கனேடியத் தமிழர் கூட்டு –
04.05.2024
உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது.
யுத்தம் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகளை அழிக்கும் இலங்கை அரசின் அணுகுமுறைக்கு, பேரவை உடந்தையாக இருக்கும் வகையில் அமைதி பேணுகிறது.
குறிப்பாக, தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை CTC ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, இதுவரை காலமும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் விடயத்தில் கனடாவிலும், சர்வதேச அளவிலும் நாம் அடைந்த முன்னேற்றத்தை நாசம் செய்கிறது. பேரவையின் இந்நகர்வு, தமிழ் இனப்படுகொலையின் குற்றவாளியான இலங்கை அரசு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அனுமதிக்கும் வழிகளை உருவாக்குகின்றன.
குறிப்பாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இனப்படுகொலையை கூட்டாக அங்கீகரித்த அதே நாடாளுமன்றத் கட்டிடத்தில், பேரவையின் நிகழ்வு நடைபெறுவது குறிப்பாக கவலைக்குரியது. இந்நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனேடியர்கள், மற்றும் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை தெரிவிக்கிறது என நாம் ஒரு சமூகமாக கேள்வி எழுப்ப வேண்டும்.
நாம் சமூகமாக தொடர்ந்து முன்னேற்றி வரும் விடயங்களை பேரவையின் இந்த அணுகுமுறை பின் நகர்த்துகிறது.
எனவே, இந்த ‘முக்கியமான விடயங்கள் தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான உரையாடல்களை அதிகரிக்கவும், ‘சமூக மன்றம்’ நிகழ்வுக்கு நீங்கள் சமூகமளிப்பதும், அதில் உங்களது பங்கேற்பும் மிக அவசியமானது என்பதை தயவுடன் வலியுறுத்துகிறோம்.
இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீதிக்காக வாதிடுவதற்கும் உங்கள் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
May 5 ஆம் திகதிக்குள் (+1) 647-560-7013 அல்லது
canadiantamilcollective@gmail.
ஆகிய வழிமுறைகளில் உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.
உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
உண்மையுள்ள,
கனேடியத் தமிழர் கூட்டு