கனடா வாழ் தமிழர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்களா?
கனடா பிராம்டன் நகரில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் சாட்சியாக கட்டப்படவிருந்த நினைவு தூபி பற்றிய ஆய்வு கட்டுரை 30.09/2023 அன்று தேசம் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டு அதன் பின்னர் நினைவு தூபி கட்டுவதில் உள்ள சவால்கள் பற்றியும் எழுதி இருந்தோம், அதனை மேலும் சிக்கலாக்கும் வேலையையும், பெயரளவில் சிறியதாக எதையாவது கட்டுவதற்கு இனப்படுகொலையாளிகளோடு உறவு கொண்டாடும் சில ஈனப் பிறவிகள் மீண்டும் வேலையை ஆரம்பித்துள்ளனர். இது பற்றிய ஆவணங்கள் படங்களுடன் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனமே பிராம்டன் மாநகரசபையாலும் தமிழ் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட நினைவு தூபியில் மக்களை புறம்தள்ளி மாற்றத்தை ஏற்படுத்த பிராம்டன் நகரசபைக்கும் தேசியத்தை சிதைக்க துணை நிற்கும் ஈனப்பிறவிகளிற்கும் யார் அதிகாரம் கொடுத்தது? இவர்கள் CTC,GTF இன் பங்காளிகளா? இவர்களும் CTC, GTF போன்று மக்களிடமிருந்து தூக்கியெறியப்பட வேண்டியவர்கள். இவர்களும் துரோகிகளே. பொது சொத்துக்களை தம்வசப்படுத்தி வைத்திருக்கும் இத்துரோகிகள் அடுத்த கொள்ளைக்கு தயாராகி வருவதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எமக்கு அனுப்பி கனடாவில் இருந்து சில பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்ட பதிவினையும் இணைத்துள்ளோம்.
திகதி: 27 / 02 / 2024
கனடாவில் வரவிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி !!! இந்த படம் 1 இன் வடிவமைப்பை உருவாக்க Brampton நகரத்தின் வாழும் தமிழர்களின் அமைப்பும்(BTA) மற்றும் தமிழ் முதியோர் அமைப்பும் (BTSA) சேர்ந்து கனடாவில் உள்ள பல தமிழ் அமைப்புகளின் நிதி உதவியோடு கொண்டு வரவிருந்த திட்டத்தை Brampton நகரசபை நிறுத்தி, கனடாவில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களால்(WTM), அவர்களின் பினாமி அமைப்பான NCCTயினரும் மற்றும் Brampton நகரசபையில் பணமோசடி செய்து வரும் அரசியல் மாமாக்களும் செய்யும் அம்புலிமாமா திட்டம் தான், இந்த படம் 2 என்ற நினைவுத்தூபி வடிவமைப்பு ! Brampton நகரசபையில் WTM & NCCT அமைப்பினரை வைத்து பண அரசியல் வியாபாரம் செய்து வரும் Patrick Brown & teamக்கு, எது எப்படி நடந்தாலும் 10% தரகுப் பணம் தங்களிற்கு கிடைத்தால் காணுமென்ற வியாபாரம் மட்டுமே ! எந்தவொரு செலவுமில்லாமல் இந்த படம்2 இல் உள்ள வடிவமைப்பை கட்டுவதற்கு ஒரு மேஸ்திரியும்(WTM), ஒரு முட்டாளும்(NCCT) மற்றும் ஒரு “அடி முட்டாள் மேற்பார்வையாளரும்”(நகரபிதா) இருந்தால் காணும் ! இந்த படம்2 வடிவமைப்பு கனடிய காலநிலைக்கு உகந்ததல்ல, அடிக்கிற snowவிற்கு காணாமல் போய்விடும் மற்றும் தமிழீழத்தின் படத்தை வைத்தால் இலகுவாக மக்கள் ஏமாந்து விடுவார்கள், இலகுவாக பண வசூல் செய்ய முடியுமென்ற நரித் தந்திரம். இது தான் சொல்வது WTM அமைப்பில் இருக்கும் சில முட்டாள்களால் இவ்வளவு தான் சிந்திக்க முடியும். *** குறிப்பு: Brampton நகரசபை மற்றும் WTM வியாபார டீல்கள் ஆதாரங்களோடு உள்ளது 🙂
Attachment 1-Tamil Genocide Monument Rendering
Agenda Package – CC_Feb28_2024
இப்படிக்கு,
நாம் கனடிய ஈழத்தமிழர்கள்.
30.09/2023 அன்று தேசம் இணையத்தளத்தில்
தமிழின அழிப்பு நினைவாலயம் வெளிநாட்டு தலையீட்டால் சவால் நிலையிலா..!