07.05.2024
களும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழித்தும் இரண்டு அணியாக உடைப்பதற்கும், முடியுமானால் இல்லாமல் செய்வதற்காக தேசவிரோத சக்திகள் நிலத்திலும் புலத்திலும் ஒட்டுக் குழுக்கள், சில அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சில ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பொய் பரப்புரைகளை செய்து வருவதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது அமர்வுக்கான தேர்தலை நிறுத்தி தம் விருப்பப்படி மக்களை குழப்புவதற்கு எடுத்த முயற்சி தேசிய செயற்பாட்டாளர்களினாலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களாலும் தகர்தெறியப்பட்டுள்ளது.எமது ஊடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்திகளை உறுதி செய்வதற்காக அமெரிக்காவில் வசித்து வருபவரும் நாடுகடந்த அரசாங்கத்துடன் ஆரம்பகாலத்தில் இருந்து பயணிப்பவருமாகிய திரு. குமார் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது மிகவும் தெளிவாக எமக்கு விளக்கம் கொடுத்ததோடு 4 வது அமர்விற்கான தேர்தல் முடிவடைந்து விட்டதையும் உறுதி செய்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரிற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் வகையில் சில முன்னாள் அமைச்சர்களும், தம்மை ஊடகம் எனச்சொல்லி கொள்ளும் Iphone ஊடகங்கள் வதந்தி செய்திகளை பரப்பி வரும் இவ்வேளையில் பொய்ப்பிரச்சாரங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐரோப்பாவில் இருந்து முருகையா சுகிந்தன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையாளரின் அவசர செய்தி அறிக்கையை எங்களிற்கு அனுப்பி வைத்துள்ளார்.குறிப்பு:- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வெற்றியாளர்கள் விபரம்.அச்செய்தி இணைக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் தரவுகள் கிடைத்ததும் பதிவு செய்யப்படும்.