03.03.2024
கருங்குருவி (லண்டன்)
தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி!
தாயகத்தில் இன அழிப்பு செய்த அரசியல் தலைமைகளை தாங்கி நிற்கும் சில முன்னாள் போராளிகள்,
தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் உட்பட அவருக்கு ஆதரவான இனப்படுகொலையாளிகளையும் அதற்கு துணை போனவர்களையும் பதவியில் இருத்துவதன் மூலம் சர்வதேச விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் இதனுள் அடங்கியுள்ளது.
பெரும் நிதிப்பலத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பு மிகவும் வேகமாக நாசகார செயல்களை இயக்கி வருகின்றது. இதற்காக போர்க்காலத்தில் செலவு செய்ததை விட பலமடங்கு பணத்தை செலவு செய்து வருகின்றது. இதற்காக சில முன்னாள் போராளிகளையும் சில தளபதிகளையும் பயன்படுத்துவதோடு, புதிதாக தளபதி-ராம் (மட்டக்களப்பு ) ஐரோப்பாவிற்கும் தளபதி-நகுலன் (யாழ்ப்பாணம்) கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இறுதி யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காட்டிற்குள் இருந்து தாம்தான் விடுதலைப் புலிகளை இயக்கி வருவதாக ஊடகங்களிற்கு செவ்வி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி வசூல்(நிதி) சேகரிப்பில் ஈடுபட்டதையும் நினைவூட்டுகின்றோம்.
மற்றும் தேசியத் தலைவரின் டென்மார்க்கில் வசிக்கும் சில உறவினர்களையும் இதற்காக தயார்படுத்தியுள்ளனர். எமக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததன்மூலம் கிடைத்த தரவுகளை வரிசைப் படுத்தியுள்ளோம். எம் இனத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உங்களிடம் உள்ள தரவுகளை எங்களிற்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டுகின்றோம்.
1.இலண்டனிலும் ஐரோப்பாவிலும் பல வியாபார நிறுவனங்கள் முன்னாள் போராளிகள் என்று தம்மை தாமே கூறிவரும் சிலரின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இனப்படு கொலையாளிகளினால் பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வியாபார நிலையங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்களை செய்வதோடு தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புதல், மேலும் பல போராளிகளை உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம், அமைப்புக்களிற்குள் ஊடுருவி அமைப்புக்களை உடைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றனர். குறுகிய காலத்திற்குள் தொழிலதிபர்களான இந்த முன்னாள் போராளிகள் குறுகிய காலத்திற்குள் எப்படி தொழிலதிபர்களாவது என்று பொதுவெளியில் வந்து கூறத்தயாரா? என்ற கேள்வியும் மக்களிடம் உள்ளது. விழிப்புடன் இருப்போம்.
2.இலங்கை இந்திய அரச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் லண்டனில் தொடர்ச்சியாக இரகசியமாக நடைபெற்று வருகின்றது. இத்தொழிலதிபர்கள்தான் தேசியத்திற்கு எதிரான செயற்திட்டத்திற்கு முள்ளந்தண்டாக செயற்படுகிறார்கள். இவர்களின் சந்திப்புக்கள் வியாபார நிலையங்களிலும், அதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரகசிய கூடங்களிலும் நடைபெறுகின்றது. கடந்த சில வாரங்களாக தொடர்சியான சந்திப்புக்கள் நடைபெற்றுவருவதாக அறியப்படுகின்றது. அண்ணாமலையில் ஆரம்பித்து இது தொடர்கின்றது. விழிப்புடன் இருப்போம்
3.மே மாதம் 2009 இல் இறுதிப்போரில் பல காட்டிக் கொடுப்புக்களையும் பல போராளிகளின் இறப்புக்கும் காரணமானவர்கள் பலர் இன்றும் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து லண்டனில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இவர்கள் துரோகி கருணாவின் வளர்ப்பு நாய்கள். கருணாவின் துரோகத்திற்கு பின்னர் துரோக செயலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்களை தலமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக அவர்களை குருவி சுடுவதுபோல சுட்டுத்தள்ளியவர்கள், இதனை நேரில் கண்ட சாட்சிகள் இன்றும் சாட்சியாக