இளங்கோ – கனடா
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் PLOT அமைப்பின் உறுப்பினர் நிமாலின் வேட்பு மனு நிராகரிப்பு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது பாராளுமன்றத்திற்கான அரசவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விண்ணபித்தவர்கள் சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இவர்கள் மீது பொது மக்களால் தேர்தல் ஆணையத்திற்கு பல முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாகவும், அதனை ஏழு பேர் அடங்கிய தேர்தல் ஆணையாளர் குழு ஆய்வுக்கு எடுத்தது. அதன்பின்னர் சிலர் தேர்தலில் நிற்பதற்குரிய தகுதியற்றவர்களென தேர்தல் ஆணையக் குழுவினால் முடிவு செய்யப்பட்டு இவர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
இதில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூரத்தியின் வேட்பு மனுவும் அடங்கும், இவர்மேல் நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் முறைப்பாடு செய்துள்ளார்களென பொதுவெளியில் சில குழுமங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அவையாவன இவர்மேல் நிதி மோசடி, நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்பதற்காக குழு அமைத்து செயற்பட்டார், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மீது அச்சுறுத்தல் விடப்பட்டு பலர் வேட்பு மனுவை மீளப் பெறுவதற்காக காரணமாக இருந்தார், தேசியத்துக்கு எதிராக செயல்படும் அன்னிய சக்திகள், அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், மற்றும் தமிழரின் தேசியக்கொடிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இவருடைய செயற்பாடுகள் இருந்த்தாகவும் பலர் தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டாதாகவும், அதனை அடுத்து ஏழு பேர் கொண்ட குழுவின் முன் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பால் தடை செய்யப்பட்ட PLOTE அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்ததோடு, தொடர்ந்தும் அவர்களுடனும் , இலங்கை இந்திய புலனாய்வத்துறையுடனும் நெருக்கமான உறவை பேணிவருவதாக அவருடன் நெருக்கமானவர்கள் கூறியதோடு இவரை நாடு கடந்த தமிழீழ அரசில் தம்பியின் தியாகத்தால் உள்வாங்கி குழப்பங்கள் ஏற்படுத்தியமைக்கு கடந்த கால நிபுணர்கள் விளக்கம் சொல்ல வேண்டும்.
தற்போது இவர் கனேடியத் தமிழ் ஊடகம் என்ற பெயரில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொலைபேசி எண் வாங்கி அந்த எண்ணை பயன்படுத்தி ஊடகம் என கூகிளிலும் தேடி கிடைக்காத ஊடகத்தை தான் பயணித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும், தேர்தல் ஆணையத்தை யும் விமர்சித்துக் கொண்டு, மன உளைச்சலில் இருப்பதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துக்கொண்டு வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர் அங்கேயும் அவர் மனநோயாளி போல் மேசையில் அடித்து கத்துவதாகவும் எனவே நல்ல மருத்துவரை இந்தியா போய் பார்க்க வேண்டும் என்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் போட்டியாளர்களின் பெயர் விபரங்கள் உத்தியோக பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை, தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்து கொண்டிருப்பதாகவும், வேட்பாளர்களின் மனுக்கள் தொடர்சியாக ஆய்வுக்கு உட்படுத்தி வருவதால் ஒரு சில நாட்கள் தாமதமாகத்தான் தேர்தல் ஆணையத்தால் உத்தியோக பூர்வமாக போட்டியாளர்களின் விபரங்கள் வெளிவருமென தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தற்பொழுதுதான் சரியான முறையில் தேர்தல் ஆணையகம் உலகம் முழுவதும் வேலை செய்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்து பிரித்தானியாவில் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் ஜேர்மனியில் கூட்டாக சிங்கள பின்னணியில் 5 வேட்பாளர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அங்குள்ள ஆணையம் இது பற்றி அடுத்த செய்தி….
வளரும்…