கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கை இந்திய புலனாய்வுடன் மற்றும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான நிமால் விநாயகமூர்த்தி உட்பட வேறு சிலரும் அடையாளம் காணப்பட்டு நீண்ட விசாரணையின் பின்னர் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டதாக அறியப்படுகின்றது.
கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இந்திய புலனாய்வுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பலர் தற்போதைய தேர்தலிற்காக களத்தில் இறக்கப்பட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலை குழப்புவதுடன் உடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக மேலும் எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் தாம் பெற்ற பணத்திற்காகவும், சலுகைகளுக்காகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஊடக தர்மம் அற்று, தமிழ்த்தேசிய பார்வை அற்று நட்சத்திர களியாட்ட விழாவை நடாத்தும் கழுத்தில் கமராவை தொங்கவிட்டுக்கொண்டு திரியம் ஊடக நண்பர்களூடாகவும் விசமச்செய்திகளை பரப்புரை செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எம்மையும் சிலர் கனடா இலக்கத்தை உடைய இன்டர்நெட் தொலைபேசி மூலம் அணுகி பணத்தாசை காட்டி செய்தி போடுமாறு கேட்டுள்ளனர் அவர்களிற்கு தகுந்த பதில் இனி தொடர்பு கொள்ளா வண்ணம் கொடுத்துள்ளோம்.
ஐரோப்பாவின் ஜேர்மனியில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புள்ள ஐந்து நபர்கள் வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கான கட்டுப்பணத்தை சிங்கள வர்த்தக நிலையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தொடர்புகள், சிங்கள கைக்கூலியின் தொடர்புகள் இனம்காணப்பட்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
மேலதிக விபரங்கள ஆய்வின்பின்னர் தொடரும்.
அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஆயுதப்போராட்டம் ஓய்ந்த பின் மீண்டும் எமது தாயக விடுதலைக்காக போராடுவதாயின் அரசியல் போராட்டமாக மாற்றுவதும் 1990 ஆரம்பித்த எம் நிழல் அரசு 2002 ம் ஆண்டில் நிஜ அரசு போல் இராணுவ சமநிலையை உலகிற்கு காட்டியதையும் போர்நிறுத்த கண்காணிப்பினரால் இரு தரப்பின் நிலம், கடல் , வான் எல்லைகளை நிர்ணயம் செய்தது மறக்க முடியாத ஒன்று. இந்தியா மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பிராந்திய நலன் போட்டியில் 2009ல் எமது இயக்கத்தின் ஆயுத பலம் மட்டும் அழிக்கப்பட்டது. இதன் பின் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரிதும் எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டது. இதன் பின் தோன்றிய அமைப்புக்கள் அல்லது முன்பிருந்த அமைப்புகள் சிங்கள அரசால் திட்டமிட்டு உடைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் இம்முறை உடைப்பதற்கு முயற்சி நடக்கின்றது, இதனால் இம்முறை தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகின்றது.
தேர்தல் ஆணையம் கனடா வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் :