நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலையும் புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்பும்.

அமெரிக்காவில் இருந்து S.சிவராம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பலராலும் ஆவலுடன் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் பல சவால்களிற்கு மத்தியில் 05.05.2024 நடைபெற்று, 17.05.2024 அன்று நடைபெற்ற 4 வது தவணை முதலாவது அமர்வின் போது திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் போட்டியின்றி ஏகமனதாகதெரிவு செய்யப்பட்டார்.

 

இத்தடவை பல புதியவர்களும் இளையோர்களும் களம் இறக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களை பின்தள்ளி பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி பிரதமர் திரு.வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் கருத்துக்களும் உள் வாங்கப்பட்டு அவர்களின் தகுதிகள் இனம் காணப்பட்டு அவர்களிற்கும் பொறுப்புக்கள் பகிர்ந்து வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களிற்கு தடையாக இருந்த பலரை மக்கள் நிராகரித்தும் சிலர் தேர்தல் ஆணையாளர்களினால் நிராகரிக்கப்பட்டுமிருந்தனர். இவர்கள்மேல் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தீர விசாரிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்களென தேர்தல் கையேட்டின் பிரகாரம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. இருந்தும் ஒரு சிலர் மீது தகுந்த ஆதாரம் சமர்பிக்கப்படாததால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் வர முடிந்துள்ளதாகவும் பல நாடுகளில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இவர்களில் சிலர் அமர்வின்போது சத்தியப்பிரமாணம் எடுப்பதை தவிர்த்துள்ளனர். குறுகிய கால அவகாசமே இருப்பதால் சத்தியப்பிரமாணம் எடுப்பதை தவிர்த்துள்ளவர்களின் தெரிவு இரத்து செய்யப்படலாமென முன்னாள் அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விரும்பத்தகாத சக்திகளினால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் மற்றும் தலையீடுகளில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றி கொண்டாலும், வரும் காலங்களில் பல சவால்களிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டி வருமென மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

பிரதமர் திரு.வி. உருத்திரகுமாரன் அவர்களின் பிரதமர் அலுவலகத்தின் ஆளுகையை எடுப்பதற்கு அமெரிக்காவில் துடிப்பவர்கள் யாரென தெரியுமா?
கமல் மற்றும் கருணா, கமல் மதுபான விற்பனையில் சட்டரீதியான அல்லது சட்டவிரோதமான முகவர். கருணா முன்னாள் இந்நாள் போதைவஸ்து முகவர் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் நிதி சேர்த்துள்ளதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த அறவீடுகளிற்கான ரசீது வழங்கப்படவில்லை. இந்த நிதி முறைகேடுகள் பற்றி அமெரிக்கா உறுப்பினர்களிற்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாமலும் போல் இருக்கிறீர்களா? கமல், கருணா இருவரும் பிரதமரின்
பின்னணியில் இருந்து இயங்கினால் போதைவஸ்து முகவர்களின் கையில் நாடு கடந்த அரசு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும்.

தற்போது கந்தையா-பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்டர்) பிரித்தானியாவிலிருந்து உள்வாங்கப்பட்டு உள்ளார். இவர் இந்திய அரசின் நாசகார வேலைத் திட்டத்துடன் தொடர்பு உள்ளவர். இந்திய புலனாய்வு அமைப்புடன் தொடர்பு உள்ள சிலர் தேர்தல் ஆணையாளர்களால் நீக்கப்பட்டவுடன் உடனடியாக மாற்றீடாக கந்தையா-பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்டரை) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளார்.

 

வெடி பாலா என அறியப்படுபவரும் ஆமை பாலா , மற்றும் சீமானின் வரி பற்றி விடும் வெடி விடும் பாலா பற்றி, அங்கு அன்று நின்ற போராளிகளுக்கு மட்டுமே தெரியும்.

இவரது முன் அனுபவங்கள், ஆலோசகர் என்ற பெயரில் அரசியல்துறைக்குள் உடைவுகளை ஏற்படுத்தி செயற்பாட்டு வேகத்தை தணித்தமை.
சர்வதேச பல தமிழ் அமைப்புக்களில் தனது முகத்தை காட்டி வேலை செய்வது போல் நடித்து புலம்பெயர் அமைப்புகளை குழப்ப நிலையில் வைத்திருக்கின்றமை.
தாயகச் செயற்பாடுகளை செய்வது போன்று புலம்பெயர் சமூகத்தின் அமைப்புக்களை பயன்படுத்தி போராட்டம் நடாத்தி பல கைதுகள், சிறைவாசம் என இளையோரை சிக்க வைத்து அறவழிப் போராட்டத்தை தொய்வடையச் செய்தது. சுய விளம்பரம் செய்து வரலாற்று மையத்தை தொடர் குழப்ப நிலையில் வைத்துள்ளமை. பிரித்தானியாவிலிருந்து 78000 பவுண்ட் சேகரிக்கும் முயற்சிக்கு ஆதரவாக செயற்பட்டு நாம் தமிழர் கட்சி சீமானுக்கு அனுப்பி உள்ளமை. போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இவ்வாறு பணம் சேர்க்க பிரித்தானியாவில் இவர் முயலவில்லை. இவர் பிரதமர் பதவியை ஏதாவது வழியில் அடைந்து தனது எஜமானர்களுக்கு விசுவாசத்தை காட்ட உள்ளார்.
எனவே இவ்வாறான பல சிக்கலான பிரச்சினைகளை பிரதமர் விழிப்பாக செயற்பட்டு கையாள வேண்டும்.

தற்பொழுது ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பதவிகளை பொறுப்பெடுப்பதற்காக போட்டி போடுவதையும், குழு சேர்ப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இது மீண்டும் ஒரு குழுவாதத்தை நோக்கி பயணிக்க உள்ளதாக நம்பப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டதும் பெயர் விபரங்களுடன் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *