சமூகம் 01.09.2024
.
வலி சுமந்த மாதம்
.
செப்டம்பர் மாதம் வலி சுமந்த மாதம், இந்த மாதத்தில்த்தான் தியாகி திலீபன் அண்ணா எம் இன மக்களின் விடுதலைக்காக அகிம்சாவழியில் நீர் ஆகாரம் இன்றி ஈகைச்சாவடைந்தார் அவரது வீரச்சாவின் பின்பு தமிழினம் ஆயுதப்போராட்டத்தில் முனைப்பு பெற்று உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு சென்றது யாவரும் அறிந்ததே.
தியாகி திலீபன் அண்ணாவின் நினைவாக இன்றுவரை செப்டம்பர் மாதத்தை வலி சுமந்த மாதமாக தமிழ் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த வருடம் இதே மாதத்தில் பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் நடக்கவிருந்த A.R ரகுமானின் இசை நிகழ்ச்சி மக்களின் எதிர்ப்பால், பின்போடப்பட்டது, A.R. ரகுமானும் மக்களின் உணர்சிகளை புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு கலை நிகழ்சியை பிற்போடப்பட்ட திகதியில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வை எதிர்த்து அன்று கனடாவில் இருந்தும் பல குரல்கள் எழுந்தது.
.
.
இன்று கனடாவில் போலித்தேசியம் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு திரியும் சில ஊடகவியலாளர்களுடன் தங்களின் சுயநலத்திற்காகவும், சிங்கள பேரினவாதிகளிற்கு முட்டு கொடுத்து வருகின்றனர். பேரினவாதிகளிற்க்கு தலையையும். இனத்திற்கு வாலையும் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறுகளை மாற்றுவதுடன் தேசிய செயல்பாடுகளை நீர்த்துப்போகும் வேலையையும் செய்து வருகின்றனர்.
.
.
இதன் அங்கமாகவே இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மாமிமாரை கூட்டி வந்து மாமா வேலை பார்த்து ஒரு சிலரை தம் வலையில் வீழ்த்தி தேசிய செயல்பாட்டிற்கு எதிரான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
செப்டம்பர் 21,28 ம் திகதிகளில் அன்னிய சக்திகளின் பின்புலத்துடன் இரண்டு களியாட்ட நிகழ்வுகள் செய்வதற்கு கனடாவில் ஏற்பாடகியுள்ளது. இதற்கு நீங்கள் துணை போவதும் இனத்திற்கு செய்யும் துரோகமே!!!
.
இவர்களின் செயற்பாடும் CTC இன் செயற்பாடு போன்றே பார்க்கப்படுகின்றது. CTC எதிர்பு போராட்டத்தில் சந்தில் சிந்து பாடிய ஊடகவியலாளர்களும் இவர்களே!
மக்களே இவர்கள் போன்ற ஊடகவியளாலர்களுடன் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வை புறக்கணித்து அடுத்த சந்ததிக்கு தியாகி தீலீபன் அண்ணாவின் ஈகத்தை எடுத்து செல்வீர்கள் என நம்புகிறோம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.