உள்ளார்கள். இந்த செல்லப்பிள்ளைகளை மேலும் பலப்படுத்துவதற்காக சில வாரங்களிற்க்கு முன்னர் இந்திய இலங்கை அரசுகளால் தேவன், ராமர்(ராம்) தலைமையில் இரண்டு குழுவினர் லண்டனிற்கும் சுவிஸ் நாடுகளிற்கும் நகுலன் தலைமையில் ஒரு குழுவினர் வட அமெரிக்க, கனடா ஆகிய நாடுகளிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பறந்து பறந்து பல முன்னால் போராளிக்களை சந்தித்து மனம்மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்பளும் இவர்களின் வேலைத்திட்டங்களிற்கும் உதவி செய்பவர்களும் தேசத்துரோகிகளாகவே பார்க்கப்படுவார்கள், போராளிகள், மக்கள் விழிப்புடன் இருக்கும்படி கேட்கபடுகின்றார்கள். விழிப்புடன் இருப்போம்
4.தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு செய்வதற்கான முயற்சிகள். இந்நிகழ்வை பொருத்தமற்ற நிகழ்வாக செய்து தேசியத்தலைவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முன்னகர்வுகளை செய்வதற்காக டென்மார்க்கில் வசிக்கும் உறவினர்களை இந்த லண்டன் தொழிலதிபர்கள் தயார்படுத்தியுள்ளனர். இவ் உறவினர்கள் தலைவரின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தவர்கள் என்பதனையும் நினைவூட்டுகின்றோம்., போராட்டங்களில் 2009 இற்கு முன்னரும் 2009 இற்கு பின்னரும் தேசிய நிகழ்வுகளில் பங்கேற்காதவர்களும் தேசியத்தலைவரினால் இவர்களின் செயல்பாடுகளிற்காக எச்சரிக்கப்பட்டவர்களையும் வைத்து உரிமை கொண்டாட நினைப்பதுதான் வேடிக்கையாகவுள்ளது.
தேசியத்தலைவர் உலகிற்க்கே தமிழினத்தின் வீரத்தை அடையாளப்படுத்தியவர். இவர் தேசத்தின் சொத்து இவரை சொந்தம் கொண்டாடவோ, இவர் இருப்பு பற்றி பேசுவதற்கோ யாருக்குமே தகுதியில்லை. என்றும் உலகத்தமிழ் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவர் ஒருவர் என்றால் தேசியத்தலைவர் மட்டுமே, மொத்த தமிழினத்தின் உணர்வுகளில் கை வைப்பதும் தன்கண்ணில் தாமே ஈட்டியால் குத்துவதும் ஒன்றே!
தேசியத்தலைவருக்கு வீரமரண நிகழ்வு நடத்தியதன் பின்னர் ஒருசிலர் தம்மை விடுதலைப்புலிகளின் தலைவராக அறிவிப்பதற்கான வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, இதன்மூலம் விடுதலைப் புலிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களிற்கு தலமை இருக்கின்றதெனக்காட்டி உலகநாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதும்
இலங்கையில் இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதோடு அவர்களின் அதிகாரத்தை தக்க வைப்பதும்
தமிழருக்கு நடந்த இனப்படுகொலையை மழுங்கடிப்பதற்கும் தமிழருக்கான அமைப்புக்களை உடைத்து சிதைப்பதும்,
தமிழரின் விடுதலைக்கான நிரந்தர தீர்வு கிடைக்காமல் செய்வதற்குமான வேலைத்திட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.
இதன்மூலம் இலங்கையின் பூகோள அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் சக்திகளும் பயனடைவார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது. இனிமேல்தான் மொத்த தமிழினமும் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
தமிழினத்தின் தலைவன் ஒருவர்தான் அவரே மேதகு வே.பிரபாகரன் அந்த பெயரை சொல்வதற்குரிய தகுதியும் அந்த இடத்திற்கு வருவதற்கும் முன்னாள் தளபதிகள் உட்பட யாருக்கும் தகுதியில்லை.
தமிழருக்கான தீர்வை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டுமாயின் தேசியத்துடன் இணைந்து இயங்கும் அமைப்புக்கள் யாவும் விரோதங்களை விட்டு இணைந்து கூட்டுத்தலமையை உருவாக்கி தமிழ் தேசியம் நோக்கி பயணிக்க வேண்டுமென்பதே பல செயற்பாட்டாளர்களினதும் மக்களினதும் கருத்தாகவுள்ளது. விழிப்புடன் இருப்போம்
உங்கள் கருத்துக்களை உங்களின் பெயர், தொடர்பு இலக்கங்களுடன் எமக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தால் தேசம் இணையத்தில் பகுப்பாய்வு செய்து பதிவிடப்படும்.
(நீங்கள் அனுப்பும் பதிவுகளிற்கு தேசம் இணையத்தளம் பொறுப்பேற்காது)