04.03.2024
லாலா ( நோர்வே )
கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம் எம்மிடம் சிக்கியுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகளே.
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம் எம்மிடம் சிக்கியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க நபரை அடையாளம் காட்டுகிறோம்.
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) பொறுப்பாளர்
ஆபிரகாம் லிங்கன் விஜயராஜ் என்பவரே அவராவார். குறித்த நபர் சிறிலங்காவின் அரச பிரதானியாக வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமைக்கான ஆதாரங்களே கீழே இணைக்கப்பட்டுள்ளன
சிறிலங்காவினால் அரச மதிப்பளிப்பு வழங்கப்படும் நபர்களும், அரச விருந்தாளிகளாக அழைக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே இவ்வாறான நடன வரவேற்பு வழங்கப்படும்.. அத்தோடு சிறிலங்காவின் பன்னாட்டு வானூர்தித்தளத்தின் பிரமுகர் பயணப்பாதை (VIP) வழியினூடாக இவர்கள் வரவேற்கப்பட்டிருப்பது நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறது.
நோர்வேயின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது (TCC) ஓர் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். அதன் பதிவில் இன்னமும் விஜயராஜ் என்பவர் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஆதாரத்தையும் இணைத்துள்ளோம்.
தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்குள் இருந்தபடியே, சிறிலங்கா அரச தரப்புடன் இவர்கள் கொண்டிருந்த “முறையற்றதொடர்பு” வெளிச்சத்திற்கு வந்ததன் பின்னணியில் பல கேள்விகளுக்கான விடைகளும், ஆச்சரியங்களும் இனிவரும் நாட்களில் அனைவருக்கும் புரியக்கூடும்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களில் உங்களுக்கு தெரிந்த வேறுநபர்கள் யாராவது இருப்பின் வெளிப்படையாக மக்களுக்கு அறியத்தருமாறு வேண்டுகிறோம்.





