்தில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு தமிரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் போலி முகத்திரையான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சிங்களத்திற்கே வெளிப்படையாக சேவகம் செய்திருக்கின்றனர்.
அரசியல் சூனியங்கள் என்று கூறக்கூடிய  TELO ரெலோ PLOTE புளொட் JPK ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன, இரண்டு தோணியிலும் காலை வைத்ததன் மூலம் தமிழினத்தின் முன் தாம்  அரசியல் வேடதாரிகள் என்பதை நிரூபித்து நின்றனர்.
சிதைவடைந்துள்ள தமிழர் தலைமைத்துவம் , கட்டமைக்கப்படாத தமிழர் அரசியலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தமிழினத்திற்கானதாக கையாளப் போவதில்லை அப்படி நடந்தால் அது ஒரு இமாலய சாதனைப் பதிவாகும்.
வட கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் தமிழ்தேசியத்திற்கு வலுவானவர்களாக பாரளுமன்றத்திற்கு சென்றால் அதன் பின்னர் தான் அனுராவினது அரசியலின் உண்மையான முகம் உறுதிப்படும் அல்லது தமிழர்களின் பலவீனங்களுக்குள் மறைந்து இலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்க நாடாக நிலைபெறும்.
இங்கே  இன்னொரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உலகத்தை புரிந்து கொண்ட சிங்கள மக்களால் தமிழர்களை ஏற்று நேசித்து அவர்களது உரிமைகளை வழங்குவதற்கு முன்வந்து அதிகாரங்களை பகிரும் வகையில் சுயாட்சியை உரிய முறையில் வழங்கி நாட்டை புதிய திசையில் அழைத்து செல்வதற்கு முற்படுவார்களாக இருந்தால் அது மனித குல வரலாற்றில் இனவெறியர்கள் என்ற அடையாளங்களை அகற்றி ,உண்மைக்கும் , பெளத்த
தர்மத்திற்கும்
மதிப்பளிப்பார்களாக இருந்தால் இலங்கையில் மனிதகுலம் வாழ சுமூகமான எதிர்காலத்தை செதுக்கியவர்களாக சிங்கள  மக்களின் வரலாறு மாறும் .
சுமந்திரனால் தமிழரசுக்கட்சி தனது தலையில் தானே மண்ணைப் போட்டு நீதி மன்றத்திற்குள் முடங்கியுள்ளது.
இன்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியால் தேசிய மாநாட்டை நடத்த முடியாது.
பொதுச்சபை  கூடி  வேட்பாளர்களை தேர்வு செய்யாமல்  வேட்பாளர்களை தமிழரசுக்கட்சி எவ்வாறு நிறுத்த முடியும் என்று கேள்வி கேட்டு பொதுமகன் ஒருவர்  நீதிமன்றம் சென்றால்
தமிழரசுக்கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என சி வி கே  தனது நண்பர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழர்களின் அரசியலலில் நாடளுமன்றத்தேர்தலில் வட கிழக்கை இழக்குமாக இருந்தால் எதிர்காலம் சோகம் தான் அனுராவின் அலையில் தமிழினமும் அடிபட்டுப் போக வாய்ப்புக்கள் உள்ளது.
அனுரகுமார பிராந்திய சர்வதேச வல்லாதிக்க  நலன்களை எதிர் கொண்டு எவ்வாறு நாட்டை சுமூகமாக வழிநடத்தப் போகின்றார்? தமிழ் மக்கள் ஏற்றுக்கெள்ளும் தீர்வொன்றை எப்படி வழங்கப் போகின்றார்  என்ற கேள்வியோடு இந்தக் கட்டுரையில் இருந்து விடைபெறுகிறேன்.
       🙏✍️🙏

தியாகன்.(முல்லை மதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *