ஈழத்தமிழன்(கனடா)
01.05.2024
தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துள்ள நாடு கனடா, அதே போன்று இலங்கை இந்திய சக்திகள் பெரும் நிதி வளத்துடன் தேசத்துரோகிகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள நாடும் கனடாதான், இங்கு நடக்கும் கோமாளிக் கூத்துக்களிற்கும் அளவில்லை.
நாடுகடந்த தமிழீழ அரசை(TGTE) தங்கள் கைவசம் கொண்டு வர முடியவில்லையென்ற காரணத்தால், வருடம் 2011இல் முன்னாள் புளொட் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் SLFP கட்சியின் தீவிர ஆதரவாளரான “பனங்காட்டான்” தலைமையில், உருவான “TGTE – ஜனநாயக அணி” கானநீர் மாதிரி, காணாமல் போன வரலாறு,
வரும் மே மாதம் 18ம் திகதி முன்னாள் புளொட் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் முன்னாள் TEA உறுப்பினர் தலைமையில், “TGTE – ஜனநாயக அணி(கனடா)” என்ற பெயரோடு திரும்பவும் வேதாளங்கள் முருங்கை மரத்தில் ஏறப் போகின்றார்களாம்.
அதில், மொத்தமாக 25 உறுப்பினர்களாம் 15 பெண் உறுப்பினர்கள் மற்றும் 10 ஆண் உறுப்பினர்களாம்.
இதில், கவலைக்குரிய விடையம் என்னவென்றால், சிங்கள பேரினவாத சக்திகளோடு மறைமுகமாக நட்புறவுகளை வைத்திருக்கும் ஒரு சிலர், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசை முழுமையாக அழிக்க ஆசைப்படுகின்றார்கள். ஆனால், அவர்களின் கனவு ஒருபொழுதும் நிறைவேறாது !!!!
TGTEக்குள் சில தவறுகள் இடம்பெற்றுருந்தால், அதை எம்மவர்கள் மட்டுமே திருத்த வேண்டும். அதை விட்டிற்று சிங்கள பேரினவாத சக்திகளின் வலைக்குள் அகப்பட்டு, அவர்களின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களிற்கு ஆதரவாக I phone இல் ஊடகம் என்ற பெயரில் போத்தல் பிரியாணியுன் $75 டொலருக்கு ஊடகம் நடத்தும் ஒரு சில கனடியத் தமிழ் ஊடகங்களும் மற்றும் தமிழீழ தேசியவாதிகளும் என்னவென்று தெரியாமலே இவர்களுடன் சிக்குண்டுள்ளனர்.
இந்தியாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசை இல்லாமல் செய்வதற்காக கை நீட்டிய நிமால் விநாயகமூர்த்தியும் இலங்கை அரசிடம் கை நீட்டியதற்காக நாரயனதாஸ் என்ற கோமாளியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் சொல்லவே தேவையில்லை.
நிமால் விநாயகமூர்த்தி இந்திய RAW வை தனியாக சென்று சந்தித்ததாக அவருடன் நெருக்கமாக உள்ளவர்களிற்கு தெரிவித்ததற்கான ஆதாரங்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளாடுகள் ஒழிக்கும்வரை வேட்டை தொடரும்——
ஈழத்தமிழன்