நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?

 

சிவராமன் – அமெரிக்கா

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?
இலங்கை இந்திய அரசுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அரசு நாடுகடந்த அரசாங்கத்திற்கு நேரடியாக பல அழுத்தங்களை கொடுப்பதாக ஊர்யிதப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கடந்தும் காபந்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசுக்கான அமைச்சர்கள் நியமனம் நடைபெறாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அதன் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்ற நா.க.த. அரசு இந்தியாவின் நலன்களிற்காக அடிபணியுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்தியா அமைதிப்படை என்ற பெயரில் கொலைகாரர்களை இலங்கைக்கு அனுப்பி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டதுடன் மற்றும் இறுதிப்போரில் பல நாடுகளுடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இனஅழிப்பு செய்த வடு மாறுவதற்கு முன்னர் தமிழரின் ஜனநாயக ரீதியான நியாயமான வழியில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை தடுப்பதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகின்றது, இறுதிவரை மண்டியிடாது இனத்திற்காக போராடிய விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்ற நா.க.த. அரசு இந்திய அரசின் அழுத்தத்திற்கு மண்டியிடுமானால் விடுதலைக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களிற்கும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களிற்கும் செய்யும் துரோகமாகும்.
இதே போன்று அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ்சில் உள்ள நா.க.த. அரசின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் நாசகார திட்டங்களுடன் தொடர்புடன் இருப்பதாக அறியப்படுகின்றது.  KP எனும் குமரன் பத்மநாதனுடன் மிக நெருக்கமாக இருந்து வரும் முன்னாள் உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர் ரெஜி என்பவருக்கு கனடாவிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை பொறுப்பு நேரடியாக நா.க.த. அரசின் பிரதமர் திரு.வி. உருத்திரகுமாரினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை  தெரிவிற்கு முன்னர் இந்த நியமனம் தேவைதானோவென சில புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி உழுப்பியுள்ளனர். இந்த நியமனத்திற்கு  KP யுடன் தொடர்பில் உள்ள காபந்து அரசாங்கத்தின் ஊடக அமைச்சர், தாயக வேலைத்திட்டங்களிற்கான அமைச்சர் மற்றும் ஒரு சிலர் பின் நிற்பதாக தெரிய வருகின்றது.

தேசியத்திற்கு எதிரான  செயல்பாடுகளில் தொடர்பில் உள்ளவர்கள் தம்மை மாற்றிக்கொள்ளாவிடில் அவர்கள் மக்கள் முன் இனம்காட்டப்பட்டு போலிச் செயற்பாடுகளில் இருந்து மக்களால் அகற்றப்படுவார்களென நா.க.த. அரசின் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *