இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.

இளங்கோ-கனடா
16.09.2024

.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரு கூட்டங்கள் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவாளர்களினால் கனடாவில் சனிக்கிழமை 6065 Steeles avenue என்ற இடத்தில் முழக்கம் திரு- ஞானம் , நாடுகடந்த அரசாங்கத்தின் தாயக அமைச்சர் விஜிதரன்ஆகியோரின் ஏற்பாட்டிலும் ஞாயிற்றுக்கிழமை 80 Travil Road, Markham என்ற இடத்தில் நிமால் விநாயகமூர்த்தியின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

6065 Steeles avenue என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழக்கம் திருவும் , 80 Travil Road , Markham த்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கதாஸ் பத்மநாதன் ஆகியோர் இந்த கூட்டங்களை வழிநடத்தினார்கள்.

6065 Steeles Avenue ல் முழக்கம் திரு, நாடு கடந்த அரசாங்கத்தின் தாயகத்திற்கான வேலைத்திட்டங்களிற்கான பொறுப்பாளர் விஜிகரன் ( இளங்கோ ) மற்றும் ஊடகவியலாளர்களும்,
80 Travil Road ல் தமிழர் தகவல் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம்.

 

பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், EPRLF உறுப்பினர் ராஜா யோகராஜா, தமிழரசு கட்சியின் உறுப்பினர் வீரசுப்பிரமணியம், நிகழ்வின் ஏற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

இரு கூட்டங்களிலும் நூறுக்கு மேற்பட்டவர்கள கலந்து கொண்டனர். 80 Travil Road , Markham என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு எந்த வகையில் ஆதரவு வழங்க முடியும் என்ற கருத்துக்களை ஈ-குருவி நவஜீவன் அனந்தராஜ், அனந்தி சுசிதரனின் மைத்துனர் முரளி, சட்டத்தரணி Kennedy, வீ.எஸ்.துராஜாரா, விக்னராஜா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

.

.

இவ் இரு கூட்டங்களிலும் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், மாற்று இயக்கங்களுடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிலர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொது வேட்பாளர் விடயங்களில் இவர்கள் எப்படி இணைந்து நிற்கிறார்களென காலம்தான் பதில் சொல்லும் என பலர் பேசாமலும் இல்லை.

நாமும் அவர்களுடன் காத்திருப்போம்~!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *