பொது வேட்பாளரும் சமகாலமும்.
தியாகனின் பார்வையில்.
பகுதி 01
——————-
பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் மிக அத்தியாவசியமான தேவையாகும். அந்தவகையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதை அரசியல், சமூகவிலயல், தத்துவவியல், இன முரண்பாடுகள், இன ஒடுக்குமுறைகள், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய உரிமைப்போராட்டம் ஆகியவற்றை புரிந்து கொண்டவர்கள்
ஏற்றுக்கொள்வார்கள்.
இரத்தம் சிந்தாதயுத்தம், பின்னர் இரத்தம் சிந்திய அரசியல்
மீண்டும்
2009 மே 18 திகதியோடு மீண்டும் தொடங்கிய இரத்தம் சிந்தாத யுத்தம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழினத்திற் மார்பில் குத்தி குருதி குடித்த தமிழர் அரசியலின் கூட்டமைப்பு தலைவனின் சாவை தொடர்ந்து மீண்டெழும் இரத்தம் சிந்தாத யுத்தத்தின் தொடக்க நாயகனாக பொது வேட்பாளர் அரிய நேந்திரன் அவர்களையும் அவருக்கு இயற்கையின் அருளால் கிடைக்கப் பெற்ற சங்கு சின்னமும் தமிழ்ர விடுதலை அரசியலை ஊதி தொடங்கி வைக்குமா என்றால் அங்கேதான் கேள்விகள் எச்சரிக்கை.கலந்த பெரும் பயம் உள்ளது.
அரசியல் ஒரு சதுரங்கம் என்பார்கள் சதுரங்கத்தை விளையாடும் இருவரில் ஒருவர் காயை நகர்த்தினால் மறுபுறத்தில் இருப்பவரும் காயை நகர்த்தியே ஆகவேண்டும்
ஆனால் இங்கே தமிழர் தரப்பில் இருந்து காயை நகர்த்திய TELO, PLOTE, J PK ஆகிய கட்சிகள் கூட்டமைப்பு பொதுக்கட்டமைப்புக்களுடன் கூடி முடிவெடுத்து செயற்படவில்லை என்ற உண்மைக்கு அப்பால் இருக்கும் அரசியலை நான் இந்தக் கட்டுரையில் உடைத்துப் பேசப் போவதில்லை ஆனால் வெள்ளாடுகளோடு கறுப்பாடுகளும் கூட்டினைந்து
நாணயத்தின் ஒரு பக்கமாக காட்சியழிப்பதுதான் கவலை தரும் விடயையமாகும்.
தொடரும்.
தியாகன்